மன்னாரில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணை பீப்பாய்கள்
இந்தியாவின் எண்ணை அகழ்வாய்வு நிறுவனமானது Cairn India இந்த வாரம் இலங்கையின் எண்ணை அகழ்வாய்வு நிகழ்ச்சித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாகவும், இதன்படி நான்காவது எண்ணைக் கிணறைத் தோண்டவுள்ளதாகவும், 2014ல் வர்த்தக சார் சாத்தியப்பாட்டு ஆய்வொன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருப்பதாக இந்நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இலங்கை எண்ணை இறக்குமதியில் தங்கியிருப்பதைக் குறைக்கும் நோக்கில் தனது நாட்டில் மேற்கொண்டு வரும் எண்ணை அகழ்வாய்வுப் பணிக்கான முயற்சியில் லண்டனில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள Vedanta Resources Plc என்கின்ற நிறுவனம் குறிப்பிடத்தக்களவு ஆதரவை வழங்கி வருகிறது. 2011ல் இலங்கையின் எண்ணை இறக்குமதியானது 4.6 பில்லியன் டொலர்களாக காணப்பட்டது. மே 2009ல் புலிகளுடனான யுத்தம் முடிவுற்ற பின்னர், இலங்கை அரசாங்கமானது தனது நாட்டில் எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்திகளை மீளப்புத்துயிர் ஊட்டுவதற்கான முயற்சியில் இறங்கியுள்ளது.
மன்னார் கரையில் காணப்படும் எட்டு எண்ணைத் தொகுதிகளில் ஒரு தொகுதியில் எண்ணைக் கிணறுகளை மேற்கொள்வதற்கான உரிமையை Cairn India கொண்டுள்ளது. இத்தொகுதிகளில் சீனா ஒரு தொகுதிகளில் இந்தியா பிறிதொரு தொகுதியிலும் அகழ்வாராய்ச்சி பணியில் ஈடுபடுவதற்காக ஒதுக்கப்பட்டுள்ளன. அதேவேளையில் ஏனைய ஐந்து தொகுதிகளும் இவ்வாண்டு இறுதிக்குள் ஒப்பந்தம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cairn India என்கின்ற எண்ணை அகழ்வாராய்ச்சி நிறுவனமானது ஏற்கனவே மன்னார் கரையில் தனது முதலாவது அகழ்வாராய்ச்சி திட்டத்தை நிறைவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தால் தோண்டப்பட்ட மூன்று எண்ணைக் கிணறுகளில் இரண்டில் எரிவாயு மற்றும் இயற்கை வாயுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இதற்கான வர்த்தக சார் சாத்தியப்பாட்டு ஆய்வுகள் இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிறுவனத்தால் தோண்டப்பட்ட மூன்றாவது கிணறு 2011 டிசம்பரில் கைவிடப்பட்டது.
இலங்கையின் மேற்குக் கரையோரமான கல்பிற்றியவிலிருந்து 22 கிலோமீற்றர் தொலைவில் Wallago என்கின்ற நான்காவது எண்ணைக் கிணறு தோண்டப்படவுள்ளது.
"இந்த நான்காவது கிணறைத் தோண்டுவதற்கான பணி இம்மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இது 35-40 நாட்களுக்குள் முடிவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் பணிகள் மிகச் சிறப்பாக இடம்பெற்றால் இதற்கான சாதாரண நடவடிக்கை முதலில் தோல்வியுறவில்லை எனக் கருதலாம்" என Cairn India நிறுவனத்தின் ஒத்துழைப்பு மற்றும் தொடர்பாடல் இயக்குனர் சுனில் பாரதி தெரிவித்துள்ளார்.
இதற்கான முதல் கட்ட திட்டத்தை நிறைவுசெய்வதற்கு 150 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டதாகவும், ஆனால் இதற்காக 112 மில்லியன் டொலர்கள் செலவாகும் என மதிப்பிடப்பட்டதாகவும் இரண்டாம் கட்டத்தைப் பூர்த்தி செய்வதற்கு இதை விட அதிக தொகை செலவாகும் எனவும் சுனில் பாரதி தெரிவித்துள்ளார்.
30,000 சதுர கிலோமீற்றர் பரப்பளவான காவேரி ஆறு கலக்கும் மன்னார் கடல் படுக்கையில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்ட எண்ணை பீப்பாய்கள் காணப்படுவதாக இலங்கை அரசாங்கத்தின் புள்ளிவிபரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையிடன் எண்ணை வள ஒத்துழைப்பு தொடர்பாக ரஸ்யாவின் இயற்கை வாயு நிறுவனமான Gazprom பேச்சுக்களை நடாத்தியுள்ளது. இதேபோன்று ஒக்ரோபர் 2011ல் எண்ணை மற்றும் எரிவாயு ஒத்துழைப்பு தொடர்பாக வியட்நாம் மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளும் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கதே.
Post a Comment