Header Ads



ஜம்மியத்துல் உலமா சபைக்கு பகிரங்க எச்சரிக்கை

ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையை அரசாங்கம் பொறுப்பேற்கக் கூடாது. ஹலால் சான்றிதழை வழங்கி நாட்டில் மதவாதத்தினைப் பரப்பி வந்த உலமா சபைக்கு அரசாங்கம் துணை போகக்  கூடாது  என பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் வண. கலபொட ஹத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். 

கொழும்பு 5 இல் ஸ்ரீ  சம்புத்தத்வ ஜயந்தி மாளிகையில் புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர்  சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு, இந்நாட்டில் வேறு மதச் சட்டங்களுக்கு ஒரு போதும் இடமளிக்க மாட்டோம். ஹலால் சான்றிதழானது  ஷரியா சட்டத்தின் கீழ் உள்ள ஒரு முறைமையாகும். நாட்டில் ஒரு சட்டமே நடைமுறையில் இருக்க வேண்டும். அது அந்நாட்டின் சட்டமாக மட்டுமே இருக்க வேண்டும்.அதனால்,  ஷரியா சட்டத்தின் கீழ் உள்ள ஹலால் சான்றிதழ் வழங்கும் முறையை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம். 

அது மட்டுமல்லாது ஹலால் சான்றிதழ் வழங்கும் செயற்பாட்டின் மூலமாக அகில இலங்கை ஜம்இயத்துல் உலமா, நாட்டில் பிரிவினை வாதத்தினையும் மதவாதத்தினையும்  பரப்பி வந்தது. ஹலால் தொடர்பான பிரச்சினை மேலெழும்பியவுடன் தாம் செய்துவந்த மதவாத நடவடிக்கைகளுக்கு அனுசரணை தேடிவருகின்றது. அதனாலேயே ஹலால் சான்றிதழ் வழங்கும் நடவடிக்கையினைப் பொறுப்பேற்றுக் கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு ஜம்இயத்துல் உலமா சபை வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது. 

உலமா சபையின் மோசமான இந்நடவடிக்கைக்கு அரசாங்கம் ஒருபோதும் துணைபோகக் கூடாது.

அத்துடன், அண்மைக் காலங்களில் உலமாக்கள் சபையானது பொதுபலசேனா அமைப்பினை மதவாத அமைப்பு என விமர்சித்து வந்ததுடன், பிக்குகளின் மத நடவடிக்கைகளையும் மிக மோசமாகக் கண்டித்து வந்தது. உலமாக்கள் சபையின் இந்நடவடிக்கைகளை பொதுபல சேனா அமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. 

அதுமட்டுமல்லாது இலங்கை தேசிய கீதத்துக்கு பிக்குகள் எழும்பி மரியாதை செலுத்துவதில்லை என உலமாக்கள் சபை குற்றச்சாட்டொன்றினை முன்வைத்திருந்தது. 

எமது சமய நடவடிக்கையில் தலையிடுவதற்கு  உலமா சபைக்கு  எவ்வித அதிகாரமும் இல்லை. அத்துடன், எம்முடன் மோதுவதற்கு உலமாக்கள் சபை முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு மோதினால் உலமாக்கள் சபை பின்விளைவுகளை எதிர்நோக்கவேண்டியிருக்கும் எனவும் தெரிவித்தார்.

9 comments:

  1. நாம் ஹலாலுக்கு எதிர் இல்லை. உலமா சபையினர் இதனை கையாள கூடாது. இதன் பணத்தை தீவிரவாத அமைப்புக்கு அனுப்புகிறார்கள். என்றாரார்கள். இப்போது ஜம்மியத்துல் ஹலால் வழங்கும் வேலையை அரசாங்கம் பொருபெடுக்க சொன்னால் தாளத்தை மாத்தி போடுகி றீர்கள்
    நீங்கள் மாமிசம் உண்பதில்லை என்பதில் உறுதியாக இருந்தால் நீங்கள் உண்ணும் உணவில் மாமிசம் கலவாமல் பார்த்து கொள்வீர்களா ?யோகட். ஐஸ் க்ரீம் .மற்றும் பல உணவுப் பொருட்களில் மாமிச எண்ணையினால் செய்ய படுகின்ற ஜெலட்டின் கலந்த உணவுப் பொருட்கள் உள்ளன. நீங்கள் ஐஸ் க்ரீம் தன்சல் செயகரீர்கள் அதில் ஜெலட்டின் உள்ளது.அது மிருக கொழுப்பில் செய்ய பட்டதா? அல்லது .தாவர கொழுப்பில் செய்ய பட்டதா என்பததை பற்றி அறிவது எங்களுக்கு மட்டுமான கடமையல்ல .உங்களுக்கும் தான் . .ஹலால் என்பது உங்களுக்கும் பொருத்தமான சான்றிதழ் தான்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. கிள்ளியும் விட்டு தொட்டிலும் ஆட்டும் மிருகங்களே, உங்கள் சொந்தவேலைகளை நீங்களே பாருங்கள் உங்கள் சுயதேவைக்காக எமது கண்ணியமான முஸ்லிம் சமுதாயத்தை பாவிக்கவேண்டாம் இனவெறியர்களே, பொதுபல சேன பயங்கரவாதிகளையும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவையும் நினைக்கும் போது மனவேதனையாக இருக்கின்றது அதேவேளை, இந்த இனவெறியர்களின் உள்னோக்கம்தான் என்ன என்பதை வெளிப்படையாகசொல்ல பயப்படும் காரணம் என்ன, இந்த இனவெறியர்கள் பொறாமை காரணமாக தமிழர்களின் உரிமைகளையும் உணர்வுகளையும் உடமைகளையும் சின்னாபின்னப்படுத்தியது போதாதா.. அக்கிரமக்காரர்களே!!! இப்படி நேற்று தமிழர்கள் இன்று முஸ்லிம்கள் நாளை கிறிஸ்தவர்கள் என்று பிற இனச்சகோதரனுடன் சண்டை போடுவதுதான் உங்கள் நிலைப்பாடா??? ஏன் இந்த காடைத்தனம்?? ஏன் இந்த இனவெறித்தனம்??? ஏன் இந்த பொறாமைத்தனம்??? இப்படியே சகோதர இனத்தோடு சண்டையிட்டுக்கொண்டிருந்தால் உங்கள் இனத்தவர்களின் முன்னெற்றம் பற்றி யோசிக்கமாட்டீர்களா??? நீங்கள் யோசித்தால்தானே இப்படியெல்லாம் நடக்காது, இருப்பினும் படிப்பறிவில்லாதவனுக்கு படிப்பை கற்றுக்கொடுக்கச் சொல்லும் மார்க்கம்தான் இஸ்லாம், இறைவன் எங்களுக்கு அல்-குர் ஆன் மூலம் இறைத்தூதர் ஹஸரத் முஹம்ம்து நபி ஊடாக எங்களுக்கு சொல்லித்தந்தவை இது மட்டுமல்ல இன்னும் எத்தனையோ உள்ளன,, இவை என்னவென்று நீங்களும் தெரிந்து கொள்ளுங்கள், ஏன் முஸ்லிம்கள் இவ்வளவு உறுதியாகவும் நம்பிக்கையுடனும் உள்ளார்கள் என்று உலகத்தில் எத்தனையோ பெரும் தலைகள் இஸ்லாம்தான் உண்மை, எளிது சத்தியமார்க்கம் என்று ஆயிரக்கணக்கானவர்கள் இஸ்லாத்தை தளுவிவருவதை நீங்கள் பார்க்கவில்லையா??? ஏன் இப்படி இஸ்லாத்திற்குள் இவர்கள் நுளைகின்றார்கள் என்று நீங்களும் சற்று தெரிந்துகொள்ளுங்கள்.... இன்று எத்தனையோ மொழிகளில் அல் குர் ஆன் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது பார்த்து தெரிந்துகொள்ளுங்கள், தயவு செய்து இதை பிற இன மொழி தெரிந்தவர்கள் முடியுமானால் மொழிபெயர்த்து மற்றவர்களூக்கும் எமது உண்மைகளை தெரிவு படுத்துங்கள்... இதைவிட நல்லமுறையில் சொல்லவேண்டுமென்று எண்ணினால் அப்படியே ஆகட்டும் ஆனால் யாராவது இப்பணியை செய்யுங்கள்...

    ReplyDelete
  4. WE DON'T CARE ABOUT YOU MY DEAR BODU BALA SENE AND THE LEADERS. DO WHAT EVER YOU WANT, SAY WHAT EVER YOU WANT, WE DON'T CARE,,,,

    ReplyDelete
  5. BOSS! மிச்சம் துள்ளாதெங்க!

    ReplyDelete
  6. when they eat free food they will look halaal haraam salt, sweet, taste stop the free for for monk then they will understand innocent feeling

    ReplyDelete
  7. summanka ponka therar film kattama

    ReplyDelete
  8. தண்ணியப் போட்டுத்தான் பேசுவானோ இவன்.....

    ReplyDelete
  9. It's not appropriate to publishing the comments which contain rude words. It's not only violating the media ethics but also our Islamic Identity.

    ReplyDelete

Powered by Blogger.