சமோசாவை விரும்பும் அமெரிக்கர்கள்
பீட்சாவுக்கு இந்தியர்கள் மாறும் வேலையில் சமோசாவை அமெரிக்கர்கள் ருசித்து சாப்பிடுகின்றனர். தற்போது நமது நாட்டில் உணவு கலாசாரம் மாறி வருகிறது.
இட்லி, தோசை, வடை, சமோசா போன்ற இந்திய உணவு வகைகளுக்கு விடை கொடுத்துவிட்டு பீட்சா, பர்கர் என்னும் மேற்கத்திய உணவுகளுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.
ஆனால் மேற்கத்திய நாடானா அமெரிக்காவிலோ இந்திய உணவான சமோசாவுக்கு அதிக கிராக்கி உள்ளது. இதனால் கலிபோர்னியா, சிகாகோ உள்ளிட்ட பல நகரங்களில் பல சமோசா கடைகள் தொடங்கப்பட்டு வியாபாரம் படுஜோராக நடக்கிறது.
குறிப்பாக சிகாகோவில் உள்ள கிராண்ட் பார்க்கில் சுசி சமோசா கடை என்றால் பிரபலம். அக்கடையை சுசி சிங் என்ற பஞ்சாபி பெண் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு சிறிய குழந்தைகள் கூட சென்று பலவித சட்னியுடன் சமோசாவை விரும்பி ருசித்து சாப்பிடுகின்றனர்.
சுசி சிங்கின் பெற்றோர் சிகாகோ புறநகரில் என்ஜினீயர்களாக பணிபுரிகின்ற னர். சுசிசிங் உள்பட ஏராளமானவர்கள் இந்திய உணவு வகைகளை வழங்கி அமெரிக்கர்களிடம் நன் மதிப்பையும், மரியாதையையும் பெற்றுள்ளனர்.
Vaalththukkal
ReplyDelete