Header Ads



உலமா கட்சியின் பெயர் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி என மாற்றம்


ஸ்ரீலங்கா முஸ்லிம் உலமா கட்சியின் பெயரை ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி என மாற்றியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் முபாறக் அப்துல் மஜீத் மௌலவி அறிவித்துள்ளார். 

27.2.2013 நடைபெற்ற கட்சியின் உயர் சபைக்கூட்டத்தில் இது விடயம் பேசப்பட்டு முடிவெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார். இது பற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது, 

கடந்த வருடம் 16.07.2012 அன்று தேர்தல் ஆணையாளருடனான தமது கட்சியினரின் சந்திப்பின் போது உலமா கட்சியின் பெயரில் உள்ள உலமா என்பது சமயத்தின் சின்னமாக கருதப்படுவதால் அதனை பதிவு செய்யும் பட்சத்தில் ஏனைய சமயப்பெயரிலான கட்சிகளையும் பதிவு செய்யவேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு ஏற்படும் என தேர்தல் ஆணையாளர் தெரிவித்ததாகவும், பெயர் மாற்றம் பெறும் போது பல வருடங்களாக அரசியல் களத்தில் நன்கு அறிமுகமுள்ள எமது கட்சியை பதிவதில் எத்தகைய தடையும் இல்லை எனவும் தெரிவித்திருந்தார். 

பொதுவாக இனம், சமய  ரீதியாக கட்சிகளை பதிவு செய்வது தடைசெய்யப்படவில்லை என்பதால் இதற்காக போராடுவது என்ற தமது உறுதியின் காரணமாக பலமுறை தேர்தல் ஆணையாளர்களுடன் பல சந்திப்புக்களை நடத்தியுள்ளோம். இருந்த  போதும் தற்போதைய தேர்தல் ஆணையாளர் மனச்சாட்சிப்படி செயலாற்றும் சிறந்த ஒருவர் என்பதனால் அவரது அன்பான வேண்டுகோளுக்கு எமது கட்சி மதிப்பளிக்கிறது. இதன் காரணமாக பல தடவைகள் எமது கட்சியின் உயர்சபை தாருள் குர்ஆனில் கூடி ஆராய்ந்த பின் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சி என்று பெயரை மாற்றுவது என்றும், ஸ்ரீலங்கா உலமா கவுன்சில் என்பது தொடர்ந்தும் சமூக நலன் சார்ந்த அமைப்பாக செயற்படும் எனவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார். 

தலைவர்                                 செயலாளர்

மௌலவி முபாறக் அப்துல் மஜீத் (கபூரி ரூ நத்வி)     மௌலவி எம். ஜே. எம். பதுர்தீன் கபூரி டீ. யு



6 comments:

  1. ஏன் எல்லா முஸ்லீம் கட்சிகளும் சேர்ந்து பொதுவான அதாவது எல்லா முஸ்லிம் அரசியல் வாதிகளும் சேர்ந்து ஒரு கட்சி ஆரம்பித்தால் நன்றாக இருக்கும் அல்லவா ? ஒவ்வொருவரும் சில விட்டுக்கொடுப்புகளின் மூலம்தான் இதை செய்ய முடியும்....... நடக்குமா ? ஏன் எனில் இலங்கையில் 7% முஸ்லீம்கள் தான் உள்ளனர். இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கட்சி ஆரம்பித்து வாக்கு வங்கிகளை நிறைக்க முற்படும் பொது முஸ்லிம்களின் வாக்கு சின்னாபின்னமாகி எவருக்கும் எந்த பிரயோசனையும் இல்லாமல் பிரதான கட்சிகளுக்கு முக்கு கொடுக்கத்தான் முடியும் தற்போது அதுதான் நடந்து கொண்டு உள்ளது. நடக்குமா ?????????????????????????

    ReplyDelete
  2. romba mukkiyamana katchi.......polappu nadaththa naangathana kedachcham......ipdi innum yeththinai per wariwangalo theriya????????????????

    ReplyDelete
  3. ithu thaan ippa mukkiyam. unkalaal katchien peyaraithaan maatra mudiyum. Muslimkalin iruppidathaiye maatri amaikkapparkiraarkal.pawtha mathakurumaarkal.

    ReplyDelete
  4. உலமா என்று சொல்ல பயம் போல,

    ReplyDelete
  5. சிறிலங்கா முபாறக் கட்சி என்று பெயர் வைத்தால் நன்றாக இருக்கும்.ஏனென்றால் திரைக்கதை டயரெக்சன் சண்டைக்காட்சி கதைவசனம் அனைத்தும் நீங்கள்தானே.

    ReplyDelete
  6. @ Shajahan

    அலாக்கா pointடப் புடிச்சேங்க போங்க... அதுவே, அதுவே காரணம். இல்லாட்டி ஏன் இவ்வளவு அவசமாய் மாத்தோணும்???!!! ஆடு அறுக்கக்க....

    ReplyDelete

Powered by Blogger.