ஹனிபா ஸஹிலாவின் 'விதி வரைந்த பாதை' (படங்கள் இணைப்பு)
(எம்.பைஷல் இஸ்மாயில் + எஸ்.எம்.அறூஸ்)
ஹனிபா ஸஹிலா எழுதிய 'விதி வரைந்த பாதை' சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா நேற்று (2013.02.03) மாலை 4.30 மணியளவில் நிந்தவூர் தொழில் பயிற்சி நிலைய கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றது.
இச்சிறு கதைகள் நூல் வெளியீட்டு நிகழ்வுக்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ரீ.ஹசனலியும் கௌரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
சிறப்பு அதிதியாக தென்கிழக்கு பல்கலைக்கழக தழிழ்த்துறைத் தலைவர் றமீஸ் அப்துல்லா மற்றும் இலக்கியவாதி பீர்முஹம்மட் ஆகியோர்களும் கலந்து கொண்டு இந்நூலைப்பற்றிய விமர்சனம் செய்தனர்.
பிரதம அதிதி மற்றும் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் ஆகியோரினால் கலந்து கொண்டவர்களுக்கு சிறு கதைகள் நூல் வழங்கி வைக்கப்பட்டது.
இதில் கூடுதலான இலக்கியவாதிகள், கல்விமான்கள், ஊடகவியலாளர்கள், நூல் ஆசிரியரின் குடும்ப உறவினர்கள், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் பி. கைறுதீன் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தது விஷேட அம்சமாகும்.
நூலாசிரியர் கிண்ணியாவைச் சேர்ந்தவர். இவரது தாயார் அட்டாளைச்சேனை தைக்கா நகரை பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது தந்தை கிண்ணியாவைச் சேர்ந்தவர். அவரது நூல் வெளியீடு நிந்தவூரில் நடைபெற்றது. விஷேட அம்சமாகும். இவர் ஆசிரியர் தொழிலில் ஈடுபட்டு வருகின்றார். மிக இளம் வயதில் இலக்கிய உலகத்திற்குள் கால் பதித்துள்ள ஹனிபா ஸஹிலாவின் திறமைகளை நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் பாராட்டிப் பேசினர்.
Post a Comment