பிரபாகரனின் மகனுடைய படத்துடன் இந்திய பாராளுமன்றத்தில் போராட்டம்
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை விவகாரம், இன்று இந்திய நாடாளுமன்றத்தில் எதிரொலித்தது.
இன்று இந்திய நாடாளுமன்றம் கூடிய போது, படுகொலை செய்யப்பட்ட பாலச்சந்திரனின் ஒளிப்படங்களை ஏந்தியபடி, அ.தி.மு.க, திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
இலங்கை அரசுக்கு எதிராக முழக்கம் எழுப்பியபடி, சபாநாயகர் மீரா குமாரை நோக்கி அவர்கள் முன்னேறிச் சென்றபோது அமளி ஏற்பட்டது. இதையடுத்து நாடாளுமன்றம் நண்பகல் வரை ஒத்திவைக்கப்பட்டது.
Post a Comment