விவேகமுடையவர்களாக விரும்புகிறீர்களா..? விமல் வீரவன்சவின் புத்திமதியை கேளுங்கள்!
(Tm) ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவாக சூரை மீனை உட்கொள்வதால் அவர்கள் விவேகமுடையவர்களாக உள்ளனர் என அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.
'யுத்தத்தால் அழிவடைந்த பின்னர் ஜப்பானியர்கள் எவ்வாறு எழுச்சி பெற்றனர்? வியக்கத்தக்க தொழில்நுட்ப உற்பத்திகளை உற்பத்தி செய்வதற்கு எவ்வாறு அவர்களது மூளைகள் விருத்தியடைந்தன?
அவர்கள் தங்களது கல்வி முறையிலும் உட்கொள்ளும் முறையிலும் மாற்றத்தை ஏற்படுத்தினர். அவர்கள் சூரை மீனைப் பிடித்து அதனை உட்கொண்டனர். சூரை மீனைப் போன்று புத்திக்கூர்மைக்கு உதவு வகையில் வேறு எந்த மீனும் இல்லை. ஜப்பானிய சிறுவர்கள் அதிகளவான சூரை மீனை உட்கொள்வதினாலேயே விவேகமுடையவர்களாக உள்ளனர்' என அவர் கூறினார்.
முல்லேரியாவில் அண்மையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
சூரை மீனை கிரந்தித் தன்மையுடைய மீன் என ஒதுக்காது இலங்கையர்களும் இம்மீனை அதிகளவில் உட்கொள்ள வேண்டுமெனவும் அவர் கோரினார்.
அப்படியென்றால் .. ஜப்பான் என்னும் மீன் அதைவிட சத்தானதும் மலிவானதும் கூட இது கடலிலும் குளங்களிலும் காணப்படும் ..1957 யில் பிரதமர் பண்டாரநாயக ஜப்பான் விஜயத்தின் பொது கொண்டு வந்த மீன் இன்று ...கட்டுகடங்காமல் பெருகியுள்ளது .....கிலோ சுமார் 30 ரூபாய்க்கு வாங்க முடியும் .....சவூதியில் அதன் விலை 1500 ரூபாய் ......கட்பினி தாய் மார்களுக்கு தாய்ப்பால் ஊருவதட்கு சொல்லப்பட்ட மீன் ....சாப்பிட்ட அடுத்த நாளே மார்பில் பால் வடிந்த வண்ணமிருக்கும்
ReplyDelete