Header Ads



கடற்கரையில் நடந்து சென்றவருக்கு கிடைத்த அதிர்ஷ்டம்


இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நபருக்கு கடற்கரையில் ஒதிங்கிய திமிங்கலத்தின் "வாமிட்" முலம் ஜாக்பாட் அடித்துள்ளது. இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் கென் வில் மென். 

வழக்கம் போல் தனது நாயுடன் கடற்கரையில் வாக்கிங் சென்றுகொண்டு இருத்தபோது, கரை ஓரம் ஒதுங்கி கிடந்த தேங்காய் பருமன் கொண்ட ஒரு பொருளை நாய் மோப்பம் பிடித்தவாறே நின்றது. முதலில் கல் போன்று தோன்றியதால் அதை பொருட்படுத்தாமல் சிறிது தூரம் நடக்க தொடங்கினார். 

ஆனால் நாய் அதை விட்ட பாடில்லை. அதனால் அந்த பொருள் என்ன என்று பார்க்க நினைத்த கென் வில் மென், அதை கையில் எடுத்து மோந்து பார்த்த பொழுது, துர்நாற்றம் மற்றும் நறுமணம் கலந்து வீசவே, அதை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார். பின்னர்தான் அது திமிங்கலத்தின் "வாமிட்" என தெரியவந்தது. 

சில நேரங்களில் திமிங்கலம் தான் உட்கொண்ட உணவை வயிற்று கோளாறு காரணமாக கக்கிவிடுகுறது. அந்த குளுகுளு "வாமிட்" பல மாதங்கள் கடல் நீரில் மிதந்தவாறு இருக்கும். மேலும் அதன் மீது வெயில் பட பட பறை போன்று இறுகி பின்பு கடற்கரையில் ஒதுங்குகிறது. இது தான் சென்ட் ("வாசனை திரவம்") தயாரிக்க பயன்படும் மிக முக்கியமான மூலப்பொருள். மிக அபூர்வமாக அதுவும் இயற்கையாக கிடைக்கும் இதன் விலை மிக மிக அதிகம். இவரிடம் உள்ள இந்த திமிங்கல வாமிட்டை ஏற்கனவே 50,000 ஈரோவுக்கு (36 லட்சத்து 31 ஆயிரத்து 20 இந்திய ரூபாய்) விலை தர முன்வந்துள்ளார். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஒருவர். ஆனால் திமிங்கலத்தின் "வாமிட்டை பரிசோதனை செய்து அதன் உண்மை விலையை கண்டு அறிந்த பின்னர் விலைக்கு விற்க முடிவு செய்துள்ளார். கென் வில் மென். திமிங்கலத்தின் "வாமிட்" மூலம் இவருக்கு அடித்த லக்கை பாருங்களேன்!

No comments

Powered by Blogger.