மலாலாவின் தலையில் பொருத்தப்பட்ட தகடு
பாகிஸ்தானிய சிறுமி மலாலா யூசுப்பிற்கு 5 மணி நேர சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபரில் தலிபான்களின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி மலாலா
படுகாயமடைந்திருந்தார். தொடர்ந்து அவருடைய மண்டையோட்டை துளைத்து நின்ற துப்பாக்கி ரவை பாகிஸ்தானில் அகற்றப்பட்டது.
பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இங்கிலாந்து பர்ஹிம்மிலுள்ள மகாராணி எலிசபெத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சனிக்கிழமை மலாலாவின் மண்டையோட்டில் டைட்டானியம் பிளவ் மற்றும் ஹோச்லேயர் உபகரணம் என்பன வைக்கப்பட்டு சேதமடைந்த பகுதி மீளமைக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
இச் சத்திர சிகிச்சைகள் மூலம் மலாலா ஆபத்தான கட்டத்தை தாண்டியுள்ளதாக சத்திரசிகிச்சை மேற்கொண்ட மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த டிசம்பரில் மலாலாவை பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி சென்று பார்வையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment