Header Ads



கமலை பாராட்டுகிறேன்..! விஸ்வரூபம் திரையிடப்படவேண்டும்..!


(ரவூப் ஹஸீர்)

சர்ச்சைக்குறிய மேற்படி திரைப்படத்தை முழுமையாக இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன திரைக்கூடத்தில் பார்த்துவிட்டு வந்த நேரத்தில் இருந்தே எனக்குள் இதனை  எழுதுவதா இல்லையா என்கிற போராட்டம் இருந்தது. படத்தை பார்த்தவர்கள் , பார்க்காதவர்கள் என்று எத்தனையோ பேர் எதிர்ப்பாகவே இருந்துவிட்டார்கள் , எழுதிக்குவித்துமுள்ளார்கள். 

இப்போது சில காட்சிகளை நீக்கிவிட்டும், குர்ஆன் ஓதப்படும் ஒலிகளை கத்தரித்துவிட்டும் படத்தை வெளியிட இஸ்லாமிய இயக்கப் பிரதிநிதிகள் இணங்கியுள்ளதாகவும் சமரசம் எட்டப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இந்த சமரசத்தை கொண்டுவர கமல் இன்னும் எத்தனை கோடிகளை செலவளித்துள்ளாரோ தெரியாது..!

காட்சிகளை நீக்கிவிட்டு என்பதில் எனக்கு உடன்பாடே கிடையாது. இன்னும் சில காட்சிகளை சேர்த்து வெளியிடுவதாயின் ஒத்துக்கொள்ளுவேன்.   

இங்கு நான் எழுதுவது  என்னுடைய கருத்துகளே. எனக்கும் கருத்துச்சுதந்திரம் உண்டு. வாசித்துவிட்டு என்னை தோல் வேறு சதை வேறாக உறிக்காமல் உங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்வீர்கள் என்று நம்புகிறேன். 

என்னுடைய பார்வைக்குள் நான் நுழைவதற்கு முன்னால், வேறு ஒரு விஷயத்தை முதலில் சொல்லியாக வேண்டும். படத்தை பற்றி எனது சகோதரரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவுப் ஹகீம் என்னிடம் கேட்டபோது " எக்காரணம் கொண்டும் இப்படம் இன்றைய சூழ்நிலையில் இலங்கையில் திரையிடப்படவே கூடாது . புது பாலா சேனா போன்ற இனவாத பிரசாரகர்களுக்கு இது மெல்லுகிற வாய்க்கு அவல் கிடைத்த கதையாகிவிடும்" என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளேன். கடந்த 01.02.2013 அன்று நடைபெற்ற மு.கா அதி உயர்பீடக்கூட்டத்திலும் அவர் இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.   
இன்னுமொரு விசயத்தையும் முதலிலேயே குறிப்பிட்டு விடுகிறேன்.

சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் இந்தியாவை சேர்ந்த பிரபல எழுத்தாளர் , பதிப்பாளர் மற்றும் உளவியல் நிபுணர் டாக்டர் ஹிமானா சையித் அவர்களுடனான கலந்துரையாடல் ஒன்று " தாருஸ்ஸலாமில்" இடம் பெற்ற போது அவரிடம் நான் இவ்வாறு கேள்வி எழுப்பினேன்.

" சென்னையில் , மதுரையில் , அல்லது திருச்சி போன்ற தமிழ் பேசும் மக்கள் வாழும் ஏதாவது ஒரு இடத்தில் முஸ்லிம் பயங்கரவாதிகள் எப்போதாவது  குண்டு வைத்துள்ளார்களா? உண்மை அப்படி இருக்கையில் ஏன் அநேகமான திரைப்படங்களில் காஸ்மீர் , பாகிஸ்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகள் தமிழ் நாட்டில் குண்டு வைக்க முயற்சிப்பதாகவும், ஒரு ஹிந்து அதனை கண்டுபிடித்து அப்பாவிப் பொதுமக்களை காப்பாற்றி பதக்கம் பெறுவதாகவும் காட்டப்படுகிறது ? இதை ஏன் உங்கள் மக்களும் இயக்கங்களும் எதிர்க்காமல் இருக்கிறீர்கள்? 

விடுதலைப் புலிகள், கொழும்பு உட்பட இலங்கையின் பல நகரங்களிலும் குண்டு வைத்தும் அனுராதபுர புனிதப் பிற தேசத்தில் பௌத்த பிக்குகளை கோரமாக கொன்றும், கண்டியில் தலாதா மாளிகை என்கிற மிகப்புனிதமாக கருதப்படுகிற கோவிலை குண்டு வைத்து தகர்த்தும், வயல் வெளிகளில் வேலை செய்துகொண்டும், இரவு வீடுகளில்    உறக்கத்திலும் இருந்த அப்பாவி பொதுமக்களை வெட்டியும் அரிந்தும் கொலைசெய்து.. இப்படியாக ஒரு பட்டியலே இருக்கும் போது, ஒரு  சிங்கள திரைப்படம் கூட தமிழ் சமூகத்தை முழுமையாக  பயங்கரவாதிகளாக காட்டியதுமில்லை, இந்து சமயத்தை பயங்கரவாத செயற்பாடுகளுடன் இணைத்ததுமில்லை. (இதுபற்றி சிறிது விரிவாக பிறிதொரு சந்தர்பத்தில் தனியாக எழுத எண்ணியுள்ளேன்.) இந்த முஸ்லிம்களை மட்டுமே பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் தமிழ் திரைப்படத் துறையினருக்கு  உங்கள் எதிர்ப்பை இனிமேலாவது காட்டுங்கள்" என்றேன் . 
அன்று அங்கிருந்த நஜிமுதீன் ( விடிவெள்ளி ஆசிரிய குழாம் ) நிலாம் ( தினக்குரல் ஆசிரிய பீடம் ) என்போர் அப்போது பல ஆதாரங்களுடன் என் கருத்துக்கு  வலு சேர்த்தார்கள் .

இது ஒரு வருடத்திற்கு முன்னர் நிகழ்ந்தது .

இந்தியா போனதும் தனது பத்திரிகையில் இதுபற்றி எழுதுவதாகவும் , உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் ஹிமானா செய்யித் சொன்னார் . ஆனாலும் ஏதாவது செய்தாரா என்பது பற்றி எதுவுமே தெரியாது . 

பரவாயில்லை , ஒரு வருடம் கழிந்தாவது  இப்போது விழித்துக் கொண்டார்களே என்கிற அளவில் முன்னரே இதை சுட்டிக்காட்டியவன் என்கிற பெருமையில் நான் என் சட்டை காலரை கொஞ்சம் தூக்கிவிட்டுக் கொள்கிறேன் . 

"ஓகே ! இப்போதைக்கு என்னை சுற்றி ஒரு காவலரணை அமைத்துக் கொண்டாயிற்று " என்கிற நம்பிக்கையுடன் " விஸ்வரூபம் " பற்றிய என் பார்வைக்குள் நுழைகிறேன். 

பொதுவாக எல்லோரும் சொல்லும் பின்வரும் குற்றச் சாட்டுக்களை நான் ஒத்துக்கொள்ளப்போவதில்லை . ( வாசித்துவிட்டு முடியுமானால் எனது கொடும்பாவியை எரியுங்கள் . நானும் பிரபலமாகிவிடுவேன் )

· தொழுதுவிட்டு பயங்கரவாத செயல்களில் இறங்குவதாக காட்டுவது பிழை .

· தூக்கிலிடும் சந்தர்பத்திலும் , போரில் ஈடுபடும்  சந்தர்பங்களிலும் "அல்லாஹு அக்பர் " சொல்வதாக காட்டப்படுவது  பிழை .

· பல இடங்களில் குர்ஆன் பயங்கரவாத செயற்பாட்டாளர்களால் ஓதப்படுவதாக காட்டுவது பிழை .

· குழந்தைகளுக்கு  துப்பாக்கி பற்றிப் படிப்பிப்பதாக காட்டுவது பிழை .

· மருத்துவம் படிக்க விரும்பும் மகனை " நீ ஜிஹாத் போராளியாகத்தான் உயர வேண்டும் " என்று சொல்வதாக காட்டுவது பிழை .

( அவசரப்படாதீர்கள் , கீழே இதே * குறியீட்டுடன் இவை ஒவ்வொன்றிற்குமான என் பக்க நியாயங்களை எழுதவுள்ளேன்  )

இன்னும் குற்றச்சாட்டுகள் நிறைய சுமத்தப்பட்டாலும் இவைதான் பாரிய குற்றங்களாக பரவலாக சொல்லப்படுகின்றன . இவற்றில் எந்த நியாயத்தையும் என்னால் காண முடியவில்லை . 

தலிபான்கள் யார்...? 

அவர்கள் இஸ்லாத்தை அழிக்க  செயற்படும் யூத - அமரிக்கர்களுக்கு எதிராக செயற்படுபவர்கள் . இஸ்லாத்திற்காக உயிரையும் தியாகம் செய்வதற்காகப் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். எந்த அளவிற்கு இந்த தியாக உணர்வு அவர்களின் இரத்தத்தில் ஓடி , தசையில் ஊறி , நரம்புகளில் ஜீரணமாகி ......இருக்கிறது என்பது நமக்குத் தெரியாததல்ல. 

எந்த விதத்திலும் .அமெரிக்காவின் இந்த இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகளால் நேரடியாக பாதிக்கப்படாத இலங்கை , இந்திய முஸ்லிம்களாகிய நாமே எத்தனை அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறோம் .தொண்டை கிழியக் கிழிய " நாரேதக்பீரும்" " அல்லாஹு அக்பரும் " முழங்கி இருக்கிறோம் . அமெரிக்காவின் , புஷ்சின் , ஏரியல் ஷேரோனின் , ஒபாமாவின் எத்தனை கொடும்பாவிகளை எரித்து அந்த புகை மூட்டத்துள் குதித்துக் குதித்து ஆடியிருக்கிறோம்  . அமெரிக்காவின் எத்தனை தேசியக் கொடிகளை கிழித்து, கால்களால் துவைத்து துவம்சம் செய்திருக்கிறோம் . எத்தனை அமெரிக்க எதிர்ப்பு கட்டுரைகள் எழுதி இருப்போம் , கவிதைகளில் கொந்தளித்திருப்போம் .
நேரடிப்பாதிப்புக்கு ஆளாகாத நாமே இப்படியெல்லாம் செய்திருக்கும் போது , இன்னும் செய்ய இருக்கும்போது , அமெரிக்க , நேட்டோ தாக்குதல்களில் தன் தாய் , தன் செல்லக் குழந்தை , குடும்பம் , சுற்றம் எல்லாமே தலை சிதறி , கைகால்கள் எல்லாம் துண்டம் துண்டமாகி  இறந்து கிடைப்பதை நேரில் கண்ட ஆப்கானிக்கு,.

தன் வீடும் , கடையும் , அலுவலகமும் சுக்கு நூறாகி சாம்பல் மேடாகி விட்டதை  தாங்கிக் கொள்ள முடியாத ஆப்கானிக்கு  எவ்வளவு ஆவேசமும் ஆத்திரமும் இருக்கும் . 

முஸ்லிம்களின் ஈமான் மிகவும் பலம் வாய்ந்தது , ஏனைய மதத்தவர்களை போலல்லாது இஸ்லாத்திமீது அளவுகடந்த இறுக்கம் முஸ்லிம்களுக்கு உள்ளது . இஸ்லாமியர்கள் இலகுவில் மதம் மாறுபவர்களே அல்ல . நாடு , நிலம் , கடல் கடந்து இஸ்லாம் என்கிற கயிற்றால் இறுக்கமாக  பிணைக்கப்பட்டவர்கள் . சத்தியமும் , விஞ்ஞானமும் நம்பகத்தன்மையுடன் குர்ஆன் , ஹதீதில் இருப்பதால் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வை பூரணமாக விசுவாசித்து இஸ்லாத்தை காப்பாற்ற உயிரையும் இழக்க சித்தமாக உள்ளான் .   
பாலஸ்தீனில் விமானத் தாக்குதல் நடந்தாலும் , காஷ்மீரில் குண்டு வெடித்தாலும் , ஆப்கானிஸ்தானில் போர் நடந்தாலும் தன் வீட்டில் , தன் தோட்டத்தில் நடந்தது போல் ஒரு முஸ்லிம் பதறுகிறான் . உடுக்கை இழந்தவன் கை போல் அவன் ஆகிறான்.

இஸ்லாத்திற்கு எதிரான இப்போரில் தானும் கலந்துகொண்டால் , அந்த ஜிஹாதில் புனித மரணம் எய்தி , அல்லாஹ்வுக்காக உயிர்த்தியாகம் செய்தால் சுவர்க்கம் நிச்சயம் என்று நம்புகிறான்.

இதற்க்கெல்லாம் அடிப்படை அவனின் ஈமான்.. . 

ரஷ்யா - ஆப்கான் போர் நடந்தபோது இறைவனை முழுமையாக மறுதலிக்கும் , கம்யுனிச கழுகுக்கெதிராக ஜிஹாத் ஆப்கானில் சிறகுவிரித்தது . அமெரிக்கா தனது சுயநல அஜென்டாவை மிகவும் சூட்சுமமாக அரங்கேற்றியது . ஒசாமா பி லாடன் என்கிற ஜிஹாதியை வலுப்படுத்தியது .பிறகு நடந்ததெல்லாம் அநேகருக்குத்தெரியும். விரிவஞ்சி விடுகிறேன் . 

தலிபான்களின் கருதுகோள் சரியோ பிழையோ என்பதல்ல இங்குள்ள பிரச்சினை . இஸ்லாத்தை அழிக்க முயலும் சியோனிஸ சக்திகளுக்கெதிரான அல்லாஹ்வுக்கான போராட்டம் இது என்றே சொல்லப்படுகிறது . அதை நம்புகிற ஆப்கானியர்களும், பிற தேசத்து முஸ்லிம்களும் அதில் இணைந்து போராடி புனித மரணம் எய்த தலிபான்களாகின்றனர். 

ஈமான் என்கிற உணர்வு அளவுகடந்து அவர்களுள் ஆட்சி செய்வத்னாலேயே அவர்கள் தலிபான் போராளிகளாகின்றனர். இந்த பின்னணியில்தான் நான் மேலே சரி கண்ட விசயங்களை நீங்கள் நோக்கவேண்டும்.

· மிக சாதாரண முஸ்லிமாகிய நாமே ஒரு காரியத்திற்காக வெளியிறங்கும் போது இரண்டு ரகாஅத்து  தொழுதுவிட்டே புறப்படுகிறோம். அல்லாஹ்விற்காக , அவனின் இஸ்லாத்தை காப்பதற்காக வெளியிறங்குகிறேன் என்கிற நிய்யத்துடன் புறப்படுகிற ஜிஹாதி தொழாமலா புறப்படுவான் . உண்மையை உண்மையாக காட்டியிருக்கிறார் கமல் . ஈமானின் பலத்தை தெளிவாகச் சொல்லியிருக்கிறார் கமல் . முஸ்லிம்கள் இவ்வளவு தூரம் அல்லாஹ்வை விசுவாசிக்கிரார்கள் , அவர்கள் சாமானியமான வர்கள் அல்ல என்பதை சொன்னதற்கு கமலை பாராட்டவேண்டாமா . ( "அடிடா இவனுக்கு கல்லு "  என்று யாரோ சொல்வது கேட்கிறது .)  

சாதாரண அரசியல் கூட்டத்திலேயே " நாரே  தக்பீர் " முழங்குபவர்கள் அல்லவா நாம் . அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் எதிலாவது " அல்லாஹு அக்பர் " சப்தம் ஓங்கி ஒலிக்காமலிருந்ததுண்டா? இப்போது உங்கள் கல்பில் கை வைத்து சொல்லுங்கள் , விரோதியென தலிபான்கள் இனம்காண்கிற ஒருவனை ( அந்த  மனிதன் சூழ்நிலைக் கைதி - கமல் ஏற்றுள்ள பாத்திரந்தான்  இங்கு உண்மையான துரோகி என்பது வேறு கதை ) அதுவும் நேட்டோ விமானங்களுக்கு முஸ்லிம் போராளிகளின் மறைவிடத்தை காட்டிக்கொடுத்தவனுக்கு , பலர் அநியாயமாக உயிர் இழப்பதற்கு காரணகர்த்தாவாக இருந்ததாக நம்பப்படுபவனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும்போது அவர்கள் அல்லாஹு அக்பர் சொல்வதில் என்ன பிழை ! நாறேதக்பீரும் , அல்லாஹு அக்பரும் வெறுமனே தேர்தல் மேடைகளுக்கும் , ஆர்ப்பாட்ட ஊர்வலங்களுக்கும் மட்டுந்தானா ஆகுமானது ? 
இஸ்லாமியர்கள் "அல்லாஹ்வுக்காக" என்று வரும்போது சுற்றம் , உறவு ,நட்பு , ரத்த பாசம் எல்லாவற்றையும் ஒதுக்கிவைத்துவிடுவார்கள் என்பதை இங்கு கமல்ஹசன் சொல்வதில் நாம் பெருமைப்பட வேண்டாமா..?

நிறைய இடங்களில் குர்ஆன் ஓதுவதை காட்டுகிறார் கமல் . ஒரு முஸ்லிமின் வாயில் "அல்லாஹ்வின் கலாம்" எந்நேரமும் இருக்கும் என்பதை அவர்சொன்னால் பிழை . நாம் சொன்னால் சரியா ? தமிழர்களில் எத்தனை பேருக்கு அவர்களின் இந்து மத சுலோகங்கள் தெரியும் . அதை அவர்கள் அன்றாட வாழ்க்கையில எங்காவது சொல்லிவருகிரார்களா ? ஆனால் ஒரு முஸ்லிம் அப்படியல்ல அவன் தெருவில் நின்றும் ஒதுவான் , பஸ்ஸில் பிரயாணம் செய்யும்போதும் ஒதுவான் , தூங்கச்செல்லும்போதும் ஒதுவான் , தூங்கி எழுந்ததும் ஒதுவான் இதுதானே நடைமுறை . இந்த பக்தியை தெளிவாக காட்டியிருப்பதில் என்ன பிழை ! 

ஒரு மருத்துவன் தன் பிள்ளையை தன்னைவிட சிறந்த மருத்துவனாகவும்  , ஒரு வழக்கறிஞ்ஞன் தன் பிள்ளையையும் உயர் வழக்கறிஞ்ஞனாகவும் உருவாகுவதென்பதே இன்று நிகழ்ந்துகொண்டிருக்கிறது. தனது மகனை ஜிஹாத் போராளியாக  ஆக்குவதற்காக  (அவனை வைத்து சம்பாதிக்க, சுக போகங்களை சுகிக்க அல்லாமல் , அல்லாஹ்வுக்காக இழக்க) கனவுகாணும் ஒரு தந்தை, தன் மகனுக்கு இருக்கும் ஆயுதங்கள் பற்றிய அறிவை துப்பாக்கி , தோட்டாக்களை கொண்டு சோதித்து ,மற்றவர்களுக்கு முன்னாள் மகனின் திறமையை பெருமையாக காட்டிக் கொள்வதில் அப்படி என்ன பிழை இருக்கிறது ?  

ஈன்ற பொழுதினும் பெரிதுவக்க , தன் மகனை சான்றோன் எனக்காட்டுவது குற்றமா?

வாழ் நாள் வரமாக கிடைத்த மகனை , அல்லாஹ் கனவில் சொன்னான் என்பதற்காக  அறுக்கத் துணிந்த இன்றாஹீம் நபியின் கதையை எத்தனை குத்பாக்களில் சொல்லியிருப்பார்கள் . அதற்காக நாம்  தியாகத்திருநாள் என்று ஒரு பெருநாளையே கொண்டாடுகிறோமே . மருத்துவனாக கனவுகாணும் மகனை இஸ்லாத்தை காப்பதற்காக போராளியாக  ஒரு தந்தை தியாகம் செய்ய துணிந்ததில் இப்போது எப்படி பிழை காண்கிறீர்கள்? 

எல்லா அரசியல் தலைவர்களும் நாட்டுக்கொரு நீதியும், தன் குடும்பத்திற்கொரு நீதியுமாக நடந்து கொள்ளும் போது " ஊருக்கு மட்டுமல்ல உபதேசம் உனக்குமதுதானடி" என்கிற முல்லா ஓமரின் தலைமைத்துவப் பண்பை காட்டுகிற கமலை பாராட்ட வேண்டாமா ? இஸ்லாமிய சரித்திரத்தில் உள்ள இது போன்ற தியாக சம்பவங்களை  நாம் மிம்பர்களில் கதைத்ததெல்லாம் மறந்துவிட்டதா ?    

மலாலா என்கிற சிறுமிக்கு இவ்வளவு புகழும் , நோபல் பரிசு கொடுக்கவேண்டும் என்கிற குரல்களும் ஏன் ? படிப்பை விடவும் போராட்டம் இப்போது முக்கியம் என்கிற தலிபான் கொள்கைக்கான மலாலாவின் எதிர்ப்புத்தானே  தானே அவளுக்கு இவ்வளவு புகழும் வருவதற்கு காராணம் . தலிபான்கள் எதை சொல்கிறார்களோ அதைத்தானே கமலும் காட்டியிருக்கிறார் . உண்மையை சொன்னால் உங்களுக்கு உறைக்கிறதோ ! ( "எடுடா அரிவாளை " என்று அப்போது கல்லுப் பொறுக்கப் போனவனை கூப்பிடுவது போல் தெரிகிறதே !)  

சரி .... என்னுடைய வாதங்கள் இத்தோடு முற்றுப்பெறுகின்றன.

எனக்குத்தெரியும் ......

இதுவரையிலும் , என் பக்க நியாயங்களை வாசித்துக்கொண்டிருந்த மகாசனங்களின் மக்கள் நீதி மன்றத்தில் எனக்கான மரண தண்டனையையும் நீங்கள் விதித்தாகிவிட்டது.  

எந்த ஒரு மரணதண்டனை கைதியிடமும் அவனது கடைசி விருப்பத்தை கேட்பது வழக்கமல்லவா! 

" ஏய் ...முனாபிக்கே ! உன்னை கல்லால் அடித்துக் கொள்ள முன் உன் கடைசி விருப்பத்தை சொல்லுடா " என்று யாரோ கத்துவதும் கேட்கிறது .  

இதோ ...இ(அ)ப்பாவியின் கடைசி விருப்பம் .

" பின்வரும் காட்சிகளை இப்படத்துடன் இணைக்குமாறு நான் கேட்டுக்கொண்டதாக கமலிடம் சொல்லுங்கள் .அதற்கு அவர் இணங்காத விடத்து படத்தை எக்காரணம் கொண்டும் வெளியிடவே முடியாது என்று ஜிஹாத் செய்யுங்கள் !

1. அமெரரிக்க - நேட்டோ படைகளின் அராஜக குண்டு வீச்சுகளால் துண்ட துண்டமாய் சிதறும்  அப்பாவி குழந்தைகள் , பெண்கள் , வயோதிபர்களின் காட்சி.

2. சாம்பல் மேடாகியுள்ள பள்ளிவாசல்களுக்கு முன்னால் , வெறும் கற்குவியல்களுக்குள் சுஜூது செய்து தொழும் ஈமாந்தாறிகளின் காட்சி . 
   
3. இரத்த வெள்ளத்தில் மிதக்கும் உறவுகளின் மையத்துகளுக்கு முன்னாள் கதறித்துடிக்கும் சிறுவர்களின் பிஞ்சு உள்ளங்களில் முளைவிடும்  ஜிஹாத் உணர்வுகளின் எழுச்சிக் காட்சி .

4. குர்ஆனை கிழித்துவீசி , அதன்மேல் சிறுநீர் கழித்து எரித்து மகிழும் அமெரிக்க - நேட்டோ வெறியர்களின் காட்சி.

5. அசிங்கங்கள் நிறைந்த அந்நிய கலாச்சாரத்தை  , ஆங்கிலக் கல்வி என்கிற பசுத்தோலுக்குள் பதுக்கி அறிமுகப்படுத்தும் சியோனிச ராஜாதந்திரத்தை தோலுரிக்கும் ஒரு காட்சி .

புதிதாக மீண்டும் இவற்றை எல்லாம் படமாக்க நீண்ட காலம் , பணம் எல்லாம் தேவை என்று காரணம் சொல்லி கமல் நிச்சயமாகவே தப்பிக்க முயற்சிப்பார்.
அதற்காக பணமோ , காலமோ அவசியமே இல்லை இதோ இருக்கிறது , நிஜக்காட்சிகள், அள்ளியெடுத்துக்கொள்ளுங்கள் என்று இணையத்தை திறந்துகொடுங்கள் . " 

என் கடைசி விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இதோ உங்கள் கல்லெறிகளுக்காக நெஞ்சு  திறந்து நிமிர்ந்து நிற்கிறேன்  நான். 
வாருங்கள் !    
    
                 

20 comments:

  1. மிக அட்புதமான சிந் தனையும் தூர நோக்கும் உங்கள் கட்டுரை வரவேட்கத்தக்கது

    ReplyDelete
  2. இந்த தலைப்பை பார்க்கும் போது வியப்படைத்தேன்.உண்மையில் நம் சமுதாயத்தில் வேறு விதமாக யோசிக்கிறேன் என்ற பெயரில்,தன்னை பிரபல்யமாக்க பலர் இருக்கிறார்கள்,என்பதை வாசிக்கும் போது விளங்கியது.அந்த வரிசையில் ஷர்மிளா செய்யத் இற்கு அடுத்தபடியாக ரவூப் ஹஷிர் இணைந்துள்ளார்.ஏன் நம் சமூகம் இப்படி யோசிக்கிறதோ? உண்மையில் எந்த ஒரு தவறையும்,அறிவு பூர்வமான வாதட்டதினால் சரியாக்க முடியும்...............அதையே இங்கு அவர் செய்து உள்ளார்.

    இப்படி படித்தவர்கள்,விஷமதனமான கருத்துகளை சமுதாயத்தின் மீது திணிக்கின்றனர்.
    இதில் அவரது பெருமை வெளிப்படுகிறது.முதலில் இவர்களை அழிக்க வேண்டும்.

    இவர்களுக்கு வாய்பளித்த jaffna muslim இணை வன்மையாக கண்டிக்கிறேன்....

    ReplyDelete
  3. நிட்சயமாக ஹஸீரின் ஆதங்கம் நிதார்சனம் உண்மை. உண்மையை சொன்னால் கண்டிப்பா நம்ம மக்கு மக்களுக்கு பிடிக்காது.

    சர்மிளா ஸெய்யித் உடன் உங்களையும் பின்னி பிணைப்பார்கள் நம்ம மூட மந்தயர்கள்... ஜாக்ரத...

    ReplyDelete
  4. நன்றி, கல்லெறி கொடுத்ததை விட, கல்லெறி வாங்கிய முஸ்லிம்களே இலங்கையில் அதிகம். கட்டுரையின் முடிவின்போது நல்ல விடையங்களையே சொல்லியிருக்கிறீர்கள்.
    தன் கூட்டில் கால்வைத்தால் கடியன்தான் என்ன கடியாது விட்டு விடுமா? , ஒரு ஜிஹாதியம் அல்லது ஒரு போர் உருவாக இருந்த நியாயங்களை சொல்லிவிட்டு அதன் நிலைப்பாட்டை சொன்னால் அது பிழையாகாது.
    இருந்தும், பணம் வாங்கிக்கொண்டு அல்குர்-ஆனை கற்றுக்கொடுப்பதே பிழை என எண்ணும் எம்மார்க்கத்தில், வியாபார நோக்கத்துக்காய் அரைகுறை ஆடைகளோடு ஒரு காட்சி பின் குர் ஆன் வசனங்களோடு இன்னுமொரு காட்சி என தயாரிக்கப்படும் படங்களை என்றோ நாம் எதிர்திருக்க வேண்டும். ஆனால் குடும்பத்தோடு இருந்து ஆபாசபடங்களினூடாய் கலையுணர்வை வளர்த்துக்கொள்ழும் எம் மத்தியில் எதையும் ஆட்சேபிப்பதில் குற்றமில்லை.

    ReplyDelete
  5. vaaaaaaaaaaaaw very brliand thinkinig

    ReplyDelete
  6. நீங்கள் ஏன் சும்மா வார்த்தைக்கு வார்த்தை கல்றெறி, கொல் என்று உளறுகிறீர்கள்.

    அதெல்லாம் உங்களுக்குச் செய்வார்களா எம் பலம் பொருந்திய ஈமானிய சகோதரர்கள்?

    யார் நீங்கள்? முதலில் நீங்கள் ஆண். அடுத்தது நீங்கள் நீதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவருமான ரவூப் ஹக்கீமின் சகோதரர்.

    ஆணாக இருப்பதே உங்களுக்குப் பலம். அதிலும் அரசியல் பிண்னணியோடு இருப்பதால் யாரும் உங்களை எதுவும் செய்யமாட்டார்கள். பயப்பட வேண்டாம்.

    நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால் இந்தப் பயம் நியாயமானது.

    தொழாதவர்கள், தொழுவது எப்படி என்று தெரியாதவர்கள்கூட வாரிச்சுரிட்டுக் கொண்டு ஓடிவருவார்கள். கல்லெறியக் கொல்ல, தோல் உரித்துத் தொங்கவிட.... இன்னும் என்ன வேண்டுமோ சொல்வார்கள். இந்த தைரியமெல்லாம் பெண்ணிடம்தான்.

    ஆதலால் உங்களைப் போன்றவர்கள் அச்சப்பட வேண்டியதில்லை.

    உங்கள் துணிச்சலை அல்ல, கட்டுரையைப் பாராட்டுகிறேன். எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. எல்லா உள்ளங்களையும் அவன் மட்டுமே நன்கறிந்தவன்.

    ReplyDelete
  7. u r right.but in sri lanka sltj issued many statements , held meetings with budhist clergies and issued dvd s all to explain them the one thing The Haraam and Halaal.results still remains zero.so in a tense situation like this this film will provoke and implant a racial criticism of islam for sure.coz they can understand but they dont want to understand purposly.all what they looking for is tiny cloud of smoke to fuel more.like u said the movie is right but the view of the racialist over the film wont be right.

    ReplyDelete
  8. SAKOATHARAR RAUF HASHEER!MUTHALIL UNKALIN THUNIWAPPAARAATTHUKIREAN.UNKAL KARUTTHU WITTHIYAASAMANA ORU KOONATTHIL SINTHITTHU ,ELUTHAPPADDU ELUTHAPPADDULLATHU.NALLA KARUTTHUKKALTHAAN.PAARADDUKINREAN.BUT UNKAL KARUTTHUKKAL, ISLAAMIYA ARIVUM SINTHANAYUM ULLAWARKALAAL MADDUME EATTHUKKOLLAPPADALAAM.PAAMARAMAKKLUKKUM ANNIYA MTHATTHINARUKKUM(NONMUSLIMS)KAMALIN WISWAROOPAM PADATTHIL WARUM SARCHAIKKURIYA KAATCHIKALUM KARUTTHUKKALUM ISLAM PATRIYA,NALLA ENNAKKARUKKALAI WALANKA MAADDATHU.MAARAAKA ISLAAM PATHRIYA MOOSAMAANA ENNAPPATHIWAYE ANNIYA MATHATTHINARUKKU EARPPADUTTHM.SO UNKAL KARUTTHUKKAL SOLLAPPADDA NEARAMUM IDAMUM PORUTTHAMATTRA ONRAAKUM.,,MAATTAMAAKA SEYATHPADU.PIRAPALYAMADAIWAAY,,ENRA ORU ARABUMOLIKKOTTRUKKU EARPA SINTHITTHEERKALO THIRIYAWILLAI.

    ReplyDelete
  9. இஸ்லாத்தை பற்றி தெரிந்தவர்களுக்கு நீங்கள் சொல்வது சரி அதை பற்றி தெரியாதவர்களின் நிலை என்ன அவர்கள் இஸ்லாத்தை பற்றிய நோக்கத்தை எவ்வாறு புரிந்து கொள்வார்கள்....

    ReplyDelete
  10. Sahotharare !! Neengal kuruwethu waasthewem thaan, muslimaahiye naangal ungalaipol sinthikkalaam aanal muslim allathe oruwer intheth thiraippadeththai paarthal awer neengal kuruwathaippol sinthithu muslimkal meethu nal awippraayem kolwaar enbathu enna nicheyem ?? Neengal unmayaahewe inthap padeththai mulumaiyaahe paartheerhala ?? Muslim penkal aniyum niqabei aankal aninthu thatkolai thaakuthel nadethuwethu poondre kaatchihalai neengal paarkewillaya ?? awerhalathu uyirai kaapaatruwethetkaahe penkalayum siruwerhalayum paliyaakkum kaatchihalai paarkke willaya ?? aen iwetrai patri kuure marenthu witteerhal ?? ik kaatchihalukkaane ungalathu niyaayem enna ?? Iwetrai anniyerhal paarththaal emethu nilai enna ?? Padethai paarthemattil enethu karuthu inthap padeththin mutrumuluthaane nookam muslimkalaahiye emmai thaakuwethe anri weru ethuwum illai... Oru padam endral athil ethaachum katheyo etharthamaane wisayemo irukkum so padaththai paarthe neengal kuurungal inthap padathin kathaithaan enna ?? Kamalahaasan makkalukku enna solla waruhiraar ?? Inthap padaththai paarthethukku pirehum kamalai paaratuhiren endru solwethumattumallathu inthath thireippadem thireiyidep padeweandum endru kuuruwethukku ungalukku wekkamahe illaya ?? Ungalathu ireththam kothikkawillaya ?? Inthath thireppadem patriye enethu karuththu, ithu mutru muluthaahe Islamiyerhalai thaakkuwethetkaahe edukkappatte pademe, Nicheyemaahe ithenai parkkum anniyerhalukku em meethum emethu maarkem meethum kopemum weruppum mattume undaahume thawire sahotherer kuuriyethupola islaththai patriye enthe oru nal awiprayemum waraathu, aahewe muslimaahiye naam thireiyarenguhelukku sentru paarweiyiduwethenpathu wetkamaane seyel... Inthath thireippadem thoolwiyadaiye weandume thawire athenai thirei aranguhalil paarththu naam paawihalaahiwidekkuudathu.. athuwe matrewerhalukkum oru paademaahe amayum... Ellam walla ireiwan Islathukku ethiraahe uruwaahum nachu kirumihalai aliththu emmayum emethu maarkeththayum paathukaappaaanahe.. Aameen aameen ya rabbal aalameen..

    ReplyDelete
  11. avar(rauff hazeer) thatpotheye kalathiketrevahayile sanakkiyahamaha karuthuraithullar,netru mulaitha kalankal vimarsenam seiyekoodathu.

    ReplyDelete
  12. என்னுடைய கருத்துகளுக்கு எதிப்புத் தெரிவித்திருக்கும் நண்பர்கள் மிகவும் ஆரோக்கியமான முறையில் எழுதியிருக்கிறார்கள் . அவர்களும் இதில் உள்ள உண்மைகளை மறுக்கவில்லை . ஆனால் , மாற்று சமூகத்தினருக்கு பிழையான பார்வையை இதன் முலம் மேலும் வலுப்படலாம் என்று அழுதிருக்கிறார்கள் . நம் ஈமானிய உணர்வு சாமாநியமாதல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ளவேண்டும் .கடவுள் , மற்றும் மத நிந்தனைகளை அவர்களால் பொறுத்துக்கொள்ள முடிந்தாலும் , முஸ்லிமுக்கு அது முடியவே முடியாது என்பதை அவர்கள் தெரிந்தேதான் ஆகவேண்டும் . ஒரு நண்பர் பர்தா அணிந்து தற்கொலை தாரி செல்வதை பிழையான கருதுகோள் என்று கூறி, நான் அதை அனுமதிக்கிறேனா என்பது போல் எழுதியுள்ளார் . முழுக்கவே முகம் மூடுகிர பர்தாவை இஸ்லாம் அணியச்சொல்லியிருக்கிறதா ? நாமே பிழையாக நடந்துகொண்டு அன்னியரை குறை குறுவது பிழையல்லவா . இஸ்லாம் தீவிர வாதத்தை ஆதரிக்கவே இல்லை , ஆனால் தற்காப்பை தடுக்கவும் இல்லை . இஸ்லாம் சம்பந்தமான பல பிழையான கருதுகோள்களுக்கு இஸ்லாமியர்கலேதான் காரணம் .

    ReplyDelete
  13. ஹஸீர் அவர்கட்கு;

    1.உங்களுக்கு இருக்கின்ற பிரபலம் போதுமென்று நினைக்கிறேன்; இவ்விடயம் இன்னும் அதிக ஆழமாகவும் முஸ்லிம்கள் உலகளவில் சமகாலத்தில் எதிர் நோக்குகின்ற சவால்கள், இஸ்லாமியர்களின் எதிகால இருப்பு என்பவவற்றையும் மையப்படுத்தி சிந்திக்கப்பட வேண்டிய விடயம் என்பதோடு இனிவரும் காலங்களில் தமிழ் சினிமா எடுக்கும் போது முஸ்லிம்கள் தொடர்பாக தான்தோன்றித்தனமாக செயற்படுவதனை இவ்வெதிர்ப்பானது சிந்திக்க வைக்கும் என்பதயும் புரிந்து கொள்ள வேண்டும். பாருங்கள இங்கே உங்களுக்கு வக்காலத்து வாங்குபவர்கள் யரென்று.

    2.அப்படியானல் இதனை எதிர்த்த அனைவரும் 23 அமைப்புக்கள் மற்றும் பொது மக்கள் யாரும் முற்போக்காக சிந்திக்கத் தெரியாதவர்கள் என்று கருதுகிறீர்களா?

    3.என்னதான் கருத்துச் சுதந்திரம் இருக்குமாயினும் குறித்த விடயமானது மற்றவர்களின் மன உணர்வுகளைப் பாதிக்குமாயின் அவ்விடயம் ஒரு பிரச்சனைக்குரிய ஒன்றாக மாறியே ஆகும் என்பதில் உடன்படமாட்டீர்களா? கமலஹாஸன் தனக்கு மதமும் இல்லை அரசியலும் இல்லை என்கிறார். அவர் அதே போல் எனக்கு மானமும் இல்லை என்று தனது உடகளை எல்லாம் களைந்து விட்டு வீதியில் ஓடினால் சட்டமும் சமூகமும் அவரை சும்மா விட்டு விட வேண்டுமென நாம் எதிபார்க்க வேண்டுமா?

    அல்குரான் என்ன சொல்கிறது?

    Al-Quran(26:224) As for the poets, only those who go astray follow them.

    நீங்களும் கவிஞர் தானே!

    மீண்டும் சந்திப்போம்.

    ReplyDelete
  14. உங்கள் கருத்து அற்புதமானது.மறுமையின் அடையாளங்களை பிரதிபலிக்கும் அறிவாளிகளின் தோற்றத்தையும் வெளிக்காட்டி நிற்கின்றது. பேச வேண்டிய விடயம் பேசப்பட வில்லை. இன்னும் பல தஸ்லிமாக்களும் சல்மான் ருஸ்திகளும் தோன்றுவது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. கமல்ஹாசன் ஒசாமா பின் லேடனை கடலில் அடக்கம் செய்ய பயன்படுத்திய கப்பலில் உணவு உண்டு மகிழ்ந்த செய்தி உங்களுக்கு தெரியாது.

    ReplyDelete
  15. படமெடுத்த கமலஹாசன் நீங்கள் நியாயப் படுத்தும் கருத்தில் படமெடுத்திருந்தால் நீங்கள் சொல்வது சரி, உலகம் முழுதும் இஸ்லாம் பற்றியும் முஸ்லிம்கள் பற்றியும் அமெரிக்கா செய்யும் மோசமான பிரச்சாரத்தை படமாக்கிய கமலஹாசன் அமரிக்கர்களின் அரசியலுக்கேற்ப தமிழ் படம் பார்க்கும் சில இனவாதிகளினது ரசனைக்கேற்பவும் மெருகூட்டியிருக்கின்றார்.

    இப்படத்தில் இணைக்க வேண்டிய காட்சிகளை ஆசையாக சொல்லியிருக்கின்றீர்கள். அதை செய்யாததால் தானே பிரச்சினையே அப்படியாவது செய்திருந்தால் இந்தப் படம் ஒரு சமநிலையில் இருந்திருக்கும்.

    படத்தில் படத்தின் இறுதியில் தலிபான்களிடம் பயிற்சி பெற்றவர்கள் இந்தியாவுக்கு வருவதாகவும் அவை விஸ்வருபத்தின இரண்டாம் பாகத்தில் தொடரும் என்றும் முடித்திருக்கின்றார் கமலஹாசன். அந்தப் படம் நீங்கள் கட்டுரையில் சொல்வது போன்று டொக்டர் ஹிமானா செய்யிதிடம் முன்வைத்த குற்றச் சாட்டுக்களை தவிர்த்தா வெளிவரப் போகிறது..?

    “அட படத்தை நியாயப் படுத்த கவிஞர் ஹசீரின் கருத்துக்களை ஒரு பத்திரிகையாளர் மாநாடு வைத்து கூறிடலாமே” என்று கமலஹாசன் சொல்வது போல் கேட்கிறது.

    இதுக்குத்தான் ஐயா சொல்றது நாங்களும் படமெடுக்கனும்னு

    ReplyDelete
  16. கருத்து சுதந்திரம், அடுத்தவரின் மனம் புண்படாமல் இருந்தாலே இன்றி அது கருத்து சுதந்திரமாகாது... இங்கே பாதிக்கப்படுபவர்கள் ஒரு தனி மனிதனல்ல. மாறாக, ஒரு பலகோடி மக்களைக்கொண்டதொரு பெரும் இஸ்லாமிய கூட்டமே...

    நம் நாட்டில் பல விசம சக்திகள், நமக்கெதிராக தலைவிரித்தாடுகின்றது... இது குறித்து இவர்களின் கருத்து சுதந்திரம் எங்கே போனது...?

    உடல் வலிமையிலும், செல்வங்களிலும் மிகைத்த ஆது மற்றும் சமூது கூட்டத்தையே, அல்லாஹ்வால் அழித்தாயிற்று. அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள்.

    பிரபல்யம் அடைந்தவர்கலெல்லாம் உத்தமர்களில்லையே...
    பிர்ஹௌன், காரூன் இவர்கள்கூட பிரபல்யமடைந்தவர்களே...

    தெரிந்து கொள்ளுங்கள், ''பெருமை'' அல்லாஹ்விற்குரிய sifat .

    ReplyDelete
  17. வந்துவிட்டேன்ன்ன்ன்... கல்லெறிவதற்கல்ல...Shirt பொத்தானை பூட்டுவதற்கு..

    உண்மையில் புதிதாக இஸ்லாம் பெசமுட்படுபவர்கலால்தான் இவ்வளவு கெட்ட பெயர் நம் சமூதாயதுக்கு...

    வரவேட்கபடவேண்டிய சிந்தனை..!!! வாழ்த்துக்கள்...அப்போ கமல் Ticket ல எல்லாம் Halal முத்திரை பதிக்கலாம்...!!!

    @Sharmila Seyyid..!!!

    தம்பி வேலைய பாருங்க தம்பி போங்க...இங்க வந்து வெட்டி பேச்சு பேசாம...!!!
    (ஒரு வேல அனுபவத்த பேசுறாங்க போல...பாவம் யாரு பெத்த புள்ளையோ இங்க வந்து பகிர்ந்து கொள்ளுது)

    Matter க்கு வாரன்...உங்களுக்கு கருத்தாலத்தையும், சிந்திக்கும் ஆற்றலையும் எல்லாம் வல்ல அல்லாஹ் தந்துள்ளான்.
    அதை தயவு செய்து வீணாக செலவிடுவதை தவிர்த்துக்கொள்ளுங்கள்.
    உங்களுடைய கருத்துக்களை வெளியிடுவதக்கு முதலில் அது முற்றிலுமாக இஸ்லாத்திக்கு சரியானதா..? பிழையானதா..? என சிந்திச்சு செயல்படுங்கள் நிச்சயம் வரவேற்கப்படும்...!!!

    Next..அறிவுலகமே போற்றக்கூடிய எம் உயிரிலும் மேலான நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பெயரை குறிப்பிடும் போதோ..கேட்கும் போதோ..
    ஸலவாத் சொன்னால் குறைஞ்சாடப்பா போகிட போகுது...

    அந்த ஒரு வரி ஸலவாத் போதும் போதும் உங்களுக்கு அல்லாஹ்வுடைய ரஹ்மத்தான கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நேசத்தை பெற...

    போதும் என்று நினைத்து அல்லாஹ்வை புகழ்ந்தவனாகவும், முடித்து கொள்கிறேன்...

    Jezakallahu Khair




    ReplyDelete
  18. السلام عليكم أخي

    شكرا لك
    வாதங்கள் பிரதி வாதங்கள், எல்லாம் சரி ....

    நீங்கள் உங்களையே கேளுங்கள்...

    "இஸ்லாம் என்றால் என்ன ? "

    இஸ்லாம் தெரியாதவர்கள் ஜிஹாத் பற்றி கதைக்கிறார்கள்.

    என்ன கொடுமை ஹஸீர் சார்......

    ReplyDelete
  19. Mr. Rauff Hazeer, Your Article is not acceptable.

    Muslims can watch this film from your angle because Muslims know about Islam I mean Quraan & Sunnah)

    But Non Muslim they don't know about Islam, they will not watch this film from your angle.

    This film create bad Image about Islam and Muslims.

    Kamal Hassan need to win Oscar award for that he approach in different way but he could not win that until now.

    So Now he plan to approach in different way to win that Oscar award. he knows that if he show to world that MUSLIMS and ISLAM are TERRORIST.

    All the Muslim should against this film, because One day we have to Answer to Allah.

    ReplyDelete

Powered by Blogger.