புன்னியாமீன் எழுதிய 'ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா'
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
கலாபூஷணம் புன்னியாமீன் எழுதிய உளவளவியலாளர் யூ.எல்.எம்.நௌபர் அவர்களின் வாழ்க்கை வரலாற்றுப் பதிவுகளும் உளவியல் அடிப்படைகளும் எனும் 'ஓர் ஈர நெஞ்சனின் உளவியல் உலா' நூல்வெளியீட்டு நிகழ்வு இன்று பிற்பகல் கொழும்பு ஜே.ஆர்.ஜயவர்த்தன கலாச்சார மண்டபத்தில் கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் மா.கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
பிரதம அதிதியாக மனோ வைத்திய நிபுணர் டாக்டர் நிரோஷா மெண்டிஸ் கலந்து கொண்டார். அல்ஹாஜ் என்.ஏ.ரஷீட் 'விமர்சன ரீதியான பொது உரை' என்ற தொனிப்பொருளில் இங்கு உரையாற்றியதுடன் வெளியிட்டுரையை நூலாசிரியர் பி.எம்.புன்னியாமீன் நிகழ்த்தினார்.
தொழிலதிபர் அருஸ் ஹாஜி, பேராசிரியர் ரோலண்ட் அபேபால, ஓய்வுபெற்ற மத்திய வங்கி அதிகாரியும் உளவளவியலாளருமான யூ.எல்.எம்.நௌபர் ஆகியோர்களும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது இருமொழி வித்தகர் கே.எஸ்.சிவகுமாரன், சேவைச் செம்மல் அருஸ் ஹாஜி, சீர்மியச் செம்மல் திருமதி யமுனா பெரேரா, சேவைச் செம்மல் அல்ஹாஜ் அனீப் மௌலானா, இதழியல் வித்தகர் என்.எம்.அமீன் மற்றும் சீர்மியச் செம்மல் எம்.எஸ்.எம்.அஸ்மியாஸ் ஆகியோர்கள் பொன்;னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டன.; இந்நிகழ்வில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டு பிரதிகளை பெற்றுக் கொண்டனர்.
Post a Comment