Header Ads



அப்சல் குருவின் இறுதி நிமிடங்கள் - இறுதி தொழுகையையும் நிறைவேற்றினார்


சனிக்கிழமை காலை, டில்லி திகார் சிறையில், அப்சல் குருவுக்கு, தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. சரியாக காலை, 8:00 மணிக்கு, அவர் தூக்கிலிடப்பட்டார்.

தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது குறித்து, நேற்று முன்தினம் மாலை, அப்சல் குருவிடம் தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை காலை, 7:00 மணிக்கு, டாக்டர்கள் வந்து, ரத்த அழுத்தம் உட்பட, சில மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். பின், 7:30 மணிக்கு தூக்கில் போடுவதற்கான ஏற்பாடுகள் ஆரம்பமாகி, 8:00 மணிக்கு தூக்கில் இடப்பட்டார். 

திகார் சிறையில் உள்ள, மூன்றாம் எண் சிறைப் பிரிவு, பலத்த பாதுகாப்பு நிறைந்தது. இங்குள்ள, சிறப்பு அறையில், அடைக்கப்பட்டிருந்த அப்சல் குரு, அங்கிருந்து, 20 மீட்டர் தொலைவில் உள்ள, தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, தூக்கிலிடப்பட்டார். உரிய மதச் சடங்குகள் செய்த பின், சிறை வளாகத்திலேயே அவர்  உடல் அடக்கம் செய்யப்பட்டது.

அப்சல் குருவை தூக்கிலிடும் விஷயம், மிக ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. தூக்கிலிடப் போகும் விவரம், அப்சல் குருவின் மனைவிக்கு, மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், விரைவு தபால் மூலம் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர்அப்துல்லாவுக்கும்,  இரவு, தகவல் கொடுக்கப்பட்டது.

அப்சல் குருவின் கடைசி நிமிடங்கள்.., தூக்கிலிடப்பட்ட, அப்சல் குருவின் கடைசி நிமிடங்கள் குறித்து, திகார் சிறை அதிகாரி கூறியதாவது,,

அப்சல் குரு, குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதிலிருந்து, 10 ஆண்டுகளாக, திகார் சிறையில் தான், அடைக்கப்பட்டிருந்தார். கடைசியாக, சிறை எண்-3ல், அடைக்கப்பட்டிருந்தார். தூக்கிலிடப்படும் தகவல், அப்சலிடம், வெள்ளிக்கிழமை மாலை தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டதும், அப்சலின் முகத்தில், சிறிய அதிர்வு தெரிந்தது. முகத்தில், வேறு எந்த சலனத்தையும், வெளிக் காட்டவில்லை. பெரும்பாலும், மவுனமாக இருந்தார். 

சனிக்கிழமை காலை, 5:00 மணிக்கு, அப்சல் குரு, கண் விழித்தார். அவக்கு, டீ கொடுக்கப்பட்டது. இதன்பின், தொழுகை நடத்த, அனுமதி வழங்கப்பட்டது. காலை, 7:30க்கு, தூக்கு மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது, மிக அமைதியாக காணப்பட்டார். முகத்தில், எந்த விதமான உணர்ச்சியையும் வெளிப்படுத்தவில்லை. மாஜிஸ்திரேட், டாக்டர் ஆகியோருக்கு, முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டிருந்ததால், தண்டனையை நிறைவேற்றும் இடத்துக்கு, அவர்கள் வந்திருந்தனர். தூக்கிலிடப்படுவதற்கு முன், டாக்டர், அப்சல் குருவை பரிசோதித்தார். இதன்பின், சரியாக, 8:00 மணிக்கு, அப்சல் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. 

No comments

Powered by Blogger.