உங்கள் கையடக்க தொலைபேசியை ஒருநாளைக்கு எத்தனை தடவை பார்வையிடுகிறீர்கள்?
சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், ஸ்மார்ட்போன் வைத்திருப்போர், நாளொன்றுக்கு அப்போனை 150 முறை பார்த்து வருவதாக தெரிய வந்துள்ளது. மொபைல் தொழில்நுட்ப ஆலோசகர் டாமி ஆஹோனென் இதுகுறித்து நடத்திய ஆய்வின் முடிவுகள் தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி, தூங்கி எழுந்திருக்கும்போது, மணியை பார்ப்பதில் துவங்கி போன் பேசுவது, இணையளம் பார்ப்பது, மெயில்களை படிப்பது, குறுந்தகவல்களை அனுப்புவது மற்றும் பெறுவது என இறுதியாக போனின் பாகங்கள் குறித்து பார்ப்பது வரை, நாளொன்றுக்கு சராசரியாக 150 முறை அவர்கள் தங்கள் போனை பார்க்கின்றனர். இவர்கள் நாளொன்றுக்கு 22 போன் அழைப்புகள் வரை பெறுவதாகவும், 23 குறுந்தகவல்களை அனுப்பவும் மற்றும் பெறவும் செய்கிறார்கள். மேலும் 18 முறை மணியை சரிபார்த்துக் கொள்வதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சாதாரண தொழில்நுட்ப வசதி கொண்ட போனைப் பயன்படுத்துபவர்கள், நாளொன்றுக்கு 3 அழைப்புகள் வரை பேசுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment