கல்முனை மாநகர விளையாட்டு வீரர்களினதும், நோயாளர்களினதும் நலன்கருதி அம்பாறை மாவட்டத்தில் முதன்முறையாக கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் விளையாட்டு மருத்துவப் பிரிவு அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.
இவ்விளையாட்டு மருத்துவப் பிரிவு பற்றி பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வேலைத்திட்டத்தினை வைத்தியசாலை நிருவாகம் மேற்கொண்டு வருகின்றது.
இதன் முதற்கட்டமாக கல்முனை பிரதேச விளையாட்டுக் கழகங்கள், பாடசாலை மட்டத்திலுள்ள உடற்பயிற்சி ஆசிரியர்களுக்கு விளக்கமளிக்கும் செயலமர்வு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் இன்று (2013.02.10) அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் இடம் பெற்றது.
இச்செயலமர்வு இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஏ.எம்.நௌபல் மற்றும் பிரதேச விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள், உடற்பயிற்சி ஆசிரியர்கள், வைத்தியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
விளையாட்டு மருத்துவம் பற்றிய விரிவுரையினை விளையாட்டு மருத்துவ நிபுணர் டாக்டர் ஏ.எம்.எம்.புகைம் நிகழ்த்தினார்.இதன் போது விளையாட்டு மருத்துவப் பிரிவுக்கான உபகரணங்களை பிரதேச தனவந்தர் ஒருவர் அன்பளிப்பாக வைத்திய அத்தியட்சகரிடம் கையளிக்கும் நிகழ்வும் இடம்பெற்றன.
Post a Comment