Header Ads



ஓடிக்கொண்டிருந்த மாணவி கீழே விழுந்து மரணம் - கேகாலையில் சம்பவம்


(அத) கேகாலை, அரநாயக்க ரிவிசத மத்திய மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற இல்ல விளையாட்டுப் போட்டியில் 5,000 மீற்றர் ஓடிக் கொண்டிருந்த மாணவி ஒருவர் திடீரென கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். 

இச்சம்பம் இன்று (26) காலை 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.  கீழே விழுந்த மாணவி உடனடியாக மாவனல்ல வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டார். எனினும் அங்கு அவர் உயிரிழந்துள்ளார். 

இவ்வாறு உயிரிழந்த மாணவி உயர் தரத்தில் கல்வி பயிலும் 18 வயதான ஹசினி அனுசா குமார என பொலிஸார் தெரிவித்தனர்.  மாணவியின் உடல் பிரேத பரிசோதனைகளுக்காக மாவனல்ல வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 

இவ் உயிரிழப்பு தொடர்பான மேலதிக விசாரனைகளை அரநாயக்க பொலிஸார் மேற்கொண்டுள்ளனர். 

No comments

Powered by Blogger.