Header Ads



நான் 'விடை பெறுகிறேன்' தூக்கிலிட சில நொடிகளுக்குமுன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தை


நான் 'விடை பெறுகிறேன்' . தூக்கிலிடுவதற்கு சில நொடிகளுக்கு முன் அப்சல் குரு உதிர்த்த வார்த்தைகள் . பின்பு அப்சல் குருவின் தூக்கு மேடைக்கு கீழ் இருக்கும் பாதாளக்  கதவுகள்   திறக்கப் பட்டன. அதை திறப்பதற்கு ஒரு பிடியை நகர்த்தினார் மரண தண்டனையை நிறைவேற்றும் அந்த சிறைச் சாலை ஊழியர். 

அந்த பெயர் சொல் விரும்பாத சிறைச் சாலை  ஊழியர் சொன்னதாவது .....

அப்சல் குருவின் உயிர் ஒரு நிமிடத்தில் பிரிந்தது . ஆனால் சிறைச் சாலையின் விதி முறைப் படி அரை மணி நேரம் உடலை தொங்கவிடப் பட  வேண்டும். அதன் பின் அவரது உடல் இஸ்லாமிய சடங்குகளுடன் திகார் சிறை எண் 3 அருகே புதைக்கப்பட்டது . காஷ்மீர் பிரிவினைவாதி மக்பூல் பட் கல்லறையின் அருகே அப்சல் குருவின் உடலும் புதைக்கப்பட்டது .  ஆனாலும் இவர்கள் இருவருக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருந்தன . அப்சல் காஸ்மீர் பிரிவினை பற்றி  பேசியது இல்லை . தான் விரும்பாமல் இந்த விடயத்தில் தன்னை தேவை இல்லாமல் இழுத்து வந்து விட்டார்கள் என்று கூறுவார் . மேலும் ம் இந்தியாவில் ஊழல் ஒழியவேண்டும் என்று விரும்பியவர் அப்சல் குரு  என்பது குறிப்பிடத் தக்கது . 

இந்தியாவின் உள்ள வெகுமக்கள் , இந்துத்வா ஆதரவாளர்கள் அப்சல் குருவின் தூக்கை வெடிவைத்து கொண்டாடினாலும் , சிறைச்சாலை வளாகம்  அமைதியாகவே காணப்பட்டது . சிறை ஊழியர்கள் பலரும் வருத்ததுடன் காணப்பட்டனர் . காரணம் அப்சல் குருவை  தூக்கு மேடைக்கு  அழைத்துச் செல்லும் பொது அவர் எல்லோரையும் பெயரை குறிப்பிட்டு தான் விடை பெறுகிறேன் என்று சொல்லியவாறு நகர்ந்தார். அவர் உண்மையாக தனது மார்க்கத்தை நேசிப்பவர் மிகவும் கண்ணியமாக நடந்து கொள்பவர் . தூக்கிடுவதற்கு முன் ஒன்றே ஒன்று தான் அவர் கேட்டுக் கொண்டார்.  'எனக்கு அதிக வலி அறியமுடியாத வாறு பார்த்துக் கொள்ளுங்கள் ' என்றார் . அப்படியே பார்த்துக் கொள்கிறேன் என்ற உறுதி அளித்து அப்சல் குருவின் கண்களை உற்று நோக்கியவாறு கருப்பு துணியை வைத்து அவரது முகத்தை மூடினார் அந்த சிறைச் சாலை ஊழியர் . பின்பு மரணத்தை நோக்கிய அப்சல் குருவின்  பயணம் இனிதே நிறைவேறியது . 

பலரும் நினைப்பது அப்சல்  குருவின் தூக்கு தண்டனை நிறைவேற்றம் குறித்து அவருக்கு ஒரு நாள் முன்பு தெரிவிக்கப் படவில்லை . தண்டனை வழங்கப்பட்ட அன்று காலையில் தான் தெரிவிக்கப்பட்டது . 

அன்று   காலையில் அப்சல் குரு தேநீர் மட்டுமே அருந்தினார் . அவருக்கு உணவு வழங்கப் படவில்லை . குளித்துவிட்டு வெள்ளை ஆடை உடுத்தி தொழுகை  நடத்தினார் . 

'இது வரை திகார் சிறைச் சாலை 25 க்கும் மேற்பட்ட தூக்கு தண்டனைகளை நிறைவேற்றி உள்ளது . எங்கள் அனுபவத்தில் 10 நபர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றி உள்ளோம் . ஆனால் நாங்கள் அப்சல் குருவைப் போல் , மரணம் தனக்கு வருவதை அறிந்தும் இவ்வளவு அமைதியும் அடக்கத்தையும் காட்டிய மனிதரை பார்த்ததில்லை '

கடைசி இரண்டு மணி நேரத்தில் அப்சல் குரு சிறைத் துறை அதிகாரிகளுடன் பேசிக் கொண்டிருந்தார் . அவர் வாழ்வும் மரணமும் பற்றி அவருடை கருத்துகளை முன்வைத்தார். உலக சகோதரத்துவம் , ஒருமைப்பாடு , மனித நேயம் குறித்து பேசினார் . எந்த மனிதனும் தீயவன் அல்ல , எல்லா உயிர்களும் ஆண்டவனால் படைக்கப் படுகிறது  . நாம் உண்மையின் பாதையை தேர்ந்தெடுத்து செல்ல வேண்டும் . அது தான் உண்மையான சாதனை  என்று விளக்கினர் .   ஒரு புத்தகத்தில் அவரது சிந்தனையை எழுதி தேதி குறிப்பிட்டு கையெழுத்தும் இட்டார் . 

சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வியை அவரிடம்  எழுப்பினார்கள் . அதற்கு அவர் , கடவுள் தான் எல்லா உயிர்களையும் பார்த்துக் கொள்கிறார் . ஆகவே எனது குடும்பத்தையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றார் 

அவரின் பலமே ஆன்மீகம் தான் . அப்சல் நன்கு படித்தவர் . இஸ்லாம் மற்றும் இந்து மதத்தை நன்கு அறிந்தவர் . இரு மதங்களுக்கும் இருக்கும் ஒற்றுமையை அடிக்கடி சொல்வார் . சில காலங்களுக்கு முன் வேத மதத்தினரின் புனித நூலான நான்கு வேதங்களையும் படித்துள்ளார் . எத்தனை வேத நெறியை  பின்பற்றும் இந்துக்கள் நான்கு வேதங்களும் படித்துள்ளனர். ஒரு நல்ல ஆன்மா  நம்மை விட்டு விலகும் போது  நமக்கு அது பெரும் சோகத்தை விட்டுச் செல்கிறது என்றார் சிறை ஊழியர் .   

இதற்கு முன் தூக்கு மேடைக்கு செல்லும் கைதிகள் நடுங்கிய  படி தான் செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு அமைதியாக மகிழ்ச்சியாக முகத்தில் சோகம் இல்லாது  ஒரு புன்னகையுடன் தான்  தூக்கு மேடைக்கு சென்றார் . அந்த புன்னகைக்கு பின்னால் ஆயிரம் பொருள் இருந்திருக்கும் . 

மற்ற கைதிகளை தூக்கு மேடைக்கு கொண்டு செல்லும் போது , அவர்கள் பொதுவாகவே மதத்தை குறித்தும் அவர்கள் சார்ந்த அரசியல் சித்தாந்தம் குறித்தும் புலம்பிய படியே செல்வார்கள் . ஆனால் அப்சல் குரு , எவ்வகையிலும் புலம்பவில்லை . தன்னுடைய அறையில்  இருந்து சுமார்  நூறு அடி தூரம் வரை இருந்த தூக்கு மேடைக்கு செல்லும் வரை சுற்றி  இருந்த அனைவருக்கும்  தனது வாழ்த்துகளை  சொல்லியபடியே நகர்ந்தார். இப்படி ஒரு மனிதரை இனி திகார் சிறை பார்ப்பது அரிது தான் .  

2 comments:

  1. சிறை அதிகாரிகள் அவரது குடும்பத்தை இனி யார் பார்த்துக் கொள்வார்கள் என்ற கேள்வியை அவரிடம் எழுப்பினார்கள் . அதற்கு அவர் , கடவுள் தான் எல்லா உயிர்களையும் பார்த்துக் கொள்கிறார் . ஆகவே எனது குடும்பத்தையும் அவரே பார்த்துக் கொள்வார் என்றார்

    ReplyDelete
  2. Yaa Allah Unath Adiyaan Apsal guruvin qaburai Suwanathin Pooncholayaha aakuwayahe. Ameen.

    ReplyDelete

Powered by Blogger.