மலையை ஏறி கடந்து வரும்படி என்னை ஆண்டவர் அழைக்கிறார்
உலகெங்கும் வாழும் கத்தோலிக்க கிருஸ்துவர்களின் தலைமை மதகுருவான 16ம் போப்
பெனடிக்ட் வரும் 28ம் தேதி தனது பதவியை ராஜினாமா செய்யப்போவதாக
அறிவித்தார்.
அவருக்கு மாற்றாக புதிய போப்பை தேர்ந்தெடுக்கும் பணியில்
வாடிகன் அரண்மனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில், பீட்டர் சதுக்கத்தில் இன்று
நடைபெற்ற வாராந்திர ஞாயிறு ஆராதனையில் 16ம் போப் பெனடிக்ட்
பங்கேற்றார்.
அவரது பதவி காலத்தில் நடத்தப்படும் கடைசி ஆராதனை இதுதான்
என்பதால் அதிகாலை முதல் லட்சக்கணக்கான மக்கள் பீட்டர் சதுக்கத்தில்
குவிந்தனர்.
'புனித தந்தையே உங்களை நேசிக்கிறோம்.' என்ற பதாகைகளை ஏந்தியபடி
ஆயிரக்கணக்கான மக்கள் போப்பை கண்டவுடன் உற்சாக மிகுதியால் கரவொலி எழுப்பி தங்களின்
அன்பையும் மக்ழ்ச்சியையும் வெளிப்படுத்தினர்.
ஆராதனைக்கு பின்னர் மக்களிடையே
பேசிய 16ம் போப் பெனடிக்ட் கூறியதாவது:-
மலையை ஏறி கடந்து வரும்படி என்னை
ஆண்டவர் அழைக்கிறார். இன்னும் அதிக அர்ப்பணிப்பு, ஜெபம், தியானத்தில் நான் ஈடுபட
போகிறேன். இதன் மூலம் பழைய அர்ப்பணிப்பு மற்றும் அன்பின் வாயிலாக எனது வயதுக்கும்
பலத்துக்கும் ஏற்றவகையில் சேவையாற்ற ஆண்டவர் என்னை அழைத்துள்ளார்.
இதனால்,
நான் தேவாலயத்தை கைவிட்டு விடுவதாக அர்த்தமல்ல. என்றென்றுமே நாம் நெருக்கமாக
இருப்போம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment