புத்தர் சிலைகளை நிறுவுவது முஸ்லிம்களுக்கு இடையூறாக அமையும் - அத்துரலிய ரத்ன தேரர்
முஸ்லிம்கள் ஹலால் உணவை உண்ணுவதால் எங்களுக்கு பிரச்சினையில்லை. ஆனால் இலங்கையில் ஹலால் உணவைத்தான் சகலரும் உட்கொள்ள வேண்டுமென்றி நிலையை தோற்றுவிப்பதாக அது அமைந்துவிடக்கூடாதென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் குழுத்தலைவர் அத்துரலிய ரத்ன தேரர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது,
இன்று சகல வியாபாரிகளும் உணவை ஹலால் படுத்தியுள்ளனர். முஸ்லிம்களுக்கு தயாராகும் உணவை சகலரும் உண்பதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். சிங்களவர்கள், தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் இலங்கையில் இத்தகைய கொள்கையை எவ்வாறு பின்பற்றமுடியும், முஸ்லிம்களின் மதக் கொள்கையை பின்பற்ற வேண்டாமென நான் கூறவில்லை. பின்பற்ற தனியான கொள்கை உருவாக்கிக்கொள்ள வேண்டுமென்றே குறிப்பிடுகிறேன்.
மேலும் முரண்பாட்டையோ, இனவாதத்தையோ ஏற்படுத்துவது எமது நோக்கமல்ல. முரண்பாடுகள் இருந்தால் அதனை பேசித்தீர்க்க வேண்டும். ஆர்ப்பாட்டங்களோ போராட்டமோ அனைத்திற்கும் தீர்வாகாது.
நாட்டின் அனைத்து இடங்களிலும் புத்தர் சிலைகளை வைக்கவேண்டிய அவசியம் இல்லை. பௌத்த மத கொள்கையில் புத்தர் சிலைகளை அனைத்து இடங்களிலும் வைக்கப்பட வேண்டுமென்று கூறப்படவில்லை. சிலர் மதத்தின் மீதுள்ள பற்றினால் அவ்வாறு செய்யலாம். தமிழர்களை பொறுத்தவரை சிலை வணக்கம் இருக்கிறது. ஆனால் முஸ்லிம்களுக்கு அவ்வாறு இல்லை. எனவே அது முஸ்லிம்களுக்கு பலவகையில் இடையூறாக அமையும். இது மாற்றப்பட வேண்டும். ஆனாலும் சிலைகள் அமைவதற்கு எதிராக அரசியல்வாதிகள்தான் பேசுகின்றனர்.
மக்கள் மத்தியில் எவ்வித கருத்து முரண்பாடும் ஏற்படவில்லை. முஸ்லிம்களும் இதனை எதிர்த்துப் பேசவும் இல்லை எனவும் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்,
Rev. Athuruliya Thero, what u r telling is correct. But the problem is not with Muslims or ACJU. It is the problem of relevant business companies. If an item is not Halal, Muslims will not buy. Likewise, if it is Halal, non-muslims will not buy. So, whose problem is this? Business company has to decide on what to do, to produce both varieties or either one. Muslims or ACJU never tells any company to produce Halal items. So, the people who do not want Halal items, they have to fight against the relevant companies, not against the Muslims or ACJU. I hope you people agree with me.
ReplyDelete