கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் வீதி அபிவிருத்தி
(எம்.எம்.ஏ.ஸமட்)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீனின் வேண்டுகோளுக்கிணங்க கல்முனைக்குடி கடற்கரைப் பள்ளிவாசல் வீதி கடந்த 10 வருடங்களின் பின்னர் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ் உதுமாலெவ்வையின் நிதி ஓதுக்கீட்டினால் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.
மிகவும் பிரசித்திபெற்ற இவ்வீதி அரசி;யல் தலையீடுகள் காரணமாக கடந்த ஒரு தசாப்தத்துக்கும் மேலாக மழைகாலங்களில் வெள்ளம் நிறைந்தும் வெயில் காலங்களில் குன்றும்குழியுமாக அபிவிருத்தி செய்யப்படாது காணப்பட்டு வந்துள்ளது.
இதனால் இவ்வீதியைப் போக்குவரத்துக்காகப் பயன்படுத்தும் பாதசாரிகளும் வாகன ஓட்டுனர்களும் மிகவும் சிரமத்தை எதிர்நோக்கிள்ளனர். குறிப்பாக வருடந்தோரும் நடைபெறும் கடற்கரைப் பள்ளிவாசல் கொடியேற்ற விழாக் காலங்களின் போது இவ்வீதியினூடாக தினந்தோரும் நூற்றுக்கதியமான வாகனங்களும் நாட்டின் பல பிரதேசங்களிலிருந்தும் வரும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் மிகவும் அசௌகரியத்துடனே பயணத்து வந்துள்ளனர்.. ஏதிர்வரும் ஏப்ரல் மாதம் 11ஆம் திகதி கடற்கரைப்பள்ளி கொடியேற்ற விழா ஆரம்பிக்கவுள்ள நிலையில் அதற்கு முன்னர் இவ்வீதியை அபிவிருத்தி செய்து முடிக்க உத்தேசித்துள்ளதாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரியொருவர் குறிப்பிடார்.
39 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ள இவ்வீதி அபிவிருத்திக்கான அங்குராப்பண விழா எதிர்வரும் புதன்கிழமை(27) மாலை 4 மணிக்கு கல்முனைக்குடி கடற்கரைப்பள்ளிவாசல் வீதியிலுள்ள ஆட்டோ பஸார் சந்தியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் தலைமையில் நடைபெறவுள்ளது. இவ்வங்குராப்பண விழாவில் கிழக்கு மாகாண சபை அமைச்சரவைப் பேச்சாளரும் வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ். உதுமாலெவ்வை பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம். ஜெமீல் கௌரவ அதிதியாகவும் கல்முனை மாநகர சபை மேயர் சிறாஸ் மீராசாஹிப் சிறப்பு அதிதியாகவும் மற்றும் கல்முனை பிரதேச செயலாளர் அம்பாறைப் பிராந்திய வீதி அபிவிருத்திக்கான சிரேஷ்ட பொறியிலாளர் உட்பட பல அதிகாரிகளும் கலந்துகொள்ளவுள்ளதாக விழா ஏற்பாட்டுக்குழுவினர் தெரிவித்தனர்.
கல்முனை கொடியேற்று விழாவுக்கு முதலில் மூடுவிழா வைத்துவிட்டு பாதை, ஊர் அபிவிருத்தி எல்லாம் செய்தால் இறைவநின் நற்கூலியும் இந்த பாதைக்கும், கல்முன்னை தொகுதிக்கும் நல்ல பறக்கத் கிடைக்கும். அல்லாவிட்டால், கல்முனை குடியின் கொடியேற்று விழா தொடரும் வரை, இந்த கல்முனை தொகுதிக்கே ஒரு பாரிய முசீபத்தும், இறைவனின் கோபப்பார்வைகளில் இருந்து மீழ முடியாத நிலையும்தான் தொடரும். இந்த 22ஆம் நூற்றாண்டிலும் திருந்தாத கல்முனை குடி சமூகம்....... சொல்லவே அசிங்கமாக இருக்கு. கல்முனைகுடியின் 22ஆம் நூற்றாண்டின் இழைஜர்கள் எங்கே??? அவர்களும் அண்தக்கொடியேற்று போதயில் மூழ்கிவிட்டர்களா???
ReplyDeleteபாடசாலை செல்லும் மாணவர்கள் பயன்படுத்தும் எத்தனையோ வீதிகள் (eg . பிரபல்யமான ரெண்டு பாடசாலைகள் அமைந்துள்ள வீதி.) நாசமாக இருக்க, பணமும் செல்வாக்கும் தரும், காற்று வாங்குபவர்கள் தவிர யாரும் பாவிக்காத வீதிக்கு அபிவிருத்தி. திருந்தாத ஜென்மங்கள்..
ReplyDelete@slahy
என்பா ஜோக் அடிகிறீன்களா? அப்படியெல்லாம் உணர்ச்சியுள்ள இளைஞர்கள் ரொம்ப ரொம்பக் குறைவு. அவங்க "உம்மா சொல்லத் தட்டக் கூடாது" என்ற இஸ்லாமிய போதனையை மதித்து, "மஹர்" கொடுக்கச் சொல்லும் அல்லாஹ்வின் போதனையை மிதித்து "சீதனம்" வாங்கும் துடிப்புள்ள(?) இஸ்லாமியச் சிங்கங்கள்பா.. (எல்லோரையும் சொல்லல- majority) இல்லாட்டி மாப்பிள்ளைக்கு குறை இருக்கெண்டு சொல்லிடுவாங்க இல்ல..