Header Ads



காத்தான்குடியில் தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி (படங்கள் இணைப்பு)



(பழுளுல்லாஹ் பர்ஹான்)

இலங்கை முஸ்லிம்களின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையிலான பண்டைய வரலாறு, அதன் வரலாற்றுத்தடயங்கள், ஆவணங்கள் தொல்பொருட்கள் என்பவற்றின் பூர்வீகத்தேடல் பற்றிய தேசிய இஸ்லாமிய கலாசார கண்காட்சி இன்று காத்தான்குடியில் கோலாகலமாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரியவினால் காத்தான்குடியின் பிரதான வீதியில் பஸ்மலா சதுக்கத்தின் முன்பாக அமைந்துள்ள மீரா பாலிகா மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் இந்த கலாசார கண்காட்சி அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

வரலாற்றுக் குறிப்புக்களில் இலங்கை முஸ்லிம்களின் ஆரம்பகால தொடர்பை உறுதிப்படுத்தும் ஆவணங்கள், கல்வெட்டுக்கள், சிலாசனங்கள், புள்ளிவிபரங்கள், ஆவணச் சுவடிகள், வரலாற்றுக் குறிப்புக்கள், போர்த்துக்கேயர் மற்றும் ஆங்கிலேயரின் முஸ்லிம்கள் குறித்த புள்ளிவிபரங்கள், அறிக்கைகள், வரலாற்றுக் குறிப்பேடுகள், மலைகள், குன்றுகள், ஆவணப்படங்கள் வெளிநாட்டு வர்த்தகம், பட்டுப்பாதை, நாணயங்கள் உள்நாட்டு வர்த்தகம், கரவான்பாதை, விவசாயம், மீன்பிடி, பணிக்கர்(மரபு ரீதியான யானை பிடித்தல்)யூணானி மருத்துவம், பண்டய கால அரசர்களுக்கு ஆற்றிய மருத்துவ சேவை கட்டிடக்கலை, பள்ளிவாசல்கள் வீட்டமைப்பு அரசியல், தேசிய ஒற்றுமைக்கான முஸ்லிம்களின் அரசியல் பங்களிப்பு சுதந்திரத்திற்கு முற்பட்ட இலங்கையின் அரசியலில் முஸ்லிம்களின் பங்களிப்பு வாழ்வியல், மொழி, அரபுத் தமிழ், இலக்கியம் பற்றிய ஆய்வு, கல்வி, பாரமபரியம், அரபு மத்ரசாக்களின் வரலாறு, ஆடை அணிகலன்கள், மனைப் பொருட்கள், உணவுப் பழக்க வழக்கங்கள், திருமண சடங்குகள், பட்டய கல்யாணம், திருக் கலியாணம் கலையும்இலக்கியமும்,பொல்லடி,சிலம்படி,நாடகம்,வில்லுபாட்டு, மெத்தை வீடு கட்டுதல் இலக்கிய மரபுகள்,கதைகூறுதல்,பாபாடுதல் முஸ்லிம்கள் உலக நாகரிகத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அறிவியல், மருத்துவம், கணிதம், கண்டுபிடிப்புக்கள், நாடுகான் பயணங்கள் உட்பட மேலும் பல விடயங்கள் கண்காட்சியில் உள்ளடக்கப் பட்டுள்ளன.

இக்கண்காட்சியில் தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய,கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட்,மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும்,பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ,மீள் குடியேற்ற பிரதியமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன், கலாசார அலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் விஜித் கணுகல மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ,காத்தான்குடி நகர சபைத் தலைவர் எஸ்.எச்.எம்.அஸ்பர் ,கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாரூக்,மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் வலயக்கல்விப் பணிப்பாளர் யு.அஹமட் லெவ்வை ,மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இந்த கலாசார கண்காட்சியை பார்வையிடுவதற்காக கிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகள் மற்றும் அரச திணைக்களங்கள் உட்பட பல பொதுமக்களும் வந்தவண்ணமே உள்ளனர்.

இக்கண்காட்சி இன்று முதல் மூன்று நாட்களுக்கு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
























No comments

Powered by Blogger.