இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கத்தின் அறிவித்தல்
(எம்.எம்.ஏ.ஸமட்)
அதிபர்,ஆசிரியர்களின் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளைத் தீர்க்க கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்திருப்பது பாராட்டக்கூடிய விடயமென இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்; சங்கம் தெரித்துள்ளது. இது குறித்து இலங்கை இஸ்லாமிய ஆசிரியர்; சங்கத் தலைவர் எம். ஆனஸ் தெரிவித்தாவது,
கிழக்கு மாகாணத்தின் புதிய மாகாணக் கல்விப்பணிப்பாளராக ஜனவரியில் கடமையேற்றதும் முதல் மாதத்திலேயே, மாகாண, கல்வி வலய அதிபர், ஆசிரியர்களின் சேவை உறுதிப்படுத்தல் பிரச்சினைகள் மற்றும் தாமதங்களுக்கு துரிதமாகத் தீர்வு கண்ட எம்.ரி.எ.நிஸாம், மார்ச் மாதத்தில் பதவி உயர்வு மற்றும் சம்பள முரண்பாடுகளுக்கும் துரிததீர்வுகாண விரிவான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஆசிரியர் தொழிற்சங்கத்திற்குப் பிரதியிட்டு. கிழக்கு மாகாணத்தின் சகல வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அனுப்பி வைத்துள்;ள கடிதத்தில், ஆசிரிய பணி புனி தமானது, தீர்க்கப்படாத இத்தகைய பிரச்சினைகள் அவர்களது பணியை மலினப் படுத்தும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. எனவே, மன உளைச்சல் அற்ற ஆசி ரியர் சமூகம் ஒன்றை உருவாக்குவதில் தங்களது ஒத்துழைப்பைப் பெரிதும் எதிர் பார்க்கின்றேன் என்று குறிப்பிட்டு, இதற்கு ஏதுவாக, தங்களது வலயத்தில், இது வரைத் தீர்க்கப்படாத அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைகள் மற்றும் முரண்பாடுகள் இருப்பின், அவற்றை 28ஆம் திகதிக்கு முன் பதிஞ்சலில் அறிக்கையிடுமாறு கோரியுள்ளார்.
இந்த அறிக்கைகளின் உள்ளடக்கத்தை முன்வைத்து, வலய பிரதிக் கல்விப்பணிப் பாளர், நிர்வாக உத்தியோகத்தர், பிரதம முகாமை உதவியாளர், மற்றும் விடயத் திற்குப் பொறப்பான முகாமைத்துவ உதவியாளர் முதலானோரால் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் முன்னிலையில் கலந்துரையாடி தீர்வு காணப்படவுள்ளதால், அதிபர், ஆசிரியர்களிடமிருந்து கிடைக்கப்பெறும் மேன்முறையீடுகளை கலந்துரையாடலின் போது சமர்ப்பிக்குமாறும் கேட்டுள்ளார்.
கிழக்கு மாகாண, கல்வி வலய அதிபர், ஆசிரியர்கள், தங்களுக்குள்ள தீர்க்கப்படாத பிரச்சினைகள் தொடர்பில்,உடனடியாக வலயக்கல்விப் பணிப்பாளரின் கவனத்திற்குக் கொண்டு வருவதோடு, அதன் பிரதியை, தலைவர், இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம், 287சலீமா மன்ஸில், ஸம் ஸம்; வீதி,பொத்துவில் என்ற முகவரிக்குத் தபாலிடுமாறு வேண்டுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்
Post a Comment