கட்டுகஸ்தோட்டையில் வீதியொன்று கீழ் இறங்கியது (படங்கள்)
(ஜே.எம்.ஹபீஸ்)
கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் பிரதான வீதி ஒன்றின் ஒரு பகுதி இன்று ( 2013 02 11) மாலை சுமார் 60 அடி அளவில் கீழ் இறங்கியுள்ளது.
கண்டி யாழ்ப்பாணம் ஏ-9 வீதியில், கண்டி கட்டுகாஸ்தோட்டை நகரில் அமைந்துள்ள பஸ் தரிப்பிடத்துடன் இணைந்துள்ள பகுதியே இவ்வாறு கீழிறங்கிவுள்ளது.
கடந்த காலத்தில் ஏற்பட்ட கடும் மழை காரணமாக மண் சரிவு அபாயத்தை எதிர்நோக்கிய இப் பிரதேசம் பொல்கொல்லை நீர்த்தேக்கத்தின் வான் கதவுகள் திறக்கப்பட்ட சமயமே கீழிறங்கியுள்ளதாகப் பிரதேசவாசிகள் உறுதிப்படுத்தினர்.
Post a Comment