இந்திய முஸ்லிம்களின் நிலைமை மிகமோசமாக உள்ளது - பிரித்தானிய அறிஞர் கவலை
(Inneram) சம உரிமை, சம அளவு வாய்ப்புகள் என்று பார்க்கும் போது இந்திய முஸ்லிம்களின் நிலை தாழ்த்தப்பட்டவர்களினும் மிக மோசமாக உள்ளது என்று பிரித்தானிய அறிஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்தின் லீசெஸ்டர் பல்கலைகழகத்தின் மறுமலர்ச்சிக் கல்வித் துறையில் பேராசிரியராகப் பணியாற்றும் கார்டன் கேம்ப்பெல் தான் இவ்வாறு கருத்தளித்தவராவார். "குறிப்பாக, கல்வியில் முஸ்லிம்களின் நிலை கடந்த ஏழாண்டுகளில் மிக மிக பின் தங்கியுள்ளது - சச்சார் குழுவின் அறிக்கை வந்ததன் பிந்தைய ஏழாண்டுக் காலத்தில்" என்று அவர் தெரிவித்தார்.
அலீகர் பல்கலைகழகத்தினர் கொண்டாடிய 'சர் சையத் அஹ்மத் நாள்' விழாவில் சிறப்புரை ஆற்றுகையில் பேராசிரியர் கார்டென் கேம்ப்பெல் இவ்வாறு தெரிவித்தார் : "பொதுக் கல்வியிலிருந்தும், வேலை வாய்ப்புகளிலிருந்தும் இந்நாட்டில் முஸ்லிம்கள் ஓரங்கட்டப்படுகிறார்கள் அல்லது அவர்களுக்கான வாய்ப்பின் வாசல் குறுக்கப்படுகிறது. உயர்கல்வி மையங்களை முஸ்லிம்கள் நிரம்பியுள்ள மலப்புரம், முர்ஷிதாபாத் பகுதிகளில் திறந்துள்ள அலீகர் பல்கலைகழகத்தின் சேவை பாராட்டுக்குரியது" என்றும் கார்டென் பாராட்டு தெரிவித்தார்.
இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து சுமூகமாக வாழும் ஒரே நாட்டைத் தான் சர் சையத் அஹ்மத் கான் விரும்பினார் என்றும் பேராசிரியர் கார்டென் தெரிவித்தார்.
Post a Comment