சிரியாவின் முக்கிய பகுதிகளை கைபற்றியதாக கிளர்ச்சியாளர்கள் அறிவிப்ப
சிரியாவில் அலெப்போ மாவட்டத்தின் முக்கிய நகரை அரசு எதிர்ப்பு படையினர் கைப்பற்றினர். இத்தகவலை அப்பகுதியில் வசிக்கும் குடியிருப்புவாசிகள் மற்றும் கிளர்ச்சியாளர்கள் சனிக்கிழமை தெரிவித்தனர்.
அரசு ராணுவத்தினருடன் 48 மணி நேரம் நீடித்த சண்டையில், அலெப்போ மாவட்டத்தில் உள்ள ஷேக் செட் நகரை, கிளர்ச்சியாளர்கள் தங்கள் முழுக்கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகளில் பெரும்பாலானோர் வேறுபகுதிக்குச் சென்றனர்.
ஷேக் செட் நகரைக் கைப்பற்றியது, அரசு எதிர்ப்புப் படையினருக்கு கிடைத்த வெற்றியாகக் கருதப்படுகிறது. இந்த நகர் வழியாகத்தான் நய்ரப் சர்வதேச விமான நிலையத்துக்குச் செல்ல முடியும் என்று அரசு எதிர்ப்புப் படையின் ஊடக மையம் தெரிவித்துள்ளது.
அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 22 மாதங்களாக நடைபெற்று வரும் சண்டையில் 60 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்ததாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
Post a Comment