யுத்தத்தால் முஸ்லிம்களும் பாதிக்கப்பட்டுள்ளனர் - இந்திய தூதுவரிடம் தெரிவிப்பு
இந்திய வீடமைப்புத் திட்டத்தில் 90 சதவீதமான வீடுகள் தமிழ் மக்களுக்கே செல்வதாகவும்,10 சதவீதம் முஸ்லிம்கள் உள்ளிட்ட ஏனைய சமூகங்களுக்கு செல்வதாகவும்,தற்போது தெரிவிக்கப்படும் முறைப்பாடுகள் குறித்து பெரிதாக அலட்டிக் கொள்ளத் தேவையில்லையென தமது அமைப்பின் பிரதி நிதிகளை வவுனியாவில் வைத்து சந்தித்து கலந்தரையாடிய இந்திய உயர் ஸ்தானிகர் ஆசோக் கே.கான்தா தெரிவித்ததாக வவுனியா நகர சபை உறுப்பினரும்,வவுனியா மாவட்ட சமூக நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவருமான அப்துல் பாரி தெரிவித்தார்.
நேற்று இந்திய உயர் ஸ்தானிகர் தலைமையிலான குழுவினர் வவுனியாவுனக்கு வருகைத் தந்ததாகவும் ,தற்போதைய இந்திய வீடபை்பு திட்டம் குறித்து தெரிவிக்கப்படும் கருத்துக்கள் குறித்து எமது அமைப்புடன் கலந்துரையாடியதாக கூறிய தலைவர் அப்துல் பாரி, இந்திய அரசாங்கத்தின் நேர்மைத் தன்மை மற்றும் நம்பகத் தன்மை என்பவைகளுக்கு எமது பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இந்திய வீடமைப்பு திட்டமானது வவுனியா மாவட்டத்தில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்களுக்கு வந்துள்ளமை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்துக்களுக்கும் இடமில்லை.இந்த யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களில் முஸ்லிம்களும் உள்ளடங்குகின்றனர் என்பதை இந்திய துாதுவரிடம் எமது அமைப்பின் பிரதி நிதிகள் முன் வைத்த போது அதனை ஏற்றுக் கொண்ட இந்திய துாதுவர்,இந்திய வீடமைப்பு திட்ட பட்டியலை தாங்கள் நோக்கியதாகவும்,அந்த வீடமைப்புத் திட்டத்தில் ஒட்டு மொத்த வடக்கில் தமிழ் மக்களுக்கே அதிகமான வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்,இந்திய அரசாங்கம் பாதிப்புக்களை சந்தித்த மக்களுக்கு வழங்கும் இந்த திட்டத்தில் இன ,மதம்,மொழி என்பவைகள் பார்க்கப்படுவதில்லை என்பதை தெரிவித்ததுடன்,வீடமைப்பு திட்டத்தை வெற்றிகரமாக நடை முறைப்படுத்த வவுனியா மாவட்ட இன,நல்லுறவு ஒன்றியத்தின் முழுமையான பங்களிப்பு தேவை என்பதை வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.
இந்த வீடமைப்பு திட்ட தெரிவில் உரிய தெரிவு முறை முறை பின்பற்றப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திய ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி,தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கிடையில் இன ரீதியான பிளவுகளை தோற்றுவித்து,அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை தடை செய்யும் பணிகளில் ஈடுபடுவதன் ஒரு விடயமாகவே இதுவும் அமைந்துள்ளது.வன்னி மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைவர் ,அமைச்சர் றிசாத் பதியுதீன் என்பவர் தமிழழை தாய்மொழியாக கொண்டவர் என்ற வகையிலும்,தாமும் வட மாகாணத்தை சேர்ந்தவர் என்ற வகையிலும்,சகல சமூகங்களின் விமோசனத்திற்காக பாடுபடும் ஒருவர்,இவர் மீது தேவையற்ற விமர்சனங்கள கூட்டமைப்பினர் செய்வதானது,அரசியல் ரீதியில் இனவாத சிந்தனையினை விதைக்கவே என இந்திய உயர் ஸ்தானிகரிடத்தில் வவுனியா மாவட்ட இன நல்லுறவு ஒன்றியத்தின் தலைவர் அப்துல் பாரி எடுத்துரைத்த போது,இந்த விடயத்தில் அரசியல் தலையீடு காணப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிகின்றது.என்றும் இவர் தமது பிரதி நிதிகளிடத்தில் தெரிவித்தாக அப்துல் பாரி கூறினார்.
அதே வேளை வவுனியா மாவட்டத்தில் இந்திய வம்சாவளி மக்களும் வாழ்வதாகவும்,அவர்கள் சார்பில் பிரதி நிதிகளும் இந்த கலந்துரையாடலுக்கு சமூகமளித்திருப்பதாக ஒன்றியத்தின் தலைவர்,இந்திய உயர் ஸ்தானிகரிடத்தில் எடுத்துரைத்த போது அவர்களது தேவைகள் குறித்து தாங்கள் மீ்ண்டும் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவோம் என்றும் கூறியுள்ளார்
இந்த சந்திப்பில் பிரதேச சபை உறுப்பினர் ஜோர்ஜ்,சிங்கள பிரதேச சபையின் பிரதி தலைவர் ஜயதிலக,மற்றும் புன்ஞி பண்டார,கிராம அபிவிருத்தி சங்க தலைவர்,மற்றும் அமைப்பின் பொருளார் ஆனந்தன்,லரீப் ,றஹீம் ஜே.பி.ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Post a Comment