இளம் சாதனையாளர்களுக்கான விருது - தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் அபாரம்
(KRM.றிஸ்கான்)
உயர்கல்வி அமைச்சினால் பல்கலைக்கழக, உயர்கல்வி நிறுவன மாணவர்களிடையே தேசிய ரீதியாக நடாத்தப்பட்ட பல்துறை இளம் சாதனையாளர்களுக்கான ஆற்றல் 'டலன்ட்' போட்டி நிகழ்வு கொழும்பு மஹிந்த ராஜபக்ஷ தாமரை தடாகம் அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பீ.திஸானாயக்கா, கௌரவ அதிதியாக பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணங்களையும் பரிசில்களையும் வழங்கி வைத்தனர்.
இப்போட்டியில் கலந்து கொண்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களான சஹ்பி. எச். இஸ்மாயில் கவிதைப் பிரிவில் முதலாமிடத்தையும், இன்ஸிரா இக்பால் நாவல் பிரிவில் முதலாமிடத்தையும், பாத்திமா சப்ரினா நாவல் பிரிவில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம். இஸ்மாயில், ஆற்றல் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், விரிவுரையாளருமான ஏ.எம்.றஸ்மி, விரிவுரையாளர் விக்ரமரத்ன ஆகியோருடன் சென்றிருந்த மாணவர் குழுவே மேற்படி போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
முதற் தடவையாக நடைபெற்ற 'டலன்ட்' போட்டியில் தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பங்கு பற்றி தங்களது திறமைகளை வெளிக்காட்டி வெற்றியீட்டியதன் மூலம் பல்கலைக்கழத்திற்கும், அவர்களது பிரதேசத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
Post a Comment