Header Ads



முஸ்லிம் நாடுகளில் தலையீடாதீர்கள் - ஈரானுக்கு அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் வலியுறுத்து


(Tn) எகிப்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் அஹமட் அல் தய்யிப், ஈரான், பஹ்ரைன் அல்லது வளைகுடா நாட்டு விவகாரங்களில் தலையிடக் கூடாது என்றும் ஈரானில் உள்ள சுன்னி முஸ்லிம்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்றும் அந்நாட்டு ஜனாதிபதி மஹ்மூத் அஹமதினஜாத்திடம் அறிவுறுத்தியுள்ளார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க கடந்த செவ்வாய்க்கிழமை மூன்று நாள் விஜயமாக எகிப்து சென்ற அஹமதினஜாத் அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவரை சந்தித்தார். இதில் சுன்னி நிலங்களில் ஷியா சிந்தனையை பரப்புவது குறித்து அல் அஸ்ஹர் பல்கலைக்கழக தலைவர் தய்யிப் விமர்சித்தார்.

அத்துடன் “சகோதர அரபு தேசம் என்ற வகையில் ஈரான் ஜனாதிபதி பஹரைனை மதிக்க வேண்டும். அதேபோன்று வளைகுடா நாடுகளின் விவகாரங்களில் தலையிடக் கூடாது” என ஈரான் ஜனாதிபதியிடம் தய்யிப் வலியுறுத்தினார்.

வளைகுடா நாடுகளின் உள் விவகாரங்களில் ஈரான் தலையிடுவதாக பஹ்ரைன் கடந்த ஒக்டோபரில் ஈரான் மீது கண்டனம் வெளியிட்டது. பஹ்ரைனில் ஆளும் சுன்னி மன்னருக்கு எதிராக அந்நாட்டு பெரும்பான்மை ஷியா முஸ்லிம் நடத்தும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஷியா நாடான ஈரான் ஆதரவளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனினும் ஈரான் ஜனாதிபதி மற்றும் அல் அஸ்ஹர் தலைவருக்கு இடையிலான சந்திப்புக்கு பின்னர் இடம்பெற்ற ஊடக மாநாட்டில், “ஈரான் மக்களின் இதயங்களில் எகிப்து மற்றும் எகிப்து மக்கள் இருக்கிறார்கள் என்ற செய்தியை சொல்லவே தாம் ஈரானிலிருந்து வந்ததாக” அஹமதினஜாத் கூறினார்.

எனினும் இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய அல் அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட போதகர் ஹஸன் அல் ஷாபி, ஒரு சில ஷியாக்கள் முஹம்மத் நபியின் தோழர்களை அவமதிப்பதாக குற்றம்சாட்டினார்.

1 comment:

  1. இந்த அளவுக்காவது பேசியிருக்கார். பாராட்டலாம்.
    நம்மில் பலர் ஷீயாக்களை முஸ்லிம்களின் எதிரி என்றால் நம்பும் அளவில் இல்லை. இவர்கள் செய்யும் முஸ்லிம் விரோத செயல்கள், முஸ்லிம்களை இவர்கள் மதிக்கும் விதம், முஸ்லிம்களை சீரழிக்க இவர்கள் கொட்டும் பணம் பற்றி நம்மவர்களுக்கு புரிய வைப்பது தான் பாடு... யூதர்களால் உருவாக்கப் பட்ட யூதர்களைப் போன்றவர்கள் ....

    ReplyDelete

Powered by Blogger.