சகலரது மத சுதந்திரத்தையும் பாதுகாப்பதிலும் அரசாங்கம் உறுதி - ஜனாதிபதி மஹிந்த
நாட்டில் சகல இனம். மதங்களுக்கிடையில் ஐக்கியத்தையும், சக வாழ்வையும் கட்டியெழுப்பவும் சகலரது மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதிலும் அரசாங்கம் முனைப்புடன் செயற்படுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சகல பெளத்த மத பீட மகாநாயக்கத் தேரர்களையும் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடிய போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இங்கு கருத்துத் தெரிவித்துள்ள ஜனாதிபதி, பெளத்த தர்மத்தைப் பாதுகாப்பதிலும் பலப்படுத்துவதிலும் அரசாங்கம் எப்போதும் கடமைப்பட்டு ள்ளது. நாட்டின் சகல இன, மத, சக வாழ்வைக் கட்டியெழுப்புவதும் சகலரதும் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment