Header Ads



பொது பல சேனாவுக்கு பௌத்த மதம் பற்றிய வரலாறு தெரியாது

மலேசியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் பௌத்த நாடுகளாக இருந்து அவை முஸ்லிம் நாடுகளாக மாறின எனும் பொது பல சேனாவின் செயலாளர் கலபொட அத்தே ஞானசேர தேரரின்  கருத்து அவரது இஸ்லாம் மற்றும் பௌத்த மதத்தின் வரலாறு பற்றிய அறியாமையால் வொல்லப்பட்டதாகும் என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் குறிப்பிட்டார்.

அண்மையில் ரி. என் எல் தொலைக்காட்சியில் பொது பல சேனாவின் செயலாளர் உரையாற்றும் போது கூறிய விடயங்கள் சம்பந்தமாக கேட்கப்பட்ட போதே உலமா கட்சித்தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது

     பௌத்த மதத்தின் வரலாறு என்பது சுமார் 2500 வருடங்கள் கொண்டது என்பதை பௌத்த மக்களே ஏற்றக்கொண்டுள்ளார்கள். ஆனால் இஸ்லாமிய மதம் என்பது இந்த உலகில் முதல் மனிதன் காலடி வைத்த காலத்திலிருந்தே இருந்தே ஆரம்பமாகிறது. 

     உலகில் மனிதனின் வரலாறு என்பது தற்போது வரை சுமார் நாற்பதுஷதினாயிரம் வருடங்களுக்கு மேலாவதாக விஞ்ஞானபூர்வமான ஆய்வுகள் சொல்கின்றன. இது பல லட்சக்கனக்கான வருடங்களுக்கு முன்பும் செல்லலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இலங்கையில் கூட முப்பத்திரெண்டாயிரம்  வருடங்களுக்கு முன் வாழ்நத மனித எலும்புக்கூடுகள் அண்மையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இந்து, பௌத்த கிறிஸ்தவ மதங்களுக்கு முன் உலகம் முழுவதும் இஸ்லாமிய மதம் மட்டுமே இருந்தது. ஆதம் என்ற முதல் மனிதன் சொர்க்கத்திலிருந்து உலகுக்கு இறங்கி வந்தபோது அவர் இலங்கையில் கால் பதித்தது முதல் முஸ்லிம்கள் உலகில் வாழந்து வந்துள்ளார்கள் என இஸ்லாம் மிகத்தெளிவாக கூறுகிறது.

அவ்வாறு பார்க்கும் போது இந்தியா, இந்தோனேசியா, மலேசியா என அனைத்து நாடுகளும் இஸ்லாமிய நாடு:களாகவே இருந்து வந்துள்ளன. பின்னர் படிப்படியாக அவர்கள் சிலை வணக்கங்களில் ஈடு படுபவர்களாக மாறிய போதுதான் நூஹ் எனும் முஸ்லிம் இறைத்தூதர் காலத்தில் உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்தும் அழிந்து சிலர் மட்டும் அவரது கப்பலில் தப்பி; உலகம் முழுவதும் பரந்து வாழத்தொடங்கினர். நூஹ் நபியின் கப்பலில் தப்பியவர்கள் அனைவரும் முஸ்லிம்கள் மட்டுமே. இவர்கள்தான் கண்டங்களாக இருந்த இலங்கை, இந்தியா, இந்தோனேசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா என சென்று முஸ்லிம்களாகவே வாழ்ந்தனர்.

குறிப்பிட்ட காலத்தின் பின் மீண்டும் ஓரிறைவனை  மட்டும் வணங்காமல் அவனுக்கு சிலைகளை வைத்து இணைவைப்பில் ஈடுபட்டதன் மூலம் மதம் மாறினர். இவ்வாறு சிலர் முஸ்லிம்களாகவும், சிலர் முஸ்லிமல்லாதவர்களாகவும் வாழ்ந்த காலத்தில்தான் நபி ஏப்ரஹாம் போன்றோர் ஐயாயிரம் வருடங்களுக்கு முன் தோன்றி மீண்டும் இம்மக்களை முஸ்லிம்களாக மாற்றினார். ஆயினும் ஏப்ரஹாமுக்குப்பின் சில வருடங்களுக்குப்பின் வந்த பௌத்தர் மூலம் இந்தோனேசியா, மலேசியா போன்ற நாடுகளில் வாழ்ந்த முஸ்லிம்கள் பௌத்த மதத்தை ஏற்றுக்கொண்டனர். 

அதன் பின் மீண்டும் முஹம்மது நபியவர்கள் சுமார் ஆயிரத்து நானூறு வருடங்கள் முன் தோன்றி மீண்டும் இஸ்லாத்தை போதித்தார். அந்த போதனைகளை செவியுற்ற இந்தோனேசியா, மலேசிய நாடுகளில் வாழ்ந்த இந்து மற்றும் பௌத்த மக்கள் மீண்டும் முஸ்லிம்களாக மாறினர். இதுவே இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் வரலாறாகும். இதனை இஸ்லாத்தின் போதனைகள் அடங்கிய ஆதாரங்களில் மிகத்தெளிவாக நாம் காண்கிறோம். 
ஆகவே மேற்படி நாடுகள் பௌத்தர்களாக இருந்து முஸ்லிம்களாக மாறவில்லை. மாறாக முஸ்லிம்களே பௌத்தர்களாக மாறி மீண்டும் முஸ்லிம்காக மாறினர் என்பதை 2500 வருட வரலாறு கொண்டதே பௌத்த மதம் என்பதன் மூலம் மிக எளிதாக விளங்கலாம் என முபாறக் மௌலவி தெரிவித்தார்.



No comments

Powered by Blogger.