Header Ads



இந்து சமுத்திரத்தில் தோற்றுவிக்கப்படும் பௌத்த சியோனிசம்


(மஸிஹுதீன் இனாமுல்லாஹ்)

இந்த நாட்டில் தேரவாத பௌத்த மதத்தை பின்பற்றும் சிங்களவர்களில் அறுதிப் பெரும்பானமையினர் முஸ்லிம்களை அல்லது இஸ்லாத்தை அவர்களது மதத்திற்கோ கலாச்சாரத்திற்கோ, இனத்திற்கோ அச்சுறுத்தலாக பார்க்கவில்லை. அதேபோன்று இலங்கை வாழ் முஸ்லிம்களும் வரலாறு நெடுகிலும் பௌத்த சிங்கள மக்களோடு சமாதான சக வாழ்வையே கட்டிக் காத்து வந்துள்ளனர்.

சுதந்திரம் கிடைப்பதற்கு சுமார் ஐந்து தசாபதகாலம் முன்பிருந்தே இந்த நாட்டில் துளிர்விட்ட இனத்துவ அரசியல் மற்றும் காலனித்துவ ஆட்சியாளர்களின் பிரித்தாளும் தந்திரம் என்பவற்றிற்கு மத்தியிலும், சுதந்திரத்திற்கு பின்னர் பூதாகரமாக வெடித்த இனப்பிரச்சினை வன்முறையாக வெடித்த ஆயுதப் போராட்டம் என்பவற்றிற்கு மத்தியிலும் முஸ்லிம் சமூகம் சமாதான  சகவாழ்வின் சமநிலையை பேணுவதற்கு பாரிய விலையை செலுத்தியிருக்கிறது.

துரதிஷ்ட வசமாக இலங்கையின் உள்நாட்டு இனப்பிரச்சினை சர்வதேச மற்றும் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் கேந்திர முக்கியத்துவமிக்க அரசியல் பொருளாதார, இராஜதந்திர மற்றும் இராணுவ நலன்களுக்கேற்ப வெளியார் சக்திகளால் கையாளப்பட்ட பொழுது அரசியல் இராணுவ மற்றும் இராஜதந்திர பொறிகளுக்குள் இலங்கை வாழ் முஸ்லிம்கள் இரண்டு சகோதர சமூகங்களாலும் பலிக்கடாவாக்கப் பட்டார்கள்.

பனிப்போருக்குப் பின்னரான புதிய உலக ஒழுங்கில் மேலைத்தேய மேலாதிக்க சக்திகள் சர்வதேச முஸ்லிம் உம்மஹ்விற்கு எதிராக முடுக்கிவிடப்பட்டுள்ள கிறிஸ்தவ  சியோனிச சிலுவைப்போர் ஆசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் பௌத்தர்களையும்  இஸ்லாத்திற்கும் முஸ்லிம் உம்மாஹ்விற்கும் எதிரான செயற்பாடுகளில் களமிறக்கி வருகின்றனர்.

1999 இல் ஆப்கானிஸ்தானில் பாமியான் பிரதேசத்தில் தலிபான்களை ஏவி விட்டு  புத்தர் சிலைகளை குண்டு வைத்து தகர்த்தெறிந்த அமெரிக்கா, பர்மாவிலும் ,தாய்லாந்திலும்  லாவோசிலும்  பௌத்த முஸ்லிம் முரண்பாடுகளை முடுக்கிவிட்டுள்ளது.  போருக்குப் பின்னரான இலங்கையில் அதிகரித்துவரும் இந்திய சீன செல்வாக்கிற்கு மத்தியில் இஸ்ரேலூடாகவும் நோர்வேயூடாகவும் தனது மேலாதிக்க நலன்களை காப்பதற்கான வியூகங்களை அமெரிக்க வகுத்து வருகிறது.

கடந்தகாலங்களில் இலங்கைத் தமிழர்களின் சுயாட்சிக்கான உரிமைப் போராட்டத்தை எவ்வாறு சர்வதேச பிராந்திய சக்திகள் தத்தமது இராணுவ பொருளாதார இராஜ தந்திர நலன்களுக்காக களப்பலி எடுத்து அந்த சமூகத்தினை நலன்களை தூக்கிப் பிடித்து சர்வதேச அரங்கில் இருதரப்பு பலதரப்பு நலன்களுக்காக பகடைக் காய்களாக   பயன் படுத்துகின்றார்களோ  அதேபோன்று சிங்கள பௌத்தர்களையும் முஸ்லிம்களையும் மோதவிட்டு இலங்கையில் தமது இலக்குகளை அடைந்துகொள்ள சர்வதேச பிராந்திய சக்திகள் முனைப்புடன் ஒத்துழைக்கின்றன.  

இலங்கையில் அதிகரித்துவரும் சீனா ஜாப்பன் போன்ற  பௌத்த நாடுகளின் செல்வாக்கை குறிவைப்பதற்கான மூலோபாயத் திட்டமிடல்களில் இந்திய நலன்கள் உள்வாங்கப் படுவது இன்றியமையாத அதேவேளை எல்லோருக்கும் பொதுவான "இஸ்லாமோபோபியா " இஸ்லாமிய எழுச்சி குறித்த பயப் பிராந்தி,அல்காயிதா, தாலிபான் ,லஷ்கர் இ தைபா ,காஷ்மீர் முஜாஹிதீன்  குறித்த அச்சுறுத்தல்களை இங்குமிருப்பதாக உலகுக்கு காட்ட வேண்டிய தேவை அமெரிக்கவுக்கும் அதனை ஆட்டிப் படைக்கும் சியோனிச இஸ்ரேலுக்கும் அதன் கைக்கூலியான நோர்வேயிற்கும் இருக்கிறது.

அந்த இலக்குகளை அடைந்து கொள்வதற்காக "பௌத்த சியோனிசம்" எனும் புதிய ஒரு பாசிச பயங்கரவாதத்தினை வளர்த்து விடுவதற்கான முயற்சிகளில் இஸ்ரேலும் நோர்வேயும் அமெரிக்காவின் பின் புலத்தில் செயற்பட்டு வருகின்றன.

உண்மையில் இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு  விடுக்கப் படும் சவால்கள் இந்த நாட்டின் நலன்களுக்கு எதிரான சமாதான சகவாழ்விற்கும்  பொருளாதார சுபீட்சத்திற்கும் எதிரான சவால்களாகும்,  இந்த நாட்டின் இறைமைக்கும் சுயாதிபத்தியத்திற்கும் விடுக்கப் படும் அச்சுறுத்தல்களாகும்பிராந்தியத்தில் மேலாதிக்க போட்ட போட்டியிடும் சக்திகளின் மூலோபாயத் திட்டமிடல்களுக்குள் இலங்கையில் வாழுகின்ற மூன்று சமூகங்களும் உள்வாங்கப் படுகின்ற இந்த காலகட்டத்தில் இன மத மொழி பேதங்களுக்கப்பால் சகல் சமூகங்களும் முற்போக்கு சக்திகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்.

இந்த நாட்டிற்கு மாத்திரமல்ல இஸ்ரேல் எந்த நாட்டிற்கும் ஒரு சாபக் கேடாகும்! 

இன்றுவரை ஒரு நாட்டை இலங்கை முறையாக அங்கீகரிக்காமல் ஆகக் கூடுதலான ஒத்துழைப்பை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெறுகிறதென்றால் அது இஸ்ரேல் என்ற முறைகேடாக பிறந்த, முறைகேடாக வளர்ந்த, சர்வதேச பயங்கரவாத சியோனிச சாம்ராஜ்யமாகும்.

பர்மா வரையிலான பறந்து விரிந்த சியோனிச மேலாதிக்க காலனித்துவத்தை கனவு காணும் இந்த ஹராமான பிறப்பைக் கொண்ட இஸ்ரேல் இலங்கை விமானப் படைக்கு கிபிர் விமானங்களையும் புலிகளுக்கு அவற்றை அழிக்கும் விமான ஏவு கணைகளையும், டோரா விசைப் படகுகளை கடற் படையினருக்கும், அவற்றை அழிக்கும் நீர் மூழ்கிகளை கடற் புலிகளுக்கும் கொடுத்து, இரு தரப்பு அதிரடிப் படையினருக்கும் ஒரே காலப் பிரிவில் இஸ்ரேலில் பயிற்சியும் அளித்து இரு தரப்பு இரத்தத்தையும் உறிஞ்சி விட்டு இன்று உள்ளே புகுந்து அட்டகாசம் செய்ய இலங்கைத் தலைவர்களை வளைத்து போட்டுள்ளது.

1980 ல் ஜே ஆர் ஜெயவர்தனவுடன் ஆரம்பித்த இந்த முறை கேடான உறவு; அன்று சிறிமா அம்மையாரால் ஆரம்பிக்கப் பட்ட 30 வருட மகாவலி அபிவிருத்தி திட்டத்தை துரித மகாவலி அபிவிருத்தி திட்டம் என 6 வருடமாக மாற்றச் சொன்னதும் இஸ்ரேல் பாணியிலான சட்ட விரோத குடியேற்றங்களை ஏற்படுத்தச் சொன்னதும் அதற்காக உலக வங்கியையும் பல்வேறு சர்வதேச முதலீட்டு நிறுவனங்களையும் ஏமாற்றி அபிவிருத்தி உதவிகள் பெற்று ஆயுத கொள்வனவிற்கான காசுகளைப் பெற்றதும் இந்த இஸ்ரேல் தான்.!

ஜே ஆருக்கு வழங்கிய அதே கயிறை நெருக்கடிகள் மிகுந்த இலங்கையின் தற்போதையா தலைவர்களுக்கும் இஸ்ரேல் வழங்குகிறது. அமெரிக்காவுடன் சேர்ந்து இந்தியாவையும் தமிழர்களையும், சிங்களவர்களையும் ஏமாற்றும் இஸ்ரேலிய திட்டம் தற்போது முஸ்லிம் சிங்கள இன முறுகளுடன் ஆரம்பமாகிறது... இலங்கை, முஸ்லிம்களுக்காக அல்ல.. தனக்காக இந்த நாசகார சக்தியிடம் இருந்து விடுதலை பெற வேண்டும்!

இலங்கையிலிருந்து ஆயுதக் கொள்வனவிற்காக  இஸ்ரேல் சென்ற தூதுக் குழுவினருக்கு துறை முகம் துப்பரவு செய்யும் காற்று விசை (வோக்க்யூம் கிளீனரை )யந்திரத்தை காட்டி இது நீருக்கடியில் மூழ்கிச் செல்லும் மனிதர்களின் காலணி அளவை மாத்திரமல்ல இரத்த வகையை கூட அறிந்து சொல்லும் ராடார் கருவி என்று வகுப்பு நடாத்தியது மாத்திரமன்றி இதுகள் நாகரீகமடையாத மரத்தையன்றி வேறொன்றும் தெரியாத குரங்குகள் ஒரு வாழைப்பழத்தை கொடுத்து அனுப்புங்கள் என்று சொன்ன மொஸாட் உளவாளிகள் இஸ்ரேல இலங்கையுறவு எந்த அளவில் பேணப் பட வேண்டும் என அறிந்திருந்தனர்.  "ஏமாற்றிக் காரியம் பார்த்தல்: ஒரு மொஸாட் உளவாளியை உருவாக்கலும் இல்லாமல் செய்வதும்!" என்ற நூலில் விக்டர் ஒச்ரோவகி மற்றும் கலயர் ஹாய் ஆகிய இருவரும் இந்த கேவலமான இஸ்ரேலிய இராஜ நரித் தந்திரம் குறித்து குறிப்பிட்டுள்ளார்கள்.

நோர்வே அமரிக்காவின் இராஜ தந்திர சமாதானப் பொறி என்றால் இஸ்ரேல் அதன் ஆயுதக் கிடங்காகும்.! சமாதானப் பொறி தப்பின் சண்டைப் பொறி அமெரிக்காவின் புதிய உலக ஒழுங்கு..! நோர்வேயின் சமாதான முயற்சிகள் நடந்து கொண்டிருந்தபோது இலங்கை தென் கடலில் இஸ்ரேல் கடலுக்கடியில் அணு ஆயுதம்  தாங்கிய  நாசகாரி நீர் மூழ்கிகளை பரிசீலித்தது...இந்திய இஸ்ரேல அமெரிக்க முக்கூட்டு இராணுவ பலப் பரீட்சைகள் அரங்கேறின! இன்று மீண்டும் அதே சதிவலை பின்னப் படுகிறது...!  இலங்கையில் இனங்களுக்கிடையிலான சமாதானம் என்ற பெயரில்  இந்தியாவையும்  தலை குணியச் செய்து இழுத்துப் போட்டு இந்து சமுத்திர பிராந்தியத்தில் அமெரிக்க திடமாக கால் பதிக்கிறது.

அன்று இந்தியாவின் முதுகுக்குப் பின்னால் ஜே ஆருக்கு உதவிய அமெரிக்கா இஸ்ரேல் நலன் காக்கும் பிரிவை தனது தூதரகத்தில் இயங்க வைத்து இலங்கையின் உள்விவகாரங்களில் நாசூக்காக தலையிட்டது, இன்று சீனாவின் முதுகில் குத்துவதாக இந்தியாவிடம் கூறிக் கொண்டு இஸ்ரேல தூதுவராலயத்தை இலங்கையில் திறப்பதன் மூலம் அமெரிக்க இன்னுமொரு முறை இலங்கை இந்தியாவை மாத்திரமல்ல தமிழ் சமூகத்தின் நியாயமான அபிலாஷைகளிக் கூட பலிக்கடாவாக்க விரும்புகிறது !

தமிழர்களினதும் இலங்கையினதும் (தீமைகள் குறைந்த) உண்மை  நண்பனாக இருந்த இந்தியாவையும் தமிழ் போராளிகளையும் மூட்டி விட்டவர்கள் இந்த மேலைத்தேய  மற்றும் சியோனிஸ உளவாளிகள் தான், இந்திய இலங்கை உடன்படிக்கை கைச்சாத்திடப் பட்ட பின்னர் அதன் பிதாவான ராஜீவ் காந்தியினை கொலை செய்யத் தூண்டியவர்களும் இந்த சதிகாரர்கள் தான்! பிராந்தியத்திலிருந்து மேலைத்தேயம் நோக்கி தமிழ் போராளிகளின் நியாயமான உரிமைப் போராட்டத்தை நகர்த்தி தமது நலன்களுக்காக  நசுக்கி நாசமாக்கியவர்களும் அவர்கள் தான்!

இலங்கையும் இஸ்ரேலும் பயங்கர வாதத்திற்கெதிராக போராடுவதாக இலங்கையின் புதிய தலை முறையினரை இஸ்ரேல் மற்றும் இலங்கைத் தலைவர்கள் சிலர் நம்ப வைக்கின்றனர், காலனித்துவ பிரித்தானியாவும் ஏகாதிபத்திய அமெரிக்காவும் நேச நாடுகளும் இணைந்து பறந்து விரிந்த பலஸ்தீனை ஆக்கிரமித்து சர்வதேச சட்டங்களை மீறி நாள் தோறும்  சொந்த தாயகத்தையே இழந்து தவிக்கும் பாலஸ்தீன மக்கள் மீது கட்டவிழ்த்துவிடும் காட்டு மிராண்டித்தனங்கள்  குறித்த விழிப்புணர்வை இன மத பேதமின்றி இலங்கை மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.!

வட கிழக்கில் தமிழர்களை ஏவி முஸ்லிம்களை இனச் சுத்திகரிப்பு செய்ய வைத்ததும், சிங்களவர்களை ஏவி தமிழர்களை இனச் சுத்திகரிப்புக் செய்ததும் இஸ்ரேல் தான்! கிழக்கில் முஸ்லிம் முதலமைச்சர் வருவதனை இந்தியாவும் அமெரிக்காவும் விரும்பாத நிலையில் இலங்கையில் சிங்கள முஸ்லிம் இன முறுகல் தூண்டி விடப் பட்டுள்ளது.

இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் பிராந்திய மேலாதிக்க சக்திகளின் போட்டா போட்டியின் சதுரங்க விளையாட்டில் இலங்கை பிரதான ஆடுகளமாக மாறி வரும் நிலையில் அமெரிக்க தலைமையிலான மேலைத்தேய மேலாதிக்கத்தை  கிழக்காசிய பிராந்தியத்தில் மேலோங்கச் செய்வதற்கு இலங்கையிலும் அல் காயிதா தாலிபான்  இஸ்லாமிய அடிப்படைவாத  பயங்கரவாதம் வேரூண்டுகிறது என்ற பிரச்சாரம் இன்று முடுக்கி விடப்பட்டுள்ளது.

யூத சியோனிச சக்திகளின் மூலோபாய திட்டமிடல்களின் அடிப்படையிலேயே இன்று அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் உலக விவகாரங்களைக் கையாளுகின்றன. அந்த வகையில் கிழக்காசியாவின் கேந்திர முக்கியத்துவமிக்க இலங்கையினைஇஸ்லாத்திற்கெதிரான யூத சியோனிச பின்புலத்திலான சிலுவைப் போரின் கேந்திரமாக மாற்றுகின்ற நகர்வுகளை இஸ்ரேல்  பிராந்தியத்தில் மேற்கொண்டு வருகிறது.

சர்வதேச சதிகாரர்களின் நலன்கள் காக்க இனிமேலும் இன்னும் பல தசாப்தங்களுக்கு இரத்த ஆறு ஓடுவதை அனுமதிக்க முடியாது..! இனமுறுகல் களைத் தூண்டி இன்னும் நூதனமான  அழிவுகளை இஸ்ரேல் இங்கு சந்தைப் படுத்த அனுமதிக்க முடியாது..! சர்வதேச பிராந்திய சதிகாரக் கும்பல்களின் கைக்கூலிகளிடம்  நமது தலைஎழுத்து அடகு வைக்கப் படக் கூடாது..!

கட்சி அரசியலின்  குறுகிய அரசியல் இலாபங்களுக்காக இந்த நாட்டிலுள்ள தீய சக்திகளையும் காடையர்களையும் கூலிப்படைகளையும் தேசப் பற்றில்லாத இலாப நோக்கம் கொண்ட ஊடகங்களையும் எழுது கோள்களையும்  விலைக்கு வாங்கி  தமது சதி நாசகார பொறிகளுக்குள் இந்த அழகிய தேசத்தையும் அதன்  மக்களையும் உள்வாங்க எடுக்கப் படுகின்ற சகல முயற்சிகளையும் முறியடிப்பதற்கான அரசியல் இராஜதந்திர நகர்வுகளை சர்வதேச பிராந்திய சக்திகளுடன் இணைந்து தேசப் பற்றுள்ள சக்திகள்  அனைத்தும் ஒரே அணியில் நின்று இன மத மொழி வேறுபாடுகளைக் களைந்து முறியடிக்க வேண்டும்.

1 comment:

  1. தென் கிழக்காசியாவில் முஸ்லிம் பிராந்திய வல்லரசு ஒன்றின் அவசியத்தை மியன்மார்,காஷ்மீர்,இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான சமகால நடவடிக்கைகள் உணர்த்துகின்றன...

    ReplyDelete

Powered by Blogger.