Header Ads



ஈரானுக்கு வருமாறு பொதுபல சேனாவுக்கு அழைப்பு



(Sfm) ஈரானுக்கு விஜயம் செய்வது தொடர்பில் எதிர்வரும் தினத்தில் தீர்மானிக்கப்படும் என்று பொதுபல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது. அமைப்பின் பிரதானி கிரம விமலஜோதி தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலங்கைக்கான ஈரான் தூதுவர் மொஹமட் பைசல் ரசீன் தமது பிரதிநிதிகளுக்கு ஈரான் வருமாறு அழைப்பு விடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஈரானில் புத்தர் சிலைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் வெளியான செய்தி தொடர்பில் நேற்று இலங்கைக்கான ஈரான் தூதுவருக்கும் பொது பல சேனா அமைப்பினருக்கும் இடையே  இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே தூதுவர் இந்த அழைப்பை விடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 comment:

  1. இங்கே உங்களிருவருக்கும் உள்ள கள்ளத் தொடர்பை நாங்கள் அறிந்த விட்டோம் என்பதாலா? நீங்க கதை அளப்பீர்களாம். நாங்க அத நம்போனுமாம்.

    ReplyDelete

Powered by Blogger.