Header Ads



நினைவுட்டப்பட வேண்டிய எமது வரலாற்றின் சில துளிகளும், எமது கடமைகளும்



(SAFRAN BIN SALEEM)

இன்றைய காலகட்டத்தில் சில குழுக்கள் எமது நாட்டை இன்னுமொறு யுத்தத்தை நோக்கி அழைத்துச் செல்ல முயற்சிக்கின்றது. இவ் யுத்தத்தை நவீன ஊடகங்களினூடாகவும் (முகப்புத்தகம் FACE BOOK) மேற்கொள்ள முயற்சிக்கின்றன, அதே வேளை சிங்கள , முஸ்லிம் மக்கள் மத்தியிலே பெரியதோர் புரிந்துணர்வின்மையை வளர்க்க முயற்சிக்கின்றனர். ஆகவே இறந்த காலத்தில் இலங்கையராக நாம் என்ன செய்தோம் , வருங் காலத்தில் நாம் என்ன செய்ய வேண்டும் என ஆராய கடமைப்பட்டுள்ளோம்.

இலங்கை மாதாவிற்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான உறவு குறித்து சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன். 

1. ஆங்கிலயேர் இலங்கை மன்னன் ராஜசிங்கனை கொல்வதற்காக விரட்டி வரும் போது அவர் ஒரு மரத்தின் பின்னால் ஒழிந்து கொண்டார். இதனை ஒரு முஸ்லிம் பெண்மணி அவதானித்துக் கொண்டிருந்தாள். ஆங்கிலய படை அவளிடம் கேட்ட போது அவள் மௌனம் காத்தாள். இறுதியில் அவள் ஆங்கிலயே படையினரால் கொல்லப்பட்டாள். அப்பொழுது மன்னன் ராஜசிங்கன் அப் பெண்மணியை பார்த்து “மா ரெக லே” (என்னை பாதுகாத்த இரத்தம்) என்று சொன்னார்.

இச் சம்பவம் இந் நாட்டுக்காக தம்மை அர்ப்பனித்தமையை சான்று பகர்கின்றது .      
                                                                                                           
2. வெளிநாட்டவர்கள் உட ரட்டை ராஜதானியை கைப்பற்ற வந்த போது அதிகளவான முஸ்லிம் மக்கள் சிங்கள மக்களுடன் இனைந்து வெளிநாட்டவர்களுக்கு எதிராக போரிட்டனர்.

3. மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரை சேர்ந்த உமர் லெப்பை மரிக்கார் என்பவர் யானை ஒன்றினை தலதா மாளிகைக்கு அன்பளிப்பு செய்தார். அதனால் அவர் 1000 ரூபா தாளில் ஞாபகப்படுத்தப் படுகின்றார்.

4. மாரச் 21ஆம் திகதி ஏன் பொலிஸ் தினம் கொண்டாடப்படுகிறது என உங்களுக்கு தெரியுமா?

மாரச் 21ஆம் திகதி அன்று தான் தன் தாய் நாட்டுக்காக முதன் முதலாவதாக ஒரு பொலிஸ் அதிகாரி உயிர் தியாகம் செய்தார். அவரின் பெயர் மொஹமட் ஸபான். இவர் ஒரு முஸ்லிம்.

5. இலங்கை சுதந்திரத்துக்காக உழைத்தவர்களில் சித்தி லெப்பை , டி.பி. ஜாயா போன்ரோர் முக்கிய உதாரணபுருஷர்களாவர்.

6. கடந்த கால யுத்தத்தில் முக்கிய இராணுவ புலனாய்வு அதிகாரியாக செயற்பட்டு LTTE இனால்கொல்லப்பட்ட கேர்னல் முத்தலிப் அவர்களின் நாட்டிக்கான சேவை நினைவுட்டத்தக்கது. 

7. ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களினது ஆட்சிக்காலத்தில் முக்கிய பல அமைச்சுப் பதவிகள் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது. உதாரணமாக 

   நைநா மரிக்கார் - நிதி அமைச்சர்
   A.C.S ஹமீத்        - இலங்கையின் முதலாவது வெளிவிவகார அமைச்சர்

8. அமரர். திரு.S.W.R.D பண்டாரநாயக்க அவர்களின் கருத்து “சிங்களவர்களது வரலாற்றை போன்றே அதே அளவு கால வரலாற்றை இலங்கை சோனகர்களும் கொண்டிருக்கின்றனர். இவ்விரு சமூகங்களும் வரலாறு நெடுகிலும் ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர்”.

9. அமரர். திரு. சேநாநயக்க அவர்களின் கருத்து, “இலங்கை சோனகர் சமூகமானது இலங்கையின் முக்கியமான சமூகங்களில் ஒன்று. வர்தகத்தை முன்னோக்கி கொண்டு செல்ல அவர்களது கையில் வர்தகத்தை ஒப்படைக்க வேண்டும்”.

10. அமரர். Sir ஒலிவர் குணதிலக அவர்களின் கருத்து,, “2ம் உலக மகா யுத்ததின் போது இலங்கை சோனக சமூகமானது என்னுடன் சிறந்த முறையில் பங்களிப்பு செய்தனர். அவர்கள் எந்த நாட்டிலும் தேசபற்றுடன் வாழக்கூடியவர்கள் என்பதை அவர்களது பழக்க வழக்கங்கள் நிரூபிக்கின்றன”.  

 முஸ்லிம் சகோதரர்கள் இலங்கை தாய் நாட்டுக்காக பல அர்பணிப்புக்களை மேற்கொண்டிருந்தார்கள். இன்ஷா அல்லாஹ் வருங்காலத்திலும் அதே போல் மேற்கொள்வார்கள். 

முஸ்லிம் சகோதரர்களே நாங்கள் இந் நாட்டின் அபிவிருத்திக்கு அதிகளவு பங்களிப்புக்களை செய்துள்ளோம். இன்ஷா அல்லாஹ் வருங் காலத்திலும் அதே போல் மேற்கொள்வோம். மேலும் பௌத்த, இந்து, மற்றும் கிறிஸ்தவ சகோதரர்களுடன் தொடர்ந்தும் நல்லுறவை பேண வேண்டும்.  நாட்டை கட்டியெழுப்புவதில் என்றும் முன்னனியில் திகழ்வோம்.


நன்றி:-  1>Foundation for Advancement of Science
                       Hemmathagama
                    

No comments

Powered by Blogger.