Header Ads



ஆபத்துக்கள் என்னை சூழ்ந்துள்ளன, எனது உயிருக்கு ஆபத்து - அமைச்சர் மைத்திரிபால


தமது உயிரிக்கு ஆபத்து இருப்பதாக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தாம் இதனை சுகாதார அமைச்சராகவோ, சுதந்திர கட்சியின் செயலாளராவே இதனைத் தாம் தெரிவிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு எதிரான ஆபத்துகள் தம்மை சூழ்ந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் பாசிக்குடாவில் இடம்பெற்ற அமைச்சரின் மகனுக்கும், பிரதி காவற்துறை மா அதிபரின் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்த ஊடக சந்திப்பு இடம்பெற்றது.

கடந்த 24ம் திகதி பாசிக்குடா பகுதியில் இருந்த பிரதி காவற்துறை மா அதிபரின் மகனது மனைவியை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் புகைப்படம் எடுக்க முற்பட்ட போது, இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றது. இதில் கடுமையாக காயங்களுக்கு உள்ளான பிரதிகாவற்துறை மா அதிபரின் மகன், வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.



No comments

Powered by Blogger.