முஸ்லிம்ககளுக்கு முன்னாலுள்ள சவாலுக்கு..!
(பாஹிர்)
இன்று இலங்கை முஸ்லிம்களின் அபாயகரமான நிலமைக்கு எது காரணம்..? என்பதில் தெளிவு காண்பதுடன். ஆதற்கான தீர்வை பெறுவது காலத்தின் தேவை கருதி சில விடயங்களை உங்களிடம் பகிர்ந்தகொள்கின்றேன்.
இலங்கையில் தொண்டு தொட்டு சிறுபான்மை சமூகமாக வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சமகாலமாக கட்டவிழ்த்தப்படுகின்ற காடைத்தனத்தினை ஒரு சாதாரண விடயமாக கனிக்க முடியாது. மாற்றமாக அது பாரியதோர் அபாயகரமான விழைவினை தோற்றிவிக்கக்கூடிய இனக்கருவறுப்புச் சம்பவங்களாக அது அமையப்பெற்றிருப்பதனை கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் உணர்த்துகின்றது.
ஒரு தனிநபருக்கோ! அல்லாது ஒரு சமூகத்திற்கெதிராகவோ! முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள். அது அநீதி என்ற உண்மையை உணர்த்தக்கூடியதாக இருத்தல் வேண்டும். அக்குற்றச்சாட்டுக்களை முன்வைக்கக்கூடிய எந்த சக்தியாக இருப்பினும். அவர்கள் அவ்விடயங்களுக்குண்டான ஆதாரங்களுடன் சட்டத்திற்கு முன்னால் நிருபித்து அதற்குண்டான நீதியைப்பெற முனைய வேண்டும். இதுதான் அநீதி இழைக்கப்பட்டவர்கள் செய்ய வேண்டிய முதலாவது நடவடிக்கையின் அடிப்படை விடயமாகும்.
அந்த ஆதாரங்களை சட்டத்துக்கு முன் கொண்டு வந்து அவ்விடயத்திற்கு நீதி கிடைக்காத போதும். அதற்கு அதிகாரம் தடையாக இருக்குமானால் அந்த அதிகார வர்க்கத்தினருக்கெதிராக அழுத்தம் கொடுக்கும் முகமாக சமூகத்திற்கான பணி என்றடிப்படையில் சமூகத்தை ஒன்று கூட்டி அகிம்சை வழியில் போராட்டங்களை நடாத்துவது மற்றுமொரு நடவடிக்கையும் அதற்கான ஒரு வழியுமாகும்.
ஆனால் இன்று இலங்கையில் நடப்பது என்ன..?
முற்றிலும் மாற்றமான நிலைதான்.சிறுபான்மையாக வாழக்கூடிய முஸ்லிம்கள். எந்த சமூகத்திற்கெதிரான மதவழிபாடு மற்றும் வழிபாட்டுத்தளங்களுக்கோ! எந்தச் சமூகத்திற்கெதிராக நிலஅபகரிப்பு மற்றும் கலாச்சாரத்திற்கு கலங்கம் ஏற்படுத்தியதோ இல்லை. இன்னும் ஒரு மர்மம் மறைந்திருக்கத்தான் செய்கின்றது. முஸ்லிம் சமூகத்திற்கு அவ்வப்போது அநீதி இழைகப்படுகின்ற நிலையில் அப்போதும் யாரையும் எவருடனும் காட்டிக்கொடுத்த சம்பவங்களும் கிடையாது.
ஆனால் முற்றிலும் மாற்றமாக இத்தேசத்தின் இறமைக்காக பல தியகங்களை முஸ்லிம் சமூகம் செய்து காட்டிருக்கின்றது என்பதுதான் வரலாறு குறுப்பிடுகின்ற செய்தியாகும். அதுதான் வாஸ்தபம். இவ்விடயங்களை எந்த தரப்பினாலும் மறைக்கவோ மறுக்கவோ முடியாது.
அவ்வாறான ஒரு கடமை உணர்வோடும் பொருமையோடும் வாழந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்திற்கெதிராக சமகாலத்தில் பல குற்றச்சாட்டுக்கள். அடுக்கப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் நிகழ்ச்சி நிரழாக தயாரிக்கப்பட்டு. ஒன்றின் பின் ஒன்றாக அது நடந்துகொண்டிருப்பதும். அவ்விடங்களை பற்றி அதிகாரத்தலுள்ளவர்கள் முஸ்லிம் தலைமைகள் ஆர்வம் காட்டி ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையும் எடுக்கமாலும். ஆட்சியாளர்கள் கூட அமைதியாக அவதானித்துக்கொண்டிருப்பதும். கவலைதரும் விடயமும் இங்கு குறிப்பிட்டு காட்ட வேண்டிய விடயமுமாகும்..
சமகாலங்களாக முஸ்லிம்களுக்கொதிராக போலியான குற்றச்சாட்டுக்களும். அதற்கான தீர்வைபெற அவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும். இதோ..!
1. முஸ்லிம்கள் தங்களது கடமைகளை செய்யக்கூடிய பள்ளிவாயல்களில் குறிப்பிட்ட சில பள்ளிவாயல்களை அவ்விடத்தை விட்டும் அகற்ற வேண்டும். என்ற குற்றச்சாட்டு ஒரு முக்கியமான குற்றச்சாட்டாக காணப்படுகின்றது. அக்குற்றச்சாட்டுக்கு பிரதான ஒரு காரணமாக அது பூனிதப்பூமி என்ற சுட்டுவட்டாரத்திற்குள் அடங்கப்பட்டுள்ளதாக பூதகரமான வாதத்தை முன்வைத்து. அதனை மதகுமார்களின் தலைமையில் போராட்டம் என்ற போர்வையில். அப்பள்ளி வாயலை முற்றுகை இடுவவதும். அப்புனித்தளங்களுக்குல் நுழைந்து அசிங்கமாக நடந்து கொள்வதும்.
2. எங்கோ! ஒரு திசையில் ஏதோ! ஒரு கோணத்தில்; பௌத்த மதத்திற்கெதிராக அசம்பாவிதம் ஏதும் நடந்து விட்டால். அந்த செயற்பாட்டிற்கு எதிர்ப்பு காட்டுவது இலங்கையில்; வாழக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராகவே.! இது நேர்மையற்ற செயற்பாடும் இனத்துவேசமுமாகும்.
3. நிகழ்ச்சி நிரலிள் சேர்க்க வேண்டிய நிலை தோன்றினால்.. நாடகத்திற்கு ஒரு வேடம் போன்று. முஸ்லிம் கடைகளில் 'புத்தர் சிலை பொறிக்கப்பட்ட கையுறைகள் விற்கப்படுவதாக போலியான வேடம் அன்று தேவைப்பட்டது.
4. நிகழ்ச்சி நிரலிள் செர்க்க வேண்டிய நிலை தோன்றினால்.. தொண்டு தொட்டு இலங்கை தேசத்தில் வாழ்ந்து வருகின்ற முஸ்லிம் சமூகத்தை. வந்தான் வரத்தான் என்ற இனவாத வார்த்தை பிரயோகித்து முஸ்லிம்களுக்கு இலங்கையில் பூர்வீகம் இல்லை. என்ற இனவாதக்கருத்தை பிரயோகித்து பல திசைகளிலும் ஆர்ப்பாட்டம் அறிக்கை என்பதனை அடிக்கடி பார்க்க கூடியதாக இருக்கின்றது.
5. நிகழ்ச்சி நிரலிள் சேர்க்க தோன்றினால்.. உலகிள் நாளா திசைகளிலும் பேசக்கூடிய வாதமான தீவிரவாதத்தை. இலங்கை முஸ்லிம்களுக்கெதிராகவும் முன்வைக்கின்றனர். முஸ்லிம்கள் தீவிரவாதிகளுக்குத் தேவையான நிதிகளை சேகரிப்பதும். அதனுடைய வளர்ச்சிக்காக முஸ்லிம்களுடைய அமைப்புகள் செயற்படுவதாகவும் குற்றச்சாட்டுக்களை சுமத்துகின்றனர்.(அதில் ஹலால் சான்றுதல் உத்தரவாதத்தை தீவிரவாதமாக காட்ட முற்படுகின்றனர்) இவ்வாறான அடிப்படையில்தான் இடத்திற்கும் காலத்திற்கும் ஏற்றவாறு போலியான குற்றச்சாட்டுகள் முன்னெடுத்துச்செல்கின்றனர். அது பல கோனத்திலும் பல திசைகளிலும் அரங்கேற்றம் செய்யப்பட்டு வருகின்றதை அவதானிக்க முடியும்.
இவ்விடயங்களைப்பற்றி சகல தரப்பும் சற்று சிந்திக்க கடமைப்பட்டுள்ளீர்கள்..!
அவர்களின் வாதப்படி மேலே சொல்லப்பட்ட 'முஸ்லிம்கள் ஏனைய மதவழிபாட்டுத்தளங்களின் சுற்று வட்டாரத்தில் நிலத்தை அபகரித்து பள்ளி வாயல்கள் அமைத்து. அவர்களின் மதவழிபாடு மற்றும் வழிபாட்டுத்தளங்களுக்கோ!. மற்றும் அவர்களின் கலாச்சாரத்திற்கு கலங்கம் ஏற்படுத்தினார்கள்! என்ற விடயத்திலும். முஸ்லிம்கள் தீவிரவாதத்தை ஆதரித்து அதனை வளர்ப்பதற்குண்டான நடவடிக்கையினை மேற்கொள்கின்றார்கள்! என்ற விடயத்திலும். நேர்மையான முறையில் ஆய்வுகளை மேற்கெண்டால்.. தெட்டத் தெளிவாக ஒரு உண்மை வெளிப்படும்;. அவர்களின் அந்த குற்றச்சாட்டிற்கும்; முஸ்லம்களுக்கும் எந்தச் சம்பந்தமே கிடையாது என்று. ஆனால் இது முஸ்லிம்களுக்கெதிராக சொல்லப்படும் அப்பட்டமான அவதூறும்; அவர்களுக்கொதிராக மேற்கொள்ளப்படுகின்ற சதியே தவிர வேறொன்றும் அதில் கிடையாது என்பது தெட்டத் தெளிவாக விளங்கிக்கொள்ளக்கூடியதாகவே இருக்கும்.
அதனால்தான் கடந்த காலத்தில் நடந்தவைகள் பற்றி எந்த சக்தியும் அலசாமல் அமைதியாக இருந்தார்கள்.
இந்த விடயம் சம்பந்தமாக முஸ்லிம்களக்கெதிராக சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டகள் அப்பட்டமானவைகள். முஸ்லிம்களின் மீதுதான் இனக்கருவறுப்பு கட்டவிழ்த்தப்படுகின்றது. என்ற கருத்துக்களை சில முஸ்லிம் தலைவர்களும் இயக்கங்களும் அவ்வப்போது அறிக்கைகளை விடுவதிலிருந்து அதில் குறிபிட்ட அமைப்பு ஆர்ப்பாட்டம் வரைக்கும் சென்றனர். ஆனால் அதற்கு எந்த சைகயும் காட்டப்படவில்லை. அது சம்பந்தமாக மேல்மட்டத்தினர் கூட மௌனமாகவேதான் இருந்தனர்.
ஆனால் 24.01.2013 அன்று இந்நாட்டின் ஜனாதிபதி அவர்கள். இந்நாட்டின் முஸ்லிம் அரசியல் தலைவர்களுடன் அது சம்பந்தமாக பேசியிருக்கின்றார். அச்சந்திப்பில் முஸ்லிம் தலைவர்கள் சகலரும் சமூகமளிக்கா விடினும். சிலர் சமூகமழிpத்திருந்து கடந்த காலங்கில் நடந்த சம்பவங்களை குறிப்பிட்டு காட்டியிருந்தனர். அதனை அவதானித்த ஜனாதிபதி முஸ்லிம்களுக்குல் பல பிரிவு பல பிரச்சினை இருப்பதாக குறிப்பிட்டு காட்டிருந்ததில் உண்மை இருப்பினும். அந்தப்பிரச்சினைக்கும் இயக்கங்கள் ரீதியான பிரிவுக்கும்; சம்பந்தமில்லாத விடயமாகும். இருப்பினும் இறுதியாக நடந்த சம்பவங்களை ஆராய்வதற்கு பாராளமன்றக் குழுவை அமைப்பதாக குறிப்பிட்டிருந்தார்.
* 24.01.2013 அன்று ஒன்று கூடி ஜனாதிபதியினால் உறுதிபொழியும் உத்தரவும் அளிக்கப்பட்ட 'நடந்த சம்பவங்களைப்பற்றி ஆய்வு செய்வதற்க்காக பாராளமன்ற குழு அமைப்பதென்ற விடயம்'. அது கடந்த காலத்தில் நடந்த சம்பவங்கள் பற்றி ஆய்வை மேற்கொண்டு. அந்த ஆய்வு நல்ல தீர்வை தரும் என்றும். அதனால் எதிர்காலத்தில் அவ்வாறன சம்பவங்கள் இடைபெற மாட்டாது என்றும்.
நம்பிக்கை கொள்வதில் தடுமாற்றம் ஏற்படாமல் இல்லை. கடந்த காலத்தில் உறுதிமொழி என்ற விடயத்தில் தடம்புறன்ட சம்பவங்கள் ஏராளம் ..ஏராளம்.. என்ற விடயத்தை வைத்தும்..
* இலங்கை ஜனாதிபதி இலங்கை ஜம்மயதுல் உலமா சபையின் தலைவருடனான சந்திப்பில். தேசத்தின் பிரச்சினைக்காக ஜனீவா வரைக்கும் குரல்கொடுத்த அமைபப்பு ஒன்று இருக்குமாக இருந்தால். அது உங்களுடைய அமைப்பாகத்தான் இருக்கும். அந்தநடவடிக்கையினை நான் எப்போதும் மறக்க மாட்டேன் என்று குறிப்பிட்ட விடயம். (நன்றி உணர்வு காலம் கடந்து வந்திருப்பது காலத்தின் தேவையோ..? என்ற விடயத்தை வைத்தும்..
* 28.01.2013 அன்று பொதுபல சேன என்ற அமைப்பினர். ஜனாதிபதியுடனான சந்திப்பில் நாட்டில் நடக்கும் சம்பவங்களுக்கும் எமக்கும் எந்ந தொடர்பும் இல்லை. எனறு கூறியிருக்கின்ற விடயம்.
ஏன்ற விடயத்தை வைத்தும்..
* 28.01.2013 அன்று இடம்பெற்ற அமைச்சர்கள் மாற்றத்தில். முஸ்லிம் அரசியல் தலமைகளுக்கு அமைச்சுப்பதவி கொடுக்கபட்ட விதத்தினை அவதானிக்கின்ற போதும். ஒரே மாவட்டத்திலே ஏற்கனவே பிரதி அமைச்சர்களாக இருந்தவர்களுக்கு ஒரு முழுஅமைச்சும் ஒரு பிரதியமைச்சும் கொடுக்கப்பட்டன. முழுஅமைச்சு கொடுக்கப்பட்வர் நான் மாவட்டத்திலே முதலாவதாக முழு அமைச்சராக வரவேண்டும். என்ற ஆசை இன்றுதான் நிறைவேறியிருக்கின்றது. என்ற அறிக்கையும். இவ்வாறு அமைச்சுப்பதவிகளுக்காக அரசியல் தலமைகளும் கட்சிகளும் ஆசை ஆர்வம் காட்டுகின்ற நிலமையும். ஏன்ற விடயத்தை வைத்தும்..
* 20.04.2012 அன்று தம்புள்ள பள்ளியில் நடாத்திய இனகருவறுப்பிற்கு அன்று அதிகாரம் மௌனம் காட்டப்பட்டு. அதன் அண்டிய காலப்பகுதியில் கிழக்ககை ஆட்சி செய்யும் தேர்தல் வருகின்ற சந்தர்ப்பமாக இருந்ததால். கிழக்கின் பெரும்பான்மை முஸ்லிம்கள் என்ற அடிப்படையில. தம்புள்ள பள்ளி தாக்குதலுக்கு சற்று ஆர்தலான அறிக்கைகள் வார்த்தை அளவில் வெளிவரத் தொடங்கியதும். அத்தேர்தலில் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசை முழுக்க முழுக்க கண்டித்து முஸ்லிம்களின் வாக்குகளை கபளீகரம் செய்து. அத்தேர்தலினூடாக கிடைத்த வெற்றியின் பின் அதே அரசாங்கத்தில் ஒட்டிக்கொண்டு வெறும் அமைச்சர்கள் என்ற சுகபோகங்களை சுகிக்கிக் கொண்டிருப்பதும். அதனை வரப்பிசாதமாக எடுத்துக்கொண்டு அவர்களின் வாய்க்கு முத்திரை குத்தப்பட்டுவது முஸ்லிம்களின் முகத்திரையை கிழிக்கவே! ஏன்ற விடயத்தை வைத்தும்..
* சென்ற காலங்களில் அவ்வப்போது முஸ்லிம்களுக்கொதிராக நடாத்தப்பட்ட சம்பவங்களுக்கு அதிகாரம கொண்டவர்கள்; மௌனமாக இருந்துகொண்டு. பின்னர் தேர்தல் காலங்களிலும் இன்னும் பிறசந்தர்ப்பம் வருகின்ற போது. ஆசைவார்த்தைகளை அள்ளி வீசுவதும். பின்னர் காலநேரங்கள் கடந்த பிறகு இழுப்படிப்பும் அதனை மழுங்கடிப்புச் செய்யப்பட்டு வந்தது வரலாற்று உண்மை. இந்த விடயத்தை வைத்தும்..
* 6.2.2013 அன்று பாராள மன்றத்தில் எதிர்கட்சி தலைவர் அவர்கள் முஸ்லிம்களுக்கெதிராக சமகாலமாக நடந்து கொண்டிருக்கின்ற விடயங்கள் சம்பந்தமாக ஒரு வாதத்தை முன்வைத்த விடயமான முஸ்லிம்களின் பள்ளிவாயல் தாக்குதல் அவர்களின் பண்பாட்டு ரீதியாக அச்சுறுத்தி வருகின்ற பேரினவாத்தை கண்டித்து பேசியபோது அரசாங்கம் மறுப்பு தெரிவித்ததும்.
8.2.2013 அன்று அரசாங்கத்தின் சபை முதல்வர் அவர்கள் அந்த வாதத்திற்கு பதிலழித்த விதம்.
நாட்டில் முஸ்லிம்களின் எந்த மதத்தளமும் இதுவரை தாக்குதலுக்குற்படுத்தப்படவில்லை. என்ற கருத்தை தெரிவித்திருப்பதும்.
பாரியதோர் அபாயகரமான சம்பவம் இடம்பெறுகின்ற சூழலே அதிகரித்துக் கொண்டிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
சென்ற காலங்களில் சந்தர்ப்பத்திற்கு ஏற்றவாறு அரசியலுக்காக ஒரு வாக்குருதி என்றடிப்படையில் அரசியலை நகர்த்தி சென்றதைப்போன்று. மார்ச் மாதமும் ஜெனிவா மேசையும் பக்கத்தில் வந்து விட்டது. என்பதற்காக நடந்த விடயங்களுக்கு ஆய்வை மேற்கொள்ள மேல்சபையில் ஒரு குழு அமைப்பதாக உத்தரவாதம். அது ஆர்தலை ஏற்படுத்திரந்தாலும் அரக்கர்களின் அரங்கேற்றம் சற்றும் குறைந்ததாக இல்லை. இன்னும் அது வீரிப்படையும் என்பதற்கு ஜெனிவா மேசைதான் தடையாக உள்ளது. என்பதற்கு கடந்த காலம் சொல்லித்தருகின்ற அர்த்தமுள்ள பாடமாகும்.
எனவே வார்த்தை அளவில் வாக்குறுதியும். வாய்களை அடைத்து வைத்திருக்கின்ற அமைச்சுப்பதவிகளும்;. அதிகாரமிக்கவர்கள் நாட்டினுடைய உயர் சபையிலே உண்மைக்கு மாற்றமான நிலைப்பாட்டை கொண்டிருப்பதும். எதனை உணர்த்துகின்றது..? என்பதனை நீங்களே முடிவு செய்தகொள்ளுங்கள்...!
இந்த விடயத்தில் எனக்கும் பொறுப்பும் கடமையும் உண்டு என்றடிப்படையில். நடந்த விடயங்களை அவதானித்த நான். சில விடயங்களை தொட்டுக்காட்டியுள்ளேன். இதற்கு இவ்வாறான அறிக்கைகளோ! ஆர்ப்பட்டங்களோ! ஏந்த ஒரு தீர்வையும் தந்துவிடாது. மாற்றமாக அவர்களின் முயற்ச்க்கு முட்டுக்கொடுப்பவர்களாக இருக்கக்கூடிய முஸ்லிம் அரசியல் தலைமைகள்.
தங்களின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படுத்தாத வரை. முஸ்லிம்களின் எந்தப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைக்கும் என்பது எட்டாக்கனியாகும்.
அதற்காக முஸ்லிம் அரசில் தலைமைகள் தங்களுடைய கொள்கையில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஈமானித்துவத்தை அடிநாளத்தில் பதித்துக்கொண்டு சமூகம் என்ற வட்டத்திற்குல் இருந்து கொண்டு சரியான திட்டங்களை வகுத்து ஆக்கபூர்வமான முடிவினை எடுப்பதிலும்தான் அதில் வெற்றி உண்டு. இதுதான் முதலாவதும் பிரதானமானதுமாகும்.
அடுத்ததாக இந்த விடயங்களுக்கு தனிநபர் மற்றும் இயக்கங்கள் தங்களது இயலுமான பங்களிப்பினை செய்தவருகின்ற போதும். அதற்கு தடைகற்களாக அமைந்திருப்பதும் எடுக்கின்ற முயற்சிகள் பின்னடைவுக்காரணம். அரசியல் தலைமைகளின் நிலைப்பாடே காரனமாக இருப்பதால்..
முழுக்க முழுக்க முஸ்லிம் அரசியல் தலைமைகளின் தடுக்களே..! அவர்களின் சதிகளுக்கு உந்து சக்தியாக அமைந்திருக்கின்றது என்ற உண்மையை இக்கட்டுரை ஊடாக தெளிவாக சொல்லி வைக்க தயங்வில்லை.
ஏன்பதுடன் தனிநபர் மற்றும் இயக்கங்கள் மேற்கொள்ள வேண்டிய அவசியமான ஒரு நடவடிக்ககை முஸ்லிம் அரசியல் தலைமைகளுக்கு அழுத்தங்களை கொடுத்து. அவர்களின் நிலைப்பாட்டில் மாற்றத்தை கொண்டுவருவதின் ஊடாக எந்தச் சதிகளையும் முறியடிக்க முடியும். என்பதனை குறிப்பிட்டு விடைபெறுகின்றேன்.
Post a Comment