Header Ads



ஒஸாமா பின்லேடன் வாழ்ந்த வீடு பொழுது போக்கு பூங்காவாகிறது

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து 120 கி.மீட்டர் தூரத்தில், அமைந்துள்ள நகரம் அபோட்டாபாத். பாகிஸ்தான் அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் வசிக்கும் அபோட்டாபாத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்த அல் கொய்தா இயக்க தலைவன் ஒசாமா பின்லேடன், கடந்த 2011ம் ஆண்டு அமெரிக்க ராணுவத்தின் 'சீல்' அதிரடிப்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். 

இந்த சம்பவத்துக்கு பிறகு உலக நாட்டினரின் கவனத்தை ஈர்த்துள்ள அபோட்டாபாத் நகரில் மாபெரும் பொழுதுப் போக்கு பூங்கா ஒன்றை அமைக்க கைபர் மாகாண அரசு திட்டமிட்டுள்ளது. 

இது தொடர்பாக நிருபர்களிடையே பேசிய கைபர் மாகாண சுற்றுலா மற்றும் விளையாட்டு துறை மந்திரி சையத் அக்வில் ஷா கூறியதாவது,

சர்வதேச சுற்றுலா வாசிகளை கவரும் விதமாக அபோட்டாபாத்தில் பிரமாண்ட பொழுதுப்போக்கு பூங்கா அமைக்கப்படும். முதல் கட்டமாக 50 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்படும் இந்த பூங்கா, படிப்படியாக 500 ஏக்கருக்கு விரிவுப்படுத்தப்படும். 

ஒசாமா பின்லேடன் வாழ்ந்த வீடு இடிக்கப்பட்டு விட்டது. ஆனால், இந்த பூங்கா அந்த இடத்தில் அமைக்கப்பட்டாது. இந்த பொழுதுப்போக்கு பூங்காவுக்கும் ஒசாமா பின்லேடனுக்கும் தொடர்புப்படுத்திப் பார்க்கக்கூடாது. 

இந்த பூங்காவுக்குள் வனவிலங்கு காப்பகம், நீர் சறுக்கு விளையாட்டு, சிறிய கோல்ப் மைதானம், பாறை ஏறுதல், சிறிய விமானத்தில் பறப்பது போன்ற அனைத்து பொழுதுப்போக்கு அம்சங்களும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. 

No comments

Powered by Blogger.