ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வு (படங்கள்)
(அம்மார்)
இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஏற்பாடு செய்த சுதந்திர தினத்தை நினைவு கூறும் நிகழ்வு குருணாகல் தெலியாகொன்ன ஜும்ஆப்பள்ளி முன்றலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதஅதிதியாக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் றிஸ்வி முஃப்தி அவர்கள் கலந்து கொண்டு தேசியக்கொடியை ஏற்றி வைத்ததுடன் ஜாமிஆ நளீமியா கலாபீடத்திலிருந்து வருகை தந்த அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷேய்க் அகார் முஹம்மத் அவர்கள் “நாம் எலலோருமாக பெற்றுக்கொண்ட இந்த சுதந்திரத்தை பாதுகாப்பதில் முஸ்லிம்களின் பங்களிப்பு” சமபந்தமாக விசேட உரையாற்றுகையில் கருத்துத் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் விசேட அதிதியாகவும் நிகழ்வுக்குறிய இணைப்பாளராகவும் குருணாகல் மாவட்ட ஸ்ரீ லங்கா சுத்நதிரக் கட்சியின் அமைப்பாளர் அப்துல் சத்தார் காணப்பட்டார். நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை தந்த பல நூற்றுக்கணக்கான உலமாககளுடன் பொலிஸ் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
Post a Comment