பூமிக்கு அருகேயுள்ள குறுங்கோளுக்கு விண்கலம் அனுப்ப நாசா திட்டம்
பூமிக்கு அருகேயுள்ள குறுங்கோளுக்கு விண்கலம் அனுப்பி ஆய்வு நடத்த நாசா திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் சந்திரனுக்கு மனிதனை அனுப்பி ஆய்வு மேற்கொண்டது. தற்போது செவ்வாய் கிரகத்துக்கு கியூரியாசிட்டி என்ற ஆய்வக விண்கலத்தை அனுப்பி அங்கு உயிரினங்கள் வாழ முடியுமா? என ஆய்வு செய்து வருகிறது.
இந்த நிலையில், சூரியனை சுற்றி வரும் குறுங்கோள்களில் பூமிக்கு அருகேயுள்ள ஒரு கோளில் ஆய்வு நடத்தவும் திட்டமிட்டுள்ளது. அதில், அரிசோனா பல்கலைக் கழகத்தின் டான்டிலாரேட்டா என்ற அமைப்பு ஈடுபட உள்ளது.
அதற்காக விஷேக ஆய்வக விண்கலம் தயாரிக்கப்படுகிறது. இது வருகிற 2016-ம் ஆண்டு விண்ணில் செலுத்தப்படுகிறது. அது 2 வருட பயணத்துக்கு பின் 2018-ம் ஆண்டு குறுங்கோளை சென்றடைகிறது.
அங்கு 5 ஆண்டுகள் ஆய்வுக்கு பிறகு 2023-ம் ஆண்டு விண்கலம் மீண்டும் பூமிக்கு திரும்புகிறது. ஆய்வின் போது ஆய்வகத்தில் உள்ள ரோபோடிக் கரங்கள் குறுங்கோளின் பூமியை போன்ற மண் மாதிரிகளை சேகரித்து எடுத்து வருகிறது.
அதன் மூலம் சூரிய குடும்பம் குறித்த தகவல்களும், உயிரினங்களின் வாழ்க்கை மற்றும் பரிணாம வளர்ச்சி தோன்றியது குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வில் அமெரிக்காதான் முதலில் ஈடுபடுகிறது. அதை பின் தொடர்ந்து மற்ற நாடுகள் இது குறித்த ஆய்வில் ஈடுபடும்.
Post a Comment