Header Ads



எம்.எம்.அலி அக்பரின் 'கடைசி வேரின் ஈரம்' (படங்கள்)



ஓய்வு பெற்ற அதிபரும் கலாபூஷனம் விருது பெற்றவருமான எம். எம். அலி அக்பர் கன்னி சிறுகதை நூல் வெளியீடான 'கடைசி வேரின் ஈரம்' என்ற சிறுகதைத்தொகுப்பு நூல் 2013-02-10ம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிண்ணியா பொது நூலக கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிண்ணியா நகர சபை தவிசாளர்  னுச:ஹில்மி மஹ்ரூப் (சட்டத்தரணி) , மற்றும் சிறப்பு அதிதிகளாக கிண்ணியா பிரதேச சபை உதவித் தவிசாளர் கே. எம். நிஹார் அவர்களும், மற்றும் கிண்ணியா விஷன் பணிப்பாளர் ஏ. ஆர். சைபுள்ளா கலந்து சிறப்பித்தார்கள்.

கலாநிதி, கலாபூஷனம் கே. எம். எம். இக்பால் தலைமையில் நடைபெற்ற இவ் விழாவில் மூதூர், திருகோணமலை, கிண்ணியாவில் இருந்து முது பெரும் கலைஞர்கள், எழுத்தாளர்கள் பலர்  கலந்து கொண்டார்கள். நூலாசிரியரின் படைப்புக்களில் பத்திரிகைகளில் இருந்து வெளியான 83 சிறு கதைகளில் இருந்து முத்தான 12 சிறு கதைகள் இந் நூலில் உள்ளடக்கப்பட்டுள்ளது. 





No comments

Powered by Blogger.