முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு பர்தா அணிவிக்க வேண்டும் - ஷேக் அப்துல்லா தாவூத்
சவுதி அரேபியாவை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா தாவூத். இவர் இஸ்லாமிக் அல்-மஜ்த் என்ற டி.வி.க்கு பேட்டி அளித்தார்.
அதில், முஸ்லிம் பெண் குழந்தைகளுக்கு பர்தா அணிவிக்க வேண்டும். இதன் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறையும் என்றார். மேலும் அவர் கூறும்போது, பர்தா அணியாத குழந்தைகளுக்கு (தண்டனை) வழங்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார். ஆனால், எந்த விதமான தண்டனை என்று அவர் அறிவிக்கவில்லை.
அவரின் இந்த அறிவிப்பு எதிர்ப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலை இணைய தளங்களில் பலர் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சவுதி மக்கள் குறை தீர்ப்பு ஆணையத்தை சேர்ந்தவரும், முன்னாள் நீதிபதியுமான ஷேக் முகமது அல்-ஜஸ்லானா அல்-மஜ்த் டி.வி.க்கு பேட்டி அளித்துள்ளார். அதில், இதுபோன்ற பத்வா இஸ்லாம் மற்றும் ஷரியா அமைப்பின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் என்றார்.
Post a Comment