புதுப்பொலிவுடன் திகழும் நூற்றாண்டு பழமை வாய்ந்த வேப்பங்குளம் பள்ளிவாசல் திறப்பு
(இக்பால் அலி)
நூற்றாண்டுக்கும் மேற்பட்ட வரலாற்றுச் சான்றுகளைக் கொண்ட வேப்பங்குளம் ஜும்ஆப் பள்ளிவாசலை புதிதாக நிர்மாணித்து திறந்து வைக்கும் வைபவம் 08-02-2013 வெள்ளிக்கிழமை ஜம்ஆவுடன் நடைபெறும்.
கடந்த 30 வருட கால கொடிய யுத்தத்தில் முசலிப் பிரதேச செயலாளர் பிரிவில் அழிந்து பொன பள்ளிவாசல்களில் வேப்பங்குளம் பள்ளிவாசல் மிகப் பிரதானமான ஒன்றாகும்.
அரசாங்கத்தின் வடக்கின் வசந்தம் மீள் குடியேற்றத் திட்டத்தின் கீழ் இந்தப் பிரதேசத்தில் கணிசமான மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ளனர். அரசாங்கத்தின் மூலம் இந்தப் பிரதேசத்தில் பல்வேறு அபிவிருத்தி ரிதியிலான உட்கட்டைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன. முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் கடமைகளில் தொழுகை மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்.. வயது வந்த ஆண் பெண் இருபாலரிருக்கும் தொழுகை கட்டாயமாகப்பட்டுள்ளது.
இம் மக்களின் அன்றாட கலாசார விழுமியங்களைப் பேணிப் பாதுகாத்துக் கொள்ள புதிய பள்ளிவாசல் திறந்து வைக்கும் நிகழ்வு சம்மந்தமாகவும் பள்ளிவாசலின் வரலாறு பற்றியும் அஷ்ஷெய்க் எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி பின்வருமாறு அவரது அவரது எழுத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கிராமத்தின் ஆதிக் குடியேற்றம்
வேப்பங்குளம் கிராமம் மன்னார் மாவட்டத்திலுள்ள முசலிப் பிரதேச சபைக்குட்பட்ட பழமைவாய்ந்த வன்னிக்கிராமங்களில் ஒரு கிராமமாகும். இங்கு முஸ்லிம்கள் கி.பி. 1800க்கு பிற்பட்ட காலப்பகுதியில் குடியேறி வாழ்ந்ததற்கான ஆதாரங்கள் இருக்கின்றன.
கி.பி. 1935ம் ஆண்டு பிறந்த ஸதகதுல்லாஹ் அப்பா என்பவர் இன்றும் உயிருடன் வாழ்ந்து வருகிறார். இக்கிராமத்தில் பழைய வயோதிபதிபர்களில் ஒருவர் இவர்.
இந்தப் பள்ளியின் தொடக்கம் எவ்வாறு இருந்தது என்பதைப் பற்றி விபரித்த போது அவர் பின்வருமாறு கூறினார்.
புதிய பள்ளிவாசலுக்கான இடம் மஸ்தார் என்று அழைக்கப்படுகின்ற செல்வந்தர் ஒருவரின் தாயான மைமூன் உம்மா என்பவரால் அன்பளிப்பு செய்யப்பட்டிருந்தது.அக்காணியில் அமையப் பெற்ற குர்ஆன் மத்ரஸாவிற்கான காணியை அவரது தந்தையான மீரா நெய்னா என்பவரால் அவர்களுக்குச் சொந்தமான வயல் காணியை அவரது தந்தை வக்ஃபாக வழங்கி இருந்தார்.
அவருக்கு வயது எண்பதையும் தாண்டிவிட்ட நிலையில் இப்பளிவாசல் இருந்து வருகின்றது என்ற அவரது கூற்று முஸ்லிம்கள் நூறு வருடங்களுக்கு முன்பாக இங்க குடியெறி வாழ்ந்துள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.
பள்ளியில் ஜும்ஆ தொடங்கிய சரித்திரப் பின்னணி.
ஸதகதுல்லாஹ் அப்பா தொடர்ந்தும் விபரித்த போது,
ஆரம்பத்தில் இக்கிரமாத்தில் வாழ்ந்த எமது மூதாதையர் பண்டாரவெளி என்ற கிராமத்திற்கு வெள்ளிக்கிழமை நாட்களில் ஜும்ஆக்கடமையை நிறைவேற்றச் சென்று வருவேராக இருந்தார்கள். ஒரு நாள் இரு கிராமத்தவருக்கும் இடையில் கைகலப்பு ஏற்பட்டது. அதற்குப் பின் அங்கு ஜும்ஆற்குச் செல்வதை நிறுத்திக் கொண்டனர், சில வாரங்கள் பக்கத்தில் உள்ள பொற்ணி கிராமத்திற்குச் சென்று எமது கிhமத்தவர் நமது கிராமமே நமக்கு சிறந்தது என்ற நிலையில் அங்கு ஜும்ஆக்கடமைய ஆரம்பித்தனர் என்றார் ஸதகதுல்லாஹ் அப்பா.
இங்கு பிரதானமாக கதீப்களாக யார்யாரெல்லாம் கடமையாற்றினார்கள் என்று கேட்டபோது மாட்டு லெப்பபை என்றழைக்கப்படுகின்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுல்தார் என்பவர் கடமையாற்றியதாகக் குறிப்பிட்ட அவர், எனது தந்தை அவரிடம்தான் குர்ஆனை ஓதி முடித்தார் என்றும், எனது ஆசானும் அவர்தான் என்றார்.
இதன்மூலம் அக்கால முஸ்லிம்கள் தமது இஸ்லாமிய பாரம்பரிய முறைகள் பேணுவதில் எவ்வளவு அக்கறையாக செயல்பட்டனர் என்பதை இது சுட்டி நிற்கின்றது.
இப்பள்ளிவாசலில் பலர் கடமையாற்றினர், அவர்கள் பலர் மரணித்துவிட்டார்கள், சிலர் உயிர்வாழ்கின்றார்கள். அல்லாஹ் மரணித்தவர்களின் பாவத்தை மன்னிக்கவும், உயிரோடு வாழும் ஆலிம்களின் வாழ்வில் அபிவிருத்தியும் செய்வானாக!
1990 இற்கு முன்னால் இக்கிராமத்தின் நிலை
மன்னார் வேப்பங்குளம் என்றால் 1990 இற்கு முற்பட்ட காலத்தில் மன்னார் மாவட்டத்தில் வாழ்ந்த சகல இன மக்கள் மனங்களிலும் நீங்காத இடம் பிடித்த முன்மாதிரிக் கிராமமாகும். அக்காலத்தில் இக்கிராமம் சிறப்புற்று கவர்ச்சியான பன்முக ஆளுமை கொண்ட கிராமமாகக் காணப்பட்டதே இதன் பிரதான காரணமாகும்.
வயல் நடுவில் அமையப் பெற்ற மண்வீடுகள், அவற்றைச் சுற்றிலும் இணைந்த தென்னை மரத் தோப்புக்கள், நூற்றுக்கணக்கான ஏக்கர் வயல் வெளிகள், தண்ணீர் நிரம்பிய குளங்கள், குட்டைகள், நீர் ஓடைகள், அதனை அன்றிய பல விவசாயக் கிராமங்கள், அதற்கருகாமையால் அமையப் பெற்ற வில்பத்துகாடு என இயற்கையுடன் பின்னிப்பிணைந்து காணப்பட்ட அக்கிராமத்தின் அழகை ரசிக்க ஆயிரம் கண்கள் வேண்டும்.
விளையாட்டு வீரர்கள், செல்வந்தர்கள், படித்த ஆளுமைகள் என பல மனிதர்கள் போன்ற முன்மாதிரகளைக் கொண்டு கட்டமைக்கப்பட்டிருந்த இக்கிராமத்தவர்களின் தலையில் தமிழ் ஆயதக்குகழுக்களின் நடவடிக்கைகள் பேரடியைத் தோற்றுவித்தன என்பதைக் கூறாமல் இருக்க முடியாது.
வீணாக அப்பாவிகள் சுடப்பட்டார்கள். பலர் 90ற்கு முன்னால் குடும்பங்களை விட்விட்டு வேறு பிரதேசங்களில் ஒழிந்துவாழும் நிலை தோற்றுவிக்கப்பட்டது. ஒரு இனத்தின் சுதந்திரத்திற்காக சுதந்திரம் பறிக்கப்பட்டவர்களாக, அச்சத்துடன் வாழவேண்டிய நிலை ஏற்பட்டது.
1990-ற்குப் பின்னால் இரவோடு இரவாக உடுத்திய உடையுடன் இம்மக்கள் வெளியேற்றப்பட்டனர். புலிகள் பின்புதான் இதனைத் தவறு என உணர்ந்;து கொண்டார்கள்
தமிழ் இனத்துடன் கலந்து ஒரு மொழி பேசும் சகோதரர்களாக அந்நியோன்னியமாக வாழ்ந்த இம்மக்களின் சொத்துக்கள் முழுமையாக சூறையாடப்பட்டன அதன் பொருட்கள் களவாடப்பட்டன. பள்ளி முற்றாக அழிந்து காணப்பட்டன.
ஓலைக் குடிசைகளில் மழை வெயில் என இரண்டையும் தாங்கிக் கொண்டு கொழும்பு, புத்தளம், குருநாகல், அம்பாரை, அனுராதபுரம் போன்ற மாவட்டங்களில் அலைக்கழிந்து அகதிகளாக வாழ்ந்தார்கள்.
தமது கஷ்டங்களுக்கு ஒத்தடம் கொடுபபதாக இஸ்லாமிய சமூகத்தின் சகோதரத்துவ சேவை அமைந்திருந்தது. குறிப்பாக ஜமாஅத் அன்ஸாரிஸ் ஸுன்னாவின் நிவாரண உதவி, ஐ.ஐ.ஆர், ஓ, மற்றும் ஷபாப், ஜமாஅத்தே இஸ்லாமி போன்ற சகோதர அமைப்புக்கள் இந்தச் சந்தர்ப்பத்தில் தம்மாலான உதவிகளைச் செய்துள்ளார்கள்
இப்போது இக்கிராமம் பட்டதாரிகள், வியாரபாரிகள், செசல்வந்தர்கள், அரசியல் பிரமுகர்கள், சாமானிய மக்கள் என பலரையும் கொண்ட ஊராகக் காணப்படுகின்றது.
முசலியில் மொத்தம் 27 கிராமங்களும், 20 கிராம சேசர்கள் பிரிவுகளும் இருக்கின்றன. முசலி பிரதேச சபையில் பதியப்பட்ட வேப்பங்குளம் கிராமக் குடும்பங்களின் எண்ணிக்கை 725 என்றும், தற்போது பள்ளி நிரவாகத்திற்கு கீழ் இருக்கும் குடும்பங்களின் எண்ணிpக்கை 210 என்றும் அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
மீள் குடியேற்றம்.
2009 மே புலிகள் ஆயத முனையில் தோற்கடிக்கப்பட்டதன் விளைவாக இக்கிராமத்தில் மக்கள் மீண்டும் மீள் குடியேற்றப்பட்டனர். அப்போது மீள் குடியேற்ற அமைச்சராக இருந்த சகோதரர் ரிஷாத் பதியுதீன், மற்றும் இஸ்லாமிய அமைப்புக்களின் பங்களிப்பு அளப் பெரியது.
குறிப்பாக ஜமாஅத் அன்ஸாறுஸ்ஸுன்னா முஹம்மதியா இலங்கை முஸ்லிம் சமூகத்தில் நலிந்து காணப்படும் மக்களின் நண்பனாகவே இன்றுவரையும் செயற்பட்டு வருகின்றது என்று கூறுவது மிகையான ஒரு செய்தியாக இருக்க முடியாது என்றே கருதுகின்றேன்.
பழைய பள்ளிவாசல் புனர் நிர்மாணம்:
இப்பள்ளிவாசல் புனரமைக்கப்பட வேண்டும் என்ற அவசியத்தை உணர்த்தி அஷ்ஷைக்: எம். ஜே. எம். ரிஸ்வான் மதனி அவர்கள் தொடராக முன்வைத்த கோரிக்கையினாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்பு, ஆர்வத்தினாலும் அதன் அவசியத்தை உணர்ந்த ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யாவின் பொதுத் தலைவர் அஷ்ஷைக்: என். பீ. எம். அபூபக்கர் ஸித்தீக் மதனி அவர்களால் 2011-07-26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று அடிக்கல் நாட்டப்பட்டது.
அல்லாஹ்வின் அருளால் ஆறு மாத காலத்திற்குள் மிக விரைவாகவும், அழகாகவும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. -அல்ஹம்துலில்லாஹ்- அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.
இதன் அழகிய தோற்றத்தை கண்டு இக்கிராம மக்களும், முசலிப் பிரதேச வாழ் முஸ்லிம் மக்களும், பிற சகோதர இனத்தவர்களும் அகமகிழ்ந்து கொள்வதைப் பார்க்கின்ற போது மண்ணறையில் நான் வாழும் போதும் எனக்கும் இதில் ஒரு பங்கு நன்மை வந்தடையும் என்று உறுதியாக நான் நம்புகின்றேன். அல்ஹம்துலில்லாஹ்.
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 2013-02-08-ம் திகதி வெள்ளிக்கிழமை இப்பள்ளியின் திறப்பு நிகழ்வு உத்தியோகபூர்வமாக நடை பெறுவதை இட்டு அல்லாஹ்வைப் புகழ்கின்றேன்.
இப்பள்ளியின் வேலைத்திட்டம் முழுமையாக வெற்றி பெற எல்லாவகையிலும் அல்லாஹ் செய்த உதவிக்காக அவனைப் புகழ்கின்றேன்.
அத்துடன், இதன் நிர்மாணப்பணிக்காக நிதியுதவி செய்த ஜமாஅத் அன்ஸாருஸ்ஸுன்னாவிற்கும், அதன் பொதுத்தலைவர் அஷ்ஷைக்: அபூபக்கர் ஸித்தீக் மதனி மற்றும், அதன் செயலாளர்: எஸ் கலீலுர்ரஹ்மான், அங்கு பணிபுரியும் சகோதரர்கள், மற்றும், இப்புனித பணிக்காக சகலவகையிலும் துணையாக இருந்த ஊர்மக்கள், உறவுகள், கட்டவேலைக்காரர்கள், (கொத்தனார்கள்) இதன் பணிக்காக முழுமையாக ஒத்துழைப்பு நல்கிய அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பிரதேச சபை உறப்பினர்கள், இராணுவம் பொலிஸ், கடல்படையினர் மற்றும் அனைவருக்கும் அல்லாஹ் நல்லருள் புரிய வேண்டும் என்று இந்த சந்தர்ப்பத்தில் பிரார்தனை செய்து, நன்றியும் கூறிக் கொள்கின்றேன்.
Post a Comment