முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டத்தில் நியாயம் கேட்ட அம்பாறை முக்கியஸ்தர்கள்
முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமின் தலைமையில் நடைபெற்றுள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே நடைபெற்றுள்ள இக்கூட்டத்தில் பஷீர் சேகுதாவூத் விவகாரம் முக்கிய இடம்பிடித்துள்ளது.
முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட உயர்பீட உறுப்பினர்கள் சிலர் பஷீர் சேகுதாவூத் அமைச்சுப் பதவி வழஙக்கப்பட்டமை குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அமைச்சர் அதாவுல்லாவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகள் துpவிரமடைந்திருக்கும் நிலையில் அமட்பாறை மாவட்டத்திற்கு முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஒரு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மாகாண அமைச்சுப் பதவி ஏற்கனவே உள்ள நிலையில் அம்பாறை மாவட்டத்திற்கே அப்பதவி வழங்கப்பட்டிருக்க வேண்டுமெனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பஷீர் சேகுதாவூத்திற்கு அமைச்சுப் பதவி கிடைத்தமைக்கும், கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கும் சம்பந்தம் இருப்பதாக கட்சியின் உறுப்பினர்கள் பேசிக் கொள்வதாகவும் இதன்போது முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினர்கள் சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதேநேரம் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் அம்பாறை மாவட்டத்திற்கு அமைச்சுப் பதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து இதன்போது வலியுறுத்தி கூறியபோதும் அமைச்சுர் ரவூப் ஹக்கீம் இதுதொடர்பில் எத்தகைய சாதக பதிலையும் வழங்கவில்லையென குறிப்பிட்ட கூட்டத்தில் பங்கேற்ற கட்சியின் உயர்பீட உறுப்பினரொருவர் எமது இணையத்திற்கு தெரிவித்தார்.
Ippo irukkira pirachinaikulla itntha pirachinaithan, mukkiyama muthalla muslim samuhathuku oru mudivu edunga intha perinavathihalidam irunthu.
ReplyDelete