அஸ்கிரிய பீடாதிபதியிடமிருந்து ஜம்மியத்துல் உலமா சபைக்கு அழைப்பு
பௌத்த உயர்பீடங்களில் ஒன்றான அஸ்கிரிய மகாநாயக்க தேரரை சந்திப்பதற்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை தீர்மானித்துள்ளது.
இதுகுறித்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் செயலாளர் மௌலவி முபாரக் ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு தகவல் தருகையில்,,
அஸ்கிரிய பீடாதிபதியிடமிருந்து அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபைக்கு அழைப்பிதழ் வந்துள்ளது. கண்டி மாவட்ட ஜம்மியத்துல் உலமா சபைக்கு இந்த அழைப்பிதழ் கிடைக்கப்பெற்றுள்ளது. எதிர்வரும் புதன்கிழமை, 27 ஆம் திகதி இருதரப்பினருக்கும் இடையிலான சந்திப்பு நடைபெறும்.
முஸ்லிம்களுக்கு நெருக்கடிகள் மிகுந்த இக்காலகடட்டத்தில் சிங்கள, முஸ்லிம் சமூகங்களின் சமய தலைமைப்பீடங்கள் சந்திப்பதானது, இரு சமூகங்களுக்கும் இடையிலான ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்கு வழியமைக்கலாம். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை இந்தசந்தர்ப்பத்தை ஆரோக்கியமான முறையில் பயன்படுத்திகொள்ளும் என்றார்.
THANGKAL THALAMAI B. B. SENA PONRA INAVAATHIKALIDAM POI VIDUM ENRA ACHCHAM MAGA NAYAKKARKALUKU ETPADDU VIDDATHU POLUM.
ReplyDelete