முதலாவது அழைப்பிதழ் றிசானாவின் குடும்பத்திற்கு..! (படங்கள்)
றிஸானா நபீக் தேசத்தின் புதல்வி எனும் நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபத்திற்கான முதலாவது அழைப்பு (21.2.2013)றிஸானாவின் தாயாருக்கும் றிஸானாவின் குடும்பத்திற்கும் காத்தான்குடி மீடியா போரத்தினால் வழங்கப்பட்டது.
காத்தான்குடி மீடியா போரத்தின் ஏற்பாட்டில் எதிர் வரும் 01.03.2013 வெள்ளிக்கிழமை காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் வைத்து வெளியிடப்படவுள்ள இந்த நூல் மற்றும் இறுவெட்டு வெளியீட்டு வைபவத்திற்கான அழைப்பினை மூதூருக்கு வியாழக்கிழமை சென்ற காத்தான்குடி மீடியா போரத்தின் நிருவாகத்தினர் றிஸானாவின் தாயார் றிஸினாவிடம் கையளித்தனர்.
இதில் காத்தான்குடி மீடியா போரத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான எம்.எஸ்.எம்.நூர்தீன், போரத்தின் செயலாளரும் ஊடகவியலாளருமான மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்த்தபா, மீடியா போரத்தின் பொருளாளரும் றிஸாலா மீடியா நிறுவனத்தின் பணிப்பாளருமான எஸ்.ஏ.கே.பலீலுர் றஹ்மான், போரத்தின் உப தலைவரும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்தின் பிரதி செயலாளருமான ஏ.எம்.சாதிக்கீன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் என்.கே.றம்ழான், மூதூர் ஜிஹாத் ஆசிரியர், மூதூர் ஊடகவியலாளர் முறாஸில், முதூர் முஜீப் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Post a Comment