கொழும்பில் இரவு நேரங்களில் வீதிகளில் செல்லும் பெண்களை பாதுகாக்க நடவடிக்கை
(Tl) கொழும்பில் இரவு நேரங்களில் வீதிகளில் செல்லும் பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் விசேட பொலிஸ் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அண்மைக் காலமாக வாகனங்களில் முக்கியமாக முச்சக்கர வண்டிகளில் பெண்களை கடத்திச் சென்று அச்சுறுத்தி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளமையை அடுத்து விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கமைய இரவு நேரங்களில் பயணிக்கும் முச்சக்கர வண்டி உட்பட வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன. அத்துடன், அதிகளவில் பெண்கள் பணியாற்றும் இடங்களில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கமைய 2011 ஆம் ஆண்டில் 1871 பாலியல் வல்லுறவு சம்பவங்களும், 2012 ஆம் ஆண்டில் 1920 பாலியல் வல்லுறவுச் சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இது பௌத்த நாடு.பொது பலசேனா எங்க போயிட்டு.????
ReplyDelete