Header Ads



பட்டதாரிகளை ஆசிரியர் சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான போட்டிப் பரீட்சை


(ஏ.எல்.நிப்றாஸ்) 

கிழக்கு மாகாண பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்காக பட்டதாரிகளை உள்ளீர்ப்பதற்கான போட்டிப் பரீட்சை எதிர்வரும் 16ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது. இதற்கான அனுதி அட்டைகள் மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளர் எச்.ஈ.எம்.டபள்யு.ஜி. திசாநாயக்கவினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 

இம்மாகாணத்தில் காணப்படும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காக பட்டதாரிகளிடமிருந்து மாகாண பொதுச் சேவைகள் ஆணைக்குழு ஓரிரு மாதங்களுக்கு முன்னர் விண்ணப்பங்களை கோரி இருந்தது. பல்வேறு பாடங்களுக்கும் பொருத்தமான பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. 

இந்நிலையில் மும்மொழிகளிலுமான போட்டிப் பரீட்சை சனிக்கிழமை நடைபெறவுள்ளது. கல்முனை, அம்பாறை, மட்டக்களப்பு உள்ளிட்ட பரீட்சை நிலையங்களில் இப்பரீட்சை நடைபெறும். காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகும் பரீட்சையில் பொது உளச்சார்பு மற்றும் பொது அறிவு ஆகிய இரு பாடங்களைக் கொண்டதாக காணப்படும்.

இதற்கான அனுமதி அட்டைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இன்னும் சில பரீட்சார்த்திகளுக்கு அவை இன்னும் கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. 

No comments

Powered by Blogger.