Header Ads



ஹலால் பிரச்சினையை ஏதோ ஓர் இடத்திலிருந்து யாரோ பெரிதாக்கி விடப்பார்க்கின்றனர்


நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள ஹலால் தொடர்பான சர்ச்சை ஒரு பாரிய பிரச்சினை இல்லையென ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது குறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள ஹலால் பிரச்சினை என்பது ஒரு பாரதூரமான விடயமல்ல. இது ஒரு சாதாரண பிரச்சினை. இப் பிரச்சினையை ஏதோ ஓர் இடத்திலிருந்து யாரோ பெரிதாக்கி விடப்பார்க்கின்றனர்.

இதேவேளை, சில நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு ஹலால் சான்றிதழ் தேவைப்படுகின்றது. இந்நிலையில் ஹலால் சான்றிதழ் இன்றி பொருட்களை எவ்வாறு ஏற்றுமதி செய்வது. இப் பிரச்சினை குறித்து பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை என அவர் மேலும் தெரிவித்தார். vi

5 comments:

  1. Thanks for ur information Sir

    ReplyDelete
  2. dear sir,
    அவர்களை கண்டு பிடித்து தண்டனை வாங்கி
    கொடூக்க வேண்டூம்
    Better to find out them to punished

    ReplyDelete
  3. இவர்களுக்கு ஏற்றுமதிக்காகத்தான் ஹலால் சான்றிதழ் தேவை முஸ்லீம்களின் உணர்வுகள் தேவையில்லை.

    ReplyDelete
  4. yaru pizza hut,coco cola,keels.

    ReplyDelete
  5. Yes, Mr.Rambukwella, you know where to butter very well!!!

    ReplyDelete

Powered by Blogger.