ஜம்மியத்துல் உலமா சபையின் தீர்மானம் பேரினவாதிகளுக்கு சாட்டை அடி
அஸ்ஸலாமு அலைக்கும்.
கடந்த சில மாதங்களாக நாட்டில் நிலவும் அசாதாரண நிலையை ஒவ்வொரு நொடியும் பேசிவந்த நமக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா ஏக மனதாக ஒரு தீர்வை முன்வைத்துள்ளது. அல்ஹம்துலில்லாஹ்!
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா எடுத்த இந்த முடிவு அந்த கடும்போக்கு வாதிகளுக்கு ஒரு சாட்டை அடியாகதான் இருக்கும். இந்த சந்தர்ப்பத்தை நமது சமூகம் ஒரு வியாபார வியூகத்தை பிரயோகிப்பதன் மூலம் முஸ்லிம்களுடைய வியாபாரத்தை அதிகரிப்பதிற்கும் அந்நிய மத தயாரிப்புகளில் வீழ்ச்சியை ஏற்படுத்தலாம்.
இங்கு ஒரு உற்பத்திப்பொருள் முதலில், ஹலாலா? இல்லையா என்பதை தீர்மானிப்பது அந்த தயாரிப்பு முஸ்லிமின் தயாரிப்பா? இல்லையா என்பதில் தான் உள்ளது. முஸ்லிமின் தயாரிப்பாக இருந்தால் அவர் அதை ஹலால் நிபந்தனைகளுக்கு உற்பட்டடாகவே தயாரித்து சந்தைப்படுத்தியிருப்பார். அநேகமாக அதில் சந்தேகமில்லை.
இனி இந்த சந்தர்ப்பத்தை நமக்கு சாதகமாக பயன் படுத்திக்கொள்வது நமது கையிலேயே உள்ளது.
1) நமது சந்தையில் உள்ள உற்பத்தி பொருட்களில் முஸ்லிம்களுடைய தயாரிப்பை பயன்படுத்தும்படி அறிவுறுத்துவதன் மூலம் ஹலால் ஹராம் என்ற கேள்விக்கு இடமில்லை. குறிப்பிட்ட தயாரிப்பில் முஸ்லிமுடைய தயாரிப்பு இல்லாத பொது ஹலால் சான்றிதழ் வழங்கப்பட்ட தயாரிப்பை உபயோகிக்கலாம்.
2) சந்தையில் நமது தயாரிப்புகள் மிகக்குறைவாகவே இருக்கின்றன. இந்த நிலை மாறவேண்டும். நாம் மாற்றீடாக பயன்படுத்த ஹலால் அனுமதியளிக்கப்பட்ட பொருற்களை ( இஸ்லாம் அனுமதித்த உற்பத்தி பொருள்) தயாரிப்பதற்கு எமது சகோதரர்களிற்கு உரிய கல்வி, பயிற்சி, உதவி, ஆலோசனைகளை வழங்கி ஊக்குவிப்பதன் மூலம் நமக்கென்று ஒரு சந்தையை உள்ளூரிலும் உலகளவிலும் உருவாக்கிக் கொள்ளலாம். இது நமது சமூகத்தின் வளர்ச்சிக்கு உருதுணையாகவும் கடும் போக்கு வாதிகளின் அவசர புத்திக்கும், அடக்கு முறைக்கும் ஒரு சவாலாக அமைவதுடன் அல்லாஹ் மீது நாம் கொண்டுள்ள நம்பிக்கையையும், ஒற்றுமையையும், பலத்தையும் முன் வைப்போம்.
இனியும் அவர்களின் முயற்சிகளை முடக்குவதற்கு நம் ஒவ்வொருவருடைய பங்களிப்பையும் ஏதோ ஒருவகையில் செய்வதன் மூலம் சமூகத்தின் வளர்ச்சிக்கு கை கோர்ப்போம்.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா கூறியது போல், நம்முடைய நிலைப்பாட்டை மற்றவர்களுக்கு எத்தி வைப்பதற்கும், செயற்பாடுகளுக்கும் பெரும் தொகையான மூலதனம் தேவைப்படுகிறது. அதே போல் நமக்கென்று ஒரு ஊடகம் நவீன வசதிகள் இல்லாதது ஒரு பெரும் வெற்றிடமே. இதற்கு ஒரு சரியான தீர்வு சீக்கிரம் பெறப்பட வேண்டும். ஊடகத்துறையில் தேர்ச்சி பெற்ற அனுபவம் வாய்ந்த சகோதரர்களை ஒன்றிணைத்து ஒரு ஊடகம் ஆரம்பிப்பதற்கும் அவற்றுக்கான செலவுகளை நம்மிடையே சேர்ப்பதற்கு ஒரு சிறந்த முறையை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா முன்மொழிந்து நம்மை வழி நடத்த வேண்டும்.
நமது ஒற்றுமை நமது சமூகத்தின் வளர்ச்சிக்கும் எதிர்கால சந்ததிகளுக்கும் நிம்மதியான வாழ்க்கைக்கு வழிவகுக்கும். பல Bala senaகள் வந்தாலும் நமது ஒற்றுமையையும் அல்லாஹ்வின் உதவியையும் சேர்த்து எதிர் கொள்ள தயார் ஆகுவோம்.
aniyayathirkum akkiremetthikum muslimkal adipaniyamaddarkal ,allahvin saddam nabi in sunna Irendukumtan talai saippevarkal muslimkal enpatai enthe aarpaddemum illatu Kaavi udaiyalerkalukum,BALESENA kalukkum,marai karamkalukum JEMYATULULAMA iraivenarulal satitu kadduvatarkane inte muyarchi verri pere Allah arul purivanahe.
ReplyDeleteஅல்ஹம்துலில்லாஹ்!
ReplyDeleteதயவு செய்து எமது பிரச்சினைகளையும் வெளிக்கொண்டு வர மிக சீக்கிரத்தில் ஒரு ஊடகத்தை உருவாக்குங்கள்.
தற்போதைக்கு ஜப்னா முஸ்லிம் மட்டுமே உடனுக்குடன் எமது பிரச்சினைகளைத் தெரியப்படுத்துகிறது.
அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸலாமு அலைக்கும்.
ReplyDeleteமார்ச் 31ம்திகதி என்ற காலக்கெடு விதித்திருக்கும் பொதுபலசேனா,அமைச்ச
ர் சம்பிக ரணவக போன்றவர்களின் அச்சுறுத்தலால்,அகில இலங்கை ஜம்மியதுல் உலமாசபை ஹலால் சான்றிதழ் விவகாரத்தை பொறுப்புடன்
அனுகவேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.இதில் முஸ்லிம்களின் பாதுகாப்பே
முக்கியத்துவம் பெறுகிறது.ஆரம்பத்தில் அ.இ.ஜ.உ.சபை ஹலால் சான்றிதழ் வழங்கும் முடிவை எடுத்தது, அரசாங்கத்தின் மீதிருந்த அதீத நம்பிக்கையின் அடிப்படையில் என்பது புலனாகிறது.முஸ்லிம்களுக்கு மாத்திரம் என்ற பின்வாங்குதல் அந்த நம்பிக்கைக்கு ஆப்பு விழுந்து விட்டதுபோல் தெரிகிறது.
இந்த கட்டுரையை சிங்கள சமூகம் அல்லது சிங்கள பேரினவாதிகள் பார்த்துவிட்டு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ள உணவு பொருள் உற்பத்திக்கான உரிமம் தடை ஏற்படுத்த படலாம். தயவு செய்து பொறுப்புடன் செய்திகளை பதிவிடுங்கள்
ReplyDeleteவீர வசனம் பேசுவதால் பிரயோசனம் உண்டா சிந்தியுங்கள்?
அஸ்ஸலாமு அலைக்கும்.சகோதரர் மிஹ்வர் மஹ்ரூஃப் அவர்களே!
ReplyDeleteஆம் நிச்சமாக நான் உங்களுடைய கருத்துடன் உடன்படுகின்றேன். எமது இஸல்மியர்கள் இவ்வாறன விடயங்களுக்கு மிக ஆர்வமாகவே உள்ளனர். முதலில் இதை நாடியமைக்குக் இறைவனுக்கும். வழி ஏற்படித்தித் தந்தமைக்காக பொது பல சேனாவிற்கும் எனது நன்றிகள்.
ஹக்கான ஆலிம்கள்,சமூக ஆவலர்கள் புத்திஜீவுகள்,மார்க்க அளவுகோளோடு வாழும் தனவந்தர்கள் இவ்வாறானவிடயங்களுக்கு சந்தர்ப்பம் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.இதற்கு முதலில் ஏக மனதாக புல்லுருவிகளற்ற ஓர் உன்னதமான அமைப்பு மிகவும் எற்புடையதாகும் என்பது எனது தாழ்மையான கருத்து
அல்ஹம்துலில்லாஹ்! அனைத்து முயற்சிகளும் வெற்றி பெற எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிய பிரார்த்திக்கின்றேன். எமது சகோதரர்கள் ஹலால் சான்றிதழ் உள்ளதாவோ அல்லது எம்மவரின் தயாரிப்புக்களையோ வாங்க வேண்டும். மற்றும் ஒவ்வொரு மஹல்லாக்களுக்கும் ஹராமான தயாரிப்புக்கள் எது என்பதை அறிவித்து விழிப்புணர்வு வழங்க வேண்டும். இதற்கு எல்லாத்துக்கும் பிரதானமான ஒன்று பணம். இதை எமது தாராள மனம் கொண்ட தனவந்தர்கள் வழங்கி உதவி புரிய வேண்டும். உங்கள் அனைவருக்கும் எல்லாம் வல்ல அல்லாஹ்வின் அருளும் பரகத்தும் உரித்தாகட்டும். ஆமீன்.
ReplyDeletedddd
ReplyDeleteThanks, Alhamduliilah, As said Mr. Mihvar we need a strong media that is our essential need, pls the people who specialised in the media and those who can able to effort get togethr to form that, Allah will help us.
ReplyDeleteAnd Bro, we muslims must come under one roof regardless of their groups, contrdiction and racism. Pls stop to criticise the people who give their voice to us, of our bro criticise Mr. Asath sali about argument with BBS.
Pls we try to hold the rope of Allah and follow the sunnah of SAW simulteneosly we must change our activities and buiness toward how Islam says.
Thanks
Brother Rozan Akmal,
ReplyDeleteHere I mentioned how can we over come from this situation and make it for our advantage. They are only said they do not need halal certificates. So if we request to government that we need all products to our survive, they should provide. they can not ignore it.
Please Muslim Makkalai thelivu paduththungal Halal Mark Ellatha porutkalai wanga wendam Endru, nangal mulumaiyyaha wangavittal, Nichchayamaha Kaladikku Warunwanga thirumba Halal Wenum Endru Solli.
ReplyDeleteஉலமா சபையின் முடிவு மிகவும் மிகவும் சரியான முடிவு அதில் எவ்வித மாற்றமும் இல்லை இதுதான் இந்த பிரச்சினைக்கு சரியான முடிவு , இதன் பிறகு நமது உற்பத்திகளை நாமே உற்பத்தி செய்துகொள்வோம் .இன்ஷா அல்லாஹ் இதற்குரிய ஊடகத்தை ஆரம்பிக்கும் முயற்சியில் அனைவரும் இணைந்து கொள்வோமாக .
ReplyDelete