ஈரான் சமய புத்தகங்கள் விநியோகிப்பதை கண்டிக்கிறது பொதுபல சேனா
சமயமொன்றை பரப்பும் வகையில் பாடசாலைகளில் புத்தங்களை கொழும்பிலுள்ள ஈரானிய தூதுவராலயம் விநியோகிப்பதாக பொதுபலசேன குற்றஞ்சாட்டியது. யாருடைய அதிகாரத்தினை பெற்று இந்த பிரசார நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் ஈடுபட்டுள்ளது எனவும் பொதுபலசேன கேள்வி எழுப்பியது.
கல்வி அமைச்சின் அனுமதியின்றி சமயமொன்றை பரப்பும் நடவடிக்கையில் ஈரான் தூதுவராலயம் தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளதாக பொதுபலசேனவின் முக்கியஸ்தரான தேரர் கலகொடத கனனசேகர தெரிவித்தார்.
கல்வி அமைச்சும், அமைச்சருமே இதற்கு பொறுப்புக் கூற வேண்டும். இந்த நடவடிக்கையினை நிறுத்த அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். tm
பாருடா.... இவங்க ரெண்டு பேருக்கும் சம்பந்தமே இல்லையாம்....
ReplyDelete