நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச்செல்ல உறுதிகொள்வோம் - ஜம்இய்யத்துல் உலமா
இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி
எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்சியடைகிறது.
கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு பல்வேறுபட்ட சவால்களை காலத்திற்கு காலம் சந்தித்து வந்துள்ளது.
மிகக்கொடூரமான யுத்தமொன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும், சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டுள்ள நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.
பௌத்தர்கள், முஸ்லிம்கள், ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு செழிப்புடனும், அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும், பிரார்த்தனைகளுமாகும்.
ஒரு நாட்டின் அபிவிருத்தியும், முன்னேற்றமும் அந்நாட்டு மக்களின் ஒற்றுமையிலும், நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதே எமது நம்பிக்கையாகும். அந்த வகையில் நாட்டுப்பற்றையும், சமூக, சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம்.
எனவே இந்நாட்டில் சௌஜன்யம், ஐக்கியம் சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக் கொடுப்பு, நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நல்லாசி கூறுகிறது.
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்
தேசிய பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
Please Let them to Publish this news in All Singhala & English News papers and as well as sent to All meadia in Sri Lanka.
ReplyDelete