Header Ads



மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை பரப்புகின்றனர்


இலங்கைக்கு ஹலால் ஒரு புற்று நோயாகும். உலமா சபை ஹலால் ஊடாக சாதாரண முஸ்லிம்களின் உரிமைகளை மீறிச்செயற்படுவது மாத்திரமின்றி அடிப்படைவாத பயங்கரவாதத்தையும் பரப்புகின்றது. எனவே இதனை இல்லாதொழிக்க வேண்டியது கட்டாயமென்று பொதுபல சேனா வலியுறுத்தியுள்ளது.

மக்கா சென்று நாடு திரும்பும் முஸ்லிம்கள் சவூதியினால் அடிப்படைவாதத்தையும் இலங்கையில் பரப்புகின்றனர். முழு உடம்பையும் கறுப்பு போர்வையில் மூடிக்கொண்டு செல்ல இலங்கை ஒன்றுமே பாலைவனம் அல்ல என்றும் அவ் இயக்கம் குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் நேற்று கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறுகையில்,

உலமா சபை ஹலால் சான்றிதழ் மூலம் நாட்டில் பயங்கரவாதத்தை பரப்புகின்றது. இதனால் பொதுபல சேனாவின் உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் உள்ளது. இதற்கான உரிய ஆதாரங்களை உரிய சாட்சியங்களுடன் விரைவில் வெளியிடுவோம்.

அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகள் இலங்கையில் பயங்கரவாதத்தை பரப்ப முற்படுகின்றன. முஸ்லிம் அமைப்புகளினால் நாட்டில் இன்று மத ஆக்கிரமிப்புகளே இடம்பெறுகின்றது. வேறு எந்தவொரு மதமும் இலங்கையில் இவ்வாறானதொரு மத ஆக்கிரமிப்பை செய்யவில்லை. (VI)

1 comment:

  1. ஒரு முஸ்லிம் அச்சுறுத்தல் கடிதம் அனுப்பியது போன்று பல ஆதாரங்களை அனுப்புவது ஒன்றும் பெரிய விடயம் ஆல்ல.
    அப்போலி ஆதாரங்கழுக்கமைவாய் ஏதோ ஓர் தேரரை கொலைசெய்து விட்டு அதை நம் தலையில் போட்டாலும் ஆச்சரியப்படத் தேவையில்லை

    ReplyDelete

Powered by Blogger.